ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குழந்தைகளின் நம்பிக்கையை அதிகரிக்க இந்த வார்த்தைகளை அடிக்கடி கூறுங்கள்..!

குழந்தைகளின் நம்பிக்கையை அதிகரிக்க இந்த வார்த்தைகளை அடிக்கடி கூறுங்கள்..!

எந்தவொரு முயற்சியையும் சாதாரணமாக கருதாமல், அதில் முடிந்தவரை மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற சிந்தனையை குழந்தைகள் மத்தியில் வளர்க்க வேண்டும்.

 • 19

  குழந்தைகளின் நம்பிக்கையை அதிகரிக்க இந்த வார்த்தைகளை அடிக்கடி கூறுங்கள்..!

  உங்கள் குழந்தைகளை நீங்கள் எப்படி வளர்த்தெடுக்கிறீர்களோ, அதைப் பொறுத்துதான் அவர்களது நம்பிக்கை அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. குறிப்பாக, குழந்தைகளிடம் பேசும்போது எப்போதுமே எதிர்மறை கருத்துக்களை குறைத்து கொண்டு நேர்மறையான கருத்துக்களுடன் பேச வேண்டும். நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை உன்னிப்பாக கவனிக்கும் பிஞ்சு மனங்களில் உங்கள் வார்த்தைகள் ஆழமாக பதியும். ஆகவே, உங்கள் வார்த்தைகள் மதிப்பு மிகுந்தவையாக இருக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 29

  குழந்தைகளின் நம்பிக்கையை அதிகரிக்க இந்த வார்த்தைகளை அடிக்கடி கூறுங்கள்..!

  குழந்தையை நம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி? குழந்தை வளர்ப்பு என்பது வெகு இயல்பானதாக இருக்க வேண்டும். குழந்தையிடம் ஒரு நண்பரை போல, ஒரு தோழியை போல பெற்றோர் பழகும் பட்சத்தில் குழந்தைகளின் நம்பிக்கை அதிகரிக்கும். எந்த சூழ்நிலையிலும், எப்போதுமே நீங்கள் குழந்தையின் பக்கம் நிற்பீர்கள் என்ற நம்பிக்கையை அவர்களின் மனதில் ஏற்படுத்த வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 39

  குழந்தைகளின் நம்பிக்கையை அதிகரிக்க இந்த வார்த்தைகளை அடிக்கடி கூறுங்கள்..!

  என்னை பார்த்து செய்.. குழந்தைக்கு எப்போதுமே தந்தையும், தாயும் தான் முதல் வழிகாட்டி. உலகில் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் தான் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். நீங்கள் செய்து காண்பிப்பதை அப்படியே பின்பற்றுமாறு குழந்தைகளிடம் அறிவுறுத்தலாம்.

  MORE
  GALLERIES

 • 49

  குழந்தைகளின் நம்பிக்கையை அதிகரிக்க இந்த வார்த்தைகளை அடிக்கடி கூறுங்கள்..!

  உன்னால் பெருமை அடைகிறேன்.. குழந்தைகளிடம் நற்பண்புகள் வெளிப்படுகின்ற போது, அவர்கள் திறமையை வெளிக்காட்டும்போது அவர்களை பாராட்ட தவறாதீர்கள். குறிப்பாக உன்னால் நான் பெருமை அடைகிறேன் என்ற வார்த்தையை மீண்டும், மீண்டும் உணர்த்துவதற்கு தவற கூடாது. இதை கேட்கின்ற குழந்தையிடம் பொறுப்புணர்ச்சி வளரும்.

  MORE
  GALLERIES

 • 59

  குழந்தைகளின் நம்பிக்கையை அதிகரிக்க இந்த வார்த்தைகளை அடிக்கடி கூறுங்கள்..!

  பயம் வேண்டாம்.. ஏதேனும் புதுப்புது விஷயங்களை பார்க்கின்ற குழந்தைகள் பயம் கொள்வது இயல்பானது தான். ஆனால், பயம் களைந்து உண்மையை நோக்குகின்ற போது அவை அற்புதமானதாக இருக்கும் என்று குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும். இதனால், நம்பிக்கை அதிகரிக்கும் குழந்தைகள் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும்.

  MORE
  GALLERIES

 • 69

  குழந்தைகளின் நம்பிக்கையை அதிகரிக்க இந்த வார்த்தைகளை அடிக்கடி கூறுங்கள்..!

  கவலை வேண்டாம்.. சின்ன, சின்ன தோல்விகளை கண்டு குழந்தைகள் மனம் உடைந்து போகின்றபோது, கவலை வேண்டாம் , இதெல்லாம் சாதாரண விஷயம் என்று குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும். குறிப்பாக வெற்றிக்கான வாய்ப்பு உன்னை மீண்டும் தேடி வரும் என்று குழந்தைகளிடம் கூற வேண்டும். இது அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

  MORE
  GALLERIES

 • 79

  குழந்தைகளின் நம்பிக்கையை அதிகரிக்க இந்த வார்த்தைகளை அடிக்கடி கூறுங்கள்..!

  உன் மன உறுதியை பாராட்டுகிறேன்.. சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளின் மனதில் மிகுந்த உறுதியும், இலக்கு நோக்கிய சிந்தனையும் இருப்பது பாராட்டுக்குரியது. அவ்வாறு இருப்பின் அதை நீங்கள் அங்கீகரிப்பதாகக் கூறி குழந்தையை ஊக்கப்படுத்துங்கள். இது வெற்றிகளை நோக்கி பயணிக்க குழந்தைகளை ஊக்குவிப்பதாக அமையும்.

  MORE
  GALLERIES

 • 89

  குழந்தைகளின் நம்பிக்கையை அதிகரிக்க இந்த வார்த்தைகளை அடிக்கடி கூறுங்கள்..!

  சிறப்பாக செயல்படு.. எந்தவொரு முயற்சியையும் சாதாரணமாக கருதாமல், அதில் முடிந்தவரை மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற சிந்தனையை குழந்தைகள் மத்தியில் வளர்க்க வேண்டும். அவ்வாறு சிறப்பான செயலை குழந்தைகள் செய்யும்போது அவற்றை பாராட்டுவதற்கு தயங்க கூடாது.

  MORE
  GALLERIES

 • 99

  குழந்தைகளின் நம்பிக்கையை அதிகரிக்க இந்த வார்த்தைகளை அடிக்கடி கூறுங்கள்..!

  பழகுவதற்கு இனிமையான நபர்.. உன்னிடம் பழகுவதற்கு நிறைய நபர்கள் விரும்புவார்கள். அந்த அளவுக்கு கனிவும், அன்பும் நிறைந்தவராக நீ இருக்கிறாய் என்று குழந்தைகளிடம் சொல்லவும். இந்த பழக்கத்தை ஊக்குவிக்கும்போது சக மனிதர்களை மதித்து நடக்கும் குணாதிசயம் குழந்தைகளிடம் வளரும்.

  MORE
  GALLERIES