இஞ்சி கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. இது முதல் ட்ரைமெஸ்டரில் வரும் வாந்தி, குமட்டல், அஜீரணம் போன்ற பிரச்னைகளுக்கு உதவும். அதோடு மட்டுமன்றி உடல் வலி, முதுகு வலி, கால் பிடிப்பு என கர்ப்ப காலத்தில் இருக்கும் இந்த அறிகுறிகளுக்கும் இஞ்சி நல்லது என இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் மகப்பேறு மருத்துவர் பந்திதா சின்ஹா கூறியுள்ளார்.
கர்ப்ப காலத்தில் இஞ்சி சாப்பிடுவது கரு கலைந்துவிடும் என்ற சந்தேகம் இருப்பது முற்றிலும் தேவையற்றது. அது வெறும் கட்டுக்கதை.. அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்கிறார் மருத்துவர். இஞ்சி சாப்பிட நினைக்கும் கர்ப்பிணிகள் அதன் அளவில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதும். அதிக அளவில் சாப்பிடாமல் மிகச்சிறிய துண்டாக அதாவது ஒரு நாளைக்கு 5 ml உட்கொண்டால் போதுமானது என்கிறார். உணவிலும் அதிகமாக சேர்த்துக்கொள்ளாமல் இந்த அளவில் கவனமாக இருங்கள் என்கிறார்.