கொரோனா பாதிப்பு எங்கு குழந்தைகளையும் தாக்கிவிடுமோ என்ற அச்சம் பல பெற்றோர்களுக்கு உண்டு. குறிப்பாக மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கலாம் என்ற செய்தி மேலும் பீதியடையச் செய்துள்ளது. இந்நேரத்தில் அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதுதான் பெற்றோர்களாக குழந்தைகளை பாதுகாக்க ஒரே வழி. அந்த வகையில் ஒரு வயது நிரம்பிய உங்கள் குழந்தைக்கு எந்த மாதிரியான உணவு வழங்கலாம் என்று பார்க்கலாம்.
பருப்பு வகைகள் : துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு தினசரி உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இட்லி , தோசைக்கு சாம்பாரில் பருப்பு கூடுதலாக சேர்த்து ஊட்டுங்கள். அதேபோல் பாதாம், முந்திரி, வேர்க்கடலையும் கொடுக்கலாம். வேர்க்கடலையை அதிகம் தர வேண்டாம். செரிமானம் பாதிக்கும். இவற்றில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருப்பு வகையாகக் கொடுங்கள்.