இன்றைக்கு உள்ள குழந்தைகள் பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்துக்கொள்கிறார்களா என்றால், நிச்சயம் கிடையாது. மார்டன் கலாச்சாரம் என்கிற பெயரில் , பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு மரியாதை என்ற விஷயத்தைக் கற்றுக்கொடுக்க மறந்துவிடுகிறார்கள். ஒவ்வொரு பெற்றோர்களும் நாம் எப்படி வளர்ந்தோம் என்பதை நினைவில் வைத்திருந்தாலே அதுப்போன்ற ஒவ்வொருவரும் குழந்தைகளை வளர்த்திருக்க முடியும். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதை மட்டும் செய்ய மறந்துவிடாதீர்கள். இனியும் பெற்றோர்களாகிய நீங்கள் இதுப்போன்று இருந்துவிடாதீர்கள். உங்களை குழந்தைகளுக்கு சமூகத்தில் மதிப்பு மற்றும் மரியாதை கிடைக்க வேண்டும் என்றால், இந்த விஷயங்களை மறக்காமல் நீங்கள் பாலோ பண்ணினாலே போதும்..இதோ என்னென்ன அறிந்துக்கொள்ளுங்கள்.“
மரியாதைக்குரியதாக குழந்தையை வளர்த்தல்: பெற்றோர்களாகிய உங்களை மட்டுமில்லை, மற்றவர்களையும் மதிப்புடன் உங்களது குழந்தைகள் நடத்த வேண்டும் என்றால், அவர்களுக்கு மரியாதை என்பதைக் கற்றுக்கொடுங்கள். ஏதாவது ஒரு விஷயம் அவர்களுக்கு செய்தால், நன்றி என்ற வார்த்தையை சொல்ல வேண்டும் என்று கற்றுக்கொடுக்கவும். மேலும் மரியாதை என்பது அவர்களின் செயல்களில் மட்டுமில்லை, மற்றவர்களைப் பார்க்கும் விதத்திலும் உள்ளது என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும். யாராக இருந்தாலும் வீட்டிற்கு வந்தவர்களைப் பார்த்து சிரிக்கவும் மற்றும் வாருங்கள் என்று சொல்லக் கற்றுக்கொடுக்கவும்.
குழந்தைகளுக்கு உறவின் தன்மையை வெளிப்படுத்துதல்: ஒவ்வொரு பெற்றோர்களும் குழந்தைகளிடம் நண்பர்களாக இருக்க வேண்டும் என்ற ஆசை அதிகளவில் இருக்கும். அதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் சிறு வயதில் அவர்கள் ஏதாவது தவறுகள் செய்தால் அந்நேரத்திலும் அவர்களுக்கு நண்பர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறான ஒன்று. தவறுகளைத் தட்டிக் கேட்கவும், எது சிறந்தது? என அறிந்துக்கொள்வதற்கு ஏற்ற வகையில் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். தவறு செய்தால் தண்டிக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவும். இதுப்போன்று நீங்கள் உங்களது குழந்தைகளை வளர்க்கும் போது, மரியாதை ஏற்படும். மேலும் வளர வளர உங்களது நட்பு வலுப்படும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவும்.
மரியாதையுடன் குழந்தைகளைத் திருத்துதல் : உங்களது குழந்தை அவமரியாதையாக இருப்பதை நீங்கள் கண்டால், அவர்களிடம் உங்களது குரலை உயர்த்தி திட்டாதீர்கள். அவர்களை சரிசெய்ய வேண்டும் என்று நினைத்தால், அவர்களிடம் மரியாதையுடன் நடந்துக்கொள்ளுங்கள். பெற்றோர்களைப் பார்த்து தான் குழந்தைகள் வளர்கிறார்கள் என்பதால், நிச்சயம் கெட்ட விஷயங்களை மாற்ற வழியாக இது அமையும். இதை விட்டு விட்டு தேவையில்லாமல் திருத்துகிறோம் என ஆத்திரத்தில் கத்திக் கூச்சலிடுவதால் எந்த பலனும் இல்லை. இது மேலும் உங்களது குழந்தைகளை மோசமாக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் எது சரி மற்றும் எது தவறு என்பதைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். இதற்கான நேரத்தை அவர்களுக்காக நீங்கள் ஒதுக்க வேண்டும். உங்களது குழந்தைகளுக்கு யாராவது உதவி செய்திருந்தால் நன்றி எனச் சொல்வதற்குக் கற்றுக்கொடுத்தல் மற்றும் ஏதாவது தவறு செய்தால் எந்த ஈகோவும் இல்லாமல் மன்னித்துவிடுங்கள் என்று சொல்வதற்குக் கற்றுக்கொடுங்கள். இச்செயல் அவர்களை மற்றவர்களிடமிருந்து பிரிந்துக்காட்டுவதோடு மரியாதையுடன் நடத்தும்.