வாய் திறந்து பேசத் தெரியாத நிலையில், தகவல் தொடர்பு கருவியாகவும் இதை பல குழந்தைகள் பயன்படுத்துகின்றன. சில சமயம், தொலைக்காட்சிகளில் வரும் கேரக்டரை பிரதிபலிக்கும் விதமாகவும் குழந்தைகள் இப்படி நடந்து கொள்கின்றன. காரணம் எதுவாக இருந்தாலும், இது ஆரோக்கியமற்ற பழக்க, வழக்கம் என்ற நிலையில், குழந்தைகளின் கவனத்தை அதில் இருந்து திசை திருப்பியாக வேண்டும்.
கோபம் தணியும் வரை மற்றவர்களிடம் இருந்து விலக்கவும் : உங்கள் குழந்தை பிறரை அடிக்கத் தொடங்கும் போது மற்றவர்களிடம் இருந்து அவர்களை விலக்கி, விலக்கி இருக்கச் செய்யுங்கள். குழந்தைகளின் கைகளை மெதுவாக இழுத்து, அவர்களது கோபம் தனியும் வரை கைகளை மடக்கி பிடித்துக் கொள்ளுங்கள். அவர்கள் அமைதியானவுடன் அன்போடு அரவணைத்துக் கொள்ளுங்கள். குழந்தை சாந்தமானவுடன், மன ரீதியாக அவர்களுக்கு ஆலோசனை கொடுக்கத் தொடங்கவும். பிறரை அடிப்பது தவறு, அது எந்த அளவுக்கு பிறரை பாதிக்கும் என்பதை அன்போடு எடுத்துக் கூறுங்கள். பிறர் மீது எப்போதும் அன்பு செலுத்த வேண்டும் என்பதை புரிய வையுங்கள்.
குழந்தையை எப்போதும் கண்காணிப்பில் வைத்திருக்கவும் : எந்த காரணத்தால் குழந்தை பிறரை அடிக்கத் தொடங்குகிறது என்பது பெற்றோருக்கு நன்றாகவே தெரியும். சில குழந்தைகள் வீட்டில் புதிதாக ஒருவரை பார்க்கும் போது அடிக்கத் தொடங்குகிறது. சில சமயம், பெற்றோர் குழந்தைகளை கவனிக்காமல் வேறு வேலைகளை செய்து கொண்டிருக்குமோது கோபம் கொள்ளும் குழந்தைகள் உடனடியாக அவர்களை அடிக்கத் தொடங்குகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குழந்தை கை ஓங்குவதற்கு முன்பாகவே நீங்கள் அவர்களை தடுத்துவிட வேண்டும்.
அன்பு காட்டுவதுடன், எல்லையை நிர்ணயம் செய்யவும் : குழந்தையை அமைப்படுத்தி, அதனுடன் பேச்சு கொடுங்கள், நீங்கள் எந்த அளவுக்கு அதன் மீது அன்பு வைத்துள்ளீர்கள் என்பதை புரிய வையுங்கள். எல்லோருக்கும் குழந்தைகளை பிடிக்கும் என்றும், ஆனால், குழந்தைகள் மன அமைதியுடன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு புரிய வைக்கவும்.