தங்கள் பிள்ளைகளிடம் அன்பு காட்டி வளர்க்கவும், தேவையான சமயங்களில் கண்டிப்பு காட்டவும் பெற்றோர்கள் தயங்குவதில்லை. குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது வேடிக்கையாகவோ சில சமயம் பெற்றோர் செய்கின்ற வேலைகள் அவர்களுடைய மன நலனை பாதிப்பதாக அமைகிறது. நல்ல பண்பும், குணமும் நிறைந்த குழந்தைகளை வளர்த்தெடுப்பது பெற்றோரின் கடமை தான் என்றாலும் கூட, சில நடவடிக்கைகளை அவர்கள் கைவிட்டாக வேண்டும். அதுகுறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
பட்டப்பெயர் சொல்லி அழைக்கக் கூடாது : தங்கள் குழந்தைகளை செல்லமாக அழைக்கிறேன் என்ற பெயரில் ஏதேனும் பட்டப்பெயர் வைத்து அழைப்பது பல பெற்றோரின் வாடிக்கையாக இருக்கிறது. சில சமயம் குழந்தைகளின் தாத்தா, பாட்டி இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். இதுபோன்ற பழக்கத்தை தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் பிள்ளைகளின் உண்மையான பெயர் மறைந்து, இந்த பட்டப் பெயரை நிலைத்து நிற்கும்.
ஆசிரியர்களை திட்டக்கூடாது : குழந்தைகள் எப்போதும் ஆசிரியர்கள் மீது மரியாதை கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஆனால், அதே குழந்தைகள் படிக்கவில்லை என்பதற்காக வீட்டில் ஆசிரியர்களை திட்டும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது. அதை பார்த்து கற்றுக் கொள்ளும் குழந்தைகள் மறுநாள் ஆசிரியர்களை அவமதிக்க வாய்ப்பு உண்டு. ஆகவே இதை தவிர்க்க வேண்டும்.