குழந்தைகள் இயல்பாகவே கள்ளம் கபடமற்றவர்கள். கண்ணாடியை போன்றவர்கள். அவர்கள் மற்றவர்களிடம் பார்க்கும் மற்றும் கேட்கும் விஷயங்களை அப்படியே பிரதிபலிப்பவர். எனவே, அவர்கள் முன் நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக செய்ய வேண்டும். அந்தவகையில், குழந்தைகள் முன் பெற்றோர்கள் செய்யக்கூடாத விஷயங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
குழந்தையின் முன் மது / புகையிலை பழக்கம் : உங்கள் குழந்தைகளின் முன் மது அருந்துவது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை செய்ய வேண்டாம். ஏனென்றால், நமது குழந்தைகள் பல விஷயங்களை நம்மை பார்த்து கற்றுக்கொள்வார்கள். அதுமட்டும் அல்ல, நாம் தந்தை செய்யும் பழக்கம் சரி தான் என நம்ப நேரிடும். எனவே, குழந்தைகளின் முன் தீய பழக்கங்களில் ஈடுபட வேண்டாம்.
மற்றவர்களுடன் ஒப்பிடுதல் : மற்றவர் முன் உங்கள் குழந்தைகளையோ அல்லது மற்றவர் பற்றி உங்கள் குழந்தைகளின் முன் ஒப்பிட்டு பேசுவது தவறான விஷயம். இவ்வாறு செய்வது அவர்களை மனதளவில் பாதிப்புக்கு உள்ளாக்கும். எனவே, உங்கள் குழந்தைகள் முன் அவன் அப்படி.. இவன் இப்படி என ஒப்பிட வேண்டாம். இது, குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.