இன்றைக்கு பெரும்பாலான தாய்மார்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று குழந்தைகளை எப்படி ஆரோக்கியமாக வளர்ப்பது என்பது தான்? அதுவும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இருந்தால் அவர்களின் மூளை செயல்திறன் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்ற வகையில் என்னென்ன உணவுகளை சமைக்கலாம்? என்பது குறித்த பல கேள்விகள் மனதில் நிச்சயம் எழக்கூடும். இதுப்போன்ற மனநிலையில் உள்ள பெற்றோர்களாக நீங்கள்? கவலை வேண்டாம்.. இதோ குழந்தைகளுக்கு என்னென்ன ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்கலாம்? என்பது பற்றி விரிவாக இங்கே அறிந்துக்கொள்வோம்.
கீரை : குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவியாக உள்ள கீரையை வாரத்திற்கு 4 முறை கூட நீங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அரைகீரை,சிறுகீரை, பொன்னாங்கன்னி, வல்லாரை, முருங்கை போன்ற பல வகையான கீரைகளைக் கொடுக்கும் போது குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்கின்றனர். இதில் அதிக அளவு வைட்டமின் சி, வைட்டமின் கே, போலிக் அமிலம், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
காலே கீரை : பச்சை இலைக்காய்கறிகளில் ஒன்றாக காலே கீரையில் வைட்டமின் ஏ, கே, பி6 மற்றும் சி, கால்சியம் பொட்டாசியம், தாமிரம் மற்றும் மாங்கனீஸ் ஆகியவை உள்ளன. எனவே இது உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. எனவே குழந்தைகளுக்கு ஆரோக்கியம் கிடைக்க இதை மறக்காமல் நீங்கள் கொடுக்கலாம்.
காலிஃபிளவர் : குழந்தைகளுக்குப் பிடித்த காய்கறிகளில் ஒன்று தான் காலிஃபிளவர். இதில் உள்ள மாவுச்சத்து, உயிர்ச்சத்து, கால்சியம், சோடியம், உடலுக்குத்தேவையான கொழுப்பு சத்துக்கள் உள்ளதால் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். அதிலும் இதில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்துகள் அதிகம் உள்ளதால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தாராளமாக சாப்பிடலாம்.