முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உங்கள் குழந்தைகளை எப்போதும் மகிழ்ச்சியானவர்களாக வளர்க்க விரும்புகிறீர்களா..? உங்களுக்கான டிப்ஸ்..!

உங்கள் குழந்தைகளை எப்போதும் மகிழ்ச்சியானவர்களாக வளர்க்க விரும்புகிறீர்களா..? உங்களுக்கான டிப்ஸ்..!

குழந்தைகளை எப்போதும் மகிழ்ச்சியாக வளர்ப்பது என்பது பெற்றோருக்கு அவ்வளவு எளிதானது அல்ல. இதற்கு பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் சரியான பேரன்டிங் டெக்னிக்ஸ் தேவை.

  • 19

    உங்கள் குழந்தைகளை எப்போதும் மகிழ்ச்சியானவர்களாக வளர்க்க விரும்புகிறீர்களா..? உங்களுக்கான டிப்ஸ்..!

    ஒவ்வொரு பெற்றோருக்கும் வாழ்க்கையில் மிகவும் சவாலான அனுபவங்களில் ஒன்றாக இருப்பது குழந்தை வளர்ப்புதான். அனைத்து பெற்றோரும் தங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாக மற்றும் நன்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ள கூடியவர்களாக வளர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 29

    உங்கள் குழந்தைகளை எப்போதும் மகிழ்ச்சியானவர்களாக வளர்க்க விரும்புகிறீர்களா..? உங்களுக்கான டிப்ஸ்..!

    இருப்பினும் குழந்தைகளை எப்போதும் மகிழ்ச்சியாக வளர்ப்பது என்பது பெற்றோருக்கு அவ்வளவு எளிதானது அல்ல. இதற்கு பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் சரியான பேரன்டிங் டெக்னிக்ஸ் தேவை. தொழில்நுட்பமும், கவனச்சிதறல்களும் பெருகிவிட்ட இன்றைய உலகில், ஒருவர் சிறந்த பெற்றோராக இருப்பது முன்னெப்போதையும் விட முக்கியமானது.

    MORE
    GALLERIES

  • 39

    உங்கள் குழந்தைகளை எப்போதும் மகிழ்ச்சியானவர்களாக வளர்க்க விரும்புகிறீர்களா..? உங்களுக்கான டிப்ஸ்..!

    வலுவான உறவுகளை உருவாக்குவது, குழந்தைகளின் சுயமரியாதையை வளர்ப்பது மற்றும் ஆரோக்கியமான நடத்தைகளை ஊக்குவிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவதால் பாசிட்டிவ் பேரன்டிங் டெக்னிக்ஸ் பிரபலமாகி வருகின்றன. பெற்றோருக்குரிய இந்த அணுகுமுறை குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்க்கையில் நேர்மறை கண்ணோட்டத்தை வளர்க்க, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அவர்களே சமாளிக்க மற்றும் மற்றவர்களுடன் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்க உதவுகின்றன.

    MORE
    GALLERIES

  • 49

    உங்கள் குழந்தைகளை எப்போதும் மகிழ்ச்சியானவர்களாக வளர்க்க விரும்புகிறீர்களா..? உங்களுக்கான டிப்ஸ்..!

    மகிழ்ச்சியான மற்றும் நம்பிக்கையான குழந்தைகளை வளர்க்க ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ள நுட்பங்கள் இங்கே..

    MORE
    GALLERIES

  • 59

    உங்கள் குழந்தைகளை எப்போதும் மகிழ்ச்சியானவர்களாக வளர்க்க விரும்புகிறீர்களா..? உங்களுக்கான டிப்ஸ்..!

    ஒரு மனிதனாக அன்றாடச் சிக்கலில் சிக்கி கொள்வதும், அதனால் நிகழ்காலத்தை நினைக்காமல் கவலைகளில் சிக்கி கொள்வதும் சகஜம். ஆனால் உங்கள் குழந்தையை வளர்க்கும் போது முழு ஈடுபாட்டுடன் இருப்பது மகிழ்ச்சியான குழந்தையை வளர்க்க ஒரு பெற்றோர் செய்ய கூடிய மிக முக்கிய விஷயங்களில் ஒன்றாகும். விளையாட்டாக இருந்தாலும் சரி, புத்தகம் படிப்பதாக இருந்தாலும் சரி அல்லது அவர்களின் நாள் எப்படி சென்றது என்பதை பற்றி கேட்பதாக இருந்தாலும் சரி, உங்கள் குழந்தையுடன் செலவிடும் நேரத்தில் அவர்களின் மீது உங்கள் முழு கவனத்தையும் செலுத்துவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். ஃபோன், டிவி-யை ஒதுக்கி விட்டு அவர்கள் மீது உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.

    MORE
    GALLERIES

  • 69

    உங்கள் குழந்தைகளை எப்போதும் மகிழ்ச்சியானவர்களாக வளர்க்க விரும்புகிறீர்களா..? உங்களுக்கான டிப்ஸ்..!

    ஒரு குழந்தையின் நடத்தையை மேம்படுத்துவதற்கான எளிய வழிகளில் ஒன்று பெற்றோர்கள் எப்போதும் சீரான தன்மையுடன் (Consistency) இருக்க வேண்டும். பேரன்டிங் டெக்னிக்ஸ்களில் Consistency என்பது, உங்கள் எதிர்பார்ப்புகள், எதிர்வினைகள் மற்றும் செயல்களில் நீங்கள் குழந்தைகளால் எளிதில் யூகிக்க கூடியவர்களாக இருப்பது ஆகும். தங்களது பெற்றோரிடம் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை குழந்தைகள் அறிவது அவர்கள் பாதுகாப்பாக உணர்வில் வளர உதவும். குழந்தைகளிடம் உங்களை பற்றிய தெளிவான எதிர்பார்ப்புகள் மற்றும் எல்லைகளை அமைப்பதும் இதில் அடக்கம்.

    MORE
    GALLERIES

  • 79

    உங்கள் குழந்தைகளை எப்போதும் மகிழ்ச்சியானவர்களாக வளர்க்க விரும்புகிறீர்களா..? உங்களுக்கான டிப்ஸ்..!

    பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் நல்ல நடத்தையை ஊக்குவிக்கும் முயற்சியின் போது பரிசுகளில் அதிக கவனம் செலுத்துவதை பார்க்க முடிகிறது. இது தவறான ஒன்றாகும், ஏனென்றால் வெகுமதி என்ற ட்ரிக்கை பயன்படுத்துவது உண்மையில் குழந்தையிடம் இருக்கும் இயல்பான மோட்டிவேஷன் மற்றும் சுயமரியாதையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். . மாறாக உங்கள் குழந்தையின் முயற்சி மற்றும் சாதனைகளை வார்த்தைகளால் பாராட்டுவதில் கவனம் செலுத்துங்கள். அவர்களின் செயல்களின் உள்ளார்ந்த மதிப்பைக் காண இது அவர்களுக்கு உதவும்.

    MORE
    GALLERIES

  • 89

    உங்கள் குழந்தைகளை எப்போதும் மகிழ்ச்சியானவர்களாக வளர்க்க விரும்புகிறீர்களா..? உங்களுக்கான டிப்ஸ்..!

    ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தையுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள், மேலும் அவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த அவர்களை ஊக்குவிக்கவும். இந்த பழக்கம் குழந்தையுடனான உங்கள் பிணைப்பை வலுப்படுத்தவும் உதவும்.

    MORE
    GALLERIES

  • 99

    உங்கள் குழந்தைகளை எப்போதும் மகிழ்ச்சியானவர்களாக வளர்க்க விரும்புகிறீர்களா..? உங்களுக்கான டிப்ஸ்..!

    மற்றொருவருடைய உணர்ச்சிப் போக்கை ஊகித்துணர்ந்து அவரது மனப்பாங்கை அறியும் திறன் Empathy எனப்படுகிறது. உங்கள் குழந்தையின் ஃபீலிங்க்ஸ்களுக்கு நீங்கள் Empathy-யை வெளிப்படுத்தும் போது, நீங்கள் அவர்களின் உணர்ச்சிகளைப் பற்றி அக்கறை காட்டுகிறீர்கள் என்பதையும், அவர்களுக்கு ஆதரவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறீர்கள். எனவே உங்கள் குழந்தையின் உணர்வுகளை அங்கீகரித்து அவர்களுக்குத் தேவைப்படும் போது ஆதரவு மற்றும் ஆறுதலை வழங்குவது அவர்களுக்கு அன்பான சூழலில் வளரும் வாய்ப்பை உருவாக்குகிறது.

    MORE
    GALLERIES