எனவே இது குறித்து பிபிசி இங்கிலாந்து செய்தி தளத்திற்கு சமூக அறிவுரையாளர் லிஸ் ப்ரூவர் பேசுகையில் “ மகள் அல்லது மகனுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது என்பது இயல்பான விஷயம்தான். அது பெற்றோர்களின் சாய்ஸ். அது சரியா, தவறா என்பதை அவர்கள் முடிவு செய்வது. பல கலாச்சாரங்களில் உதட்டில் முத்தமிடுவது என்பது செக்ஸுவலான செயலாக பார்ப்பது கிடையாது. அதுவும் அன்பை வெளிப்படுத்தும் ஒரு வகைதான் “ என்று கூறியுள்ளார்.
ஆராய்ச்சிகளிலும் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் உள்ள நெருக்கம் அவர்களின் உறவை பலப்படுத்தும் என்றே கூறுகின்றனர். அது கட்டியணைப்பது, முத்தம் கொடுப்பது என எந்த வழிகளில் இருந்தாலும் அந்த உறவின் பாசிடிவான செயலாகவே கருத்தப்படுகிறது. அதோடு அந்த பிள்ளைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் உதவும் என்கின்றனர்.
இது குறித்து மன நல மருத்துவர் கார்லெட் ரெஸ்னிக் நியூஸ் ஆஸ்திரேலியாவுக்கு அளித்த பேட்டியில் “ உதடு மற்றும் வாய் என்பது அவர்களின் தனிப்பட்ட எல்லைகளின் வரையறை. எனவே பெற்றோர்களே அதற்கு தடையாக இருந்தால் யார் வேண்டுமென்றாலும் அவர்களுடைய தனிப்பட்டை எல்லைகளுக்குள் நுழையலாம் என்னும் தவறான கற்பிதத்தை அளிப்பதாக உள்ளது. அதோடு குழந்தைகளுக்கு ’நோ’ சொல்லவும் தெரியாது” என்று கூறியுள்ளார்.
டாக்டர் ரெஸ்னிக், (கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உளவியல் இணை மருத்துவ பேராசிரியர்) நீங்கள் உங்கள் குழந்தைக்கு முத்தமிடுவதால் அவர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறீர்கள். குறிப்பாக வளரும்போது அது அவர்களுக்கு மனக்குழப்பத்தை உண்டாக்கும். நீங்கள் உங்கள் குழந்தைக்கு உதட்டில் முத்தம் கொடுக்க தொடங்குகிறீர்கள் எனில் எந்த வயதில் நிறுத்துவீர்கள்..? அப்படி நீங்கள் திடீரென நிறுத்தினால் அந்த குழந்தை அதை எப்படி எடுத்துக்கொள்ளும். உதட்டில் முத்தம் கொடுப்பது தவறான செயல் இல்லை என்றாலும் ஒருவரின் அனுமதியின்றி எல்லை மீறுவதாகாதா..? என்று கேள்வி எழுப்புகிறார்.