முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » குழந்தை வளர்ப்பின்போது செலவுகளை குறைத்துக் கொள்வது எப்படி?

குழந்தை வளர்ப்பின்போது செலவுகளை குறைத்துக் கொள்வது எப்படி?

குழந்தைகளுக்காக தாத்தா, பாட்டி, மாமா, அத்தை என்று நெருங்கிய உறவினர்களும், உங்கள் நண்பர்களும் கொடுக்கின்ற பரிசுப் பொருட்களை சேமித்து வைத்து தேவையான சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளவும்.

  • 17

    குழந்தை வளர்ப்பின்போது செலவுகளை குறைத்துக் கொள்வது எப்படி?

    குழந்தைகள் சிறியவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கான செலவுகளோ பெரியதாகவே இருக்கிறது. ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுத்து ஆரோக்கியமான முறையில் வளர்ப்பது தொடங்கி, அவர்களுக்கு தேவையான ஆடைகள், சுகாதாரப் பொருட்கள் என செலவுகள் அணிவகுத்து நிற்கும். அதே சமயம், குழந்தைகளுக்கான செலவுகளை முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியாது. இருப்பினும் செலவுகளை திட்டமிட்டு செய்தால் கொஞ்சம் பணத்தை சேமிக்கலாம். அதற்கு கீழ்காணும் யோசனைகள் உதவிகரமாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 27

    குழந்தை வளர்ப்பின்போது செலவுகளை குறைத்துக் கொள்வது எப்படி?

    முன்கூட்டியே பட்ஜெட் ஒதுக்கவும்: கர்ப்ப காலத்தின்போது மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக செல்லும் சமயத்திலேயே, அடுத்து பிரசவத்திற்கு எவ்வளவு செலவாகும், அதைத்தொடர்ந்து என்னென்ன செலவுகள் இருக்கும் என்பதை முன்கூட்டியே யூகித்து அதற்கான பணத்தை சேமித்து வைக்க வேண்டும். ஆடைகள், மருந்துகள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களுக்கு ஏற்படும் செலவுகளை கவனிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 37

    குழந்தை வளர்ப்பின்போது செலவுகளை குறைத்துக் கொள்வது எப்படி?

    தேவையானதை மட்டும் வாங்கவும் : உங்கள் செல்லக் குழந்தை பிறந்தவுடன் அவர்களுக்காக ஆடைகளை வாங்குவதற்கு நீங்கள் கடைக்குச் செல்லும்போது, பார்க்கும் ஒவ்வொன்றும் உங்கள் குழந்தைக்கு பொருத்தமானதாக தோன்றும். ஒன்றன் பின் ஒன்றாக நிறைய ஆடைகளை வாங்க தோன்றும். ஆனால், உங்கள் குட்டிக் குழந்தை வளர்ந்து கொண்டே போகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே, தேவையான ஆடைகளை மட்டும் வாங்கிக் கொள்ளவும்.

    MORE
    GALLERIES

  • 47

    குழந்தை வளர்ப்பின்போது செலவுகளை குறைத்துக் கொள்வது எப்படி?

    லாயல்டி பாயிண்ட்ஸ் : நீங்கள் எந்தபொருள் வாங்கினாலும் டிஸ்கவுண்ட், லாயல்டி பாயிண்ட்ஸ், கேஷ்பேக், ரிவார்ட் பாயிண்ட்ஸ் போன்ற சலுகைகளை வழங்குகின்ற கடைகளை தேர்வு செய்யவும். குறிப்பாக பண்டிகைக்கால ஆஃபர்கள் மற்றும் குழந்தைகளின் பிறந்தநாளுக்காக வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். கிரெடிட் கார்டுகளில் பொருள் வாங்குவதை தவிர்க்கவும்.

    MORE
    GALLERIES

  • 57

    குழந்தை வளர்ப்பின்போது செலவுகளை குறைத்துக் கொள்வது எப்படி?

    அவசர நிதி சேமிப்பு : குழந்தைகளுக்கு எப்போது உடல்நிலை சரியில்லாமல் போகும் என்று நாம் கணிக்க முடியாது. அதேபோல வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளையும் செய்ய வேண்டியிருக்கும். ஆகவே, முன்கூட்டியே பணத்தை இதற்கென ஒதுக்கி வைக்கவும். வேறு எந்த காரணத்திற்காகவும் இந்தப் பணத்தை கை வைக்க கூடாது என்று உறுதியுடன் இருக்கவும்.

    MORE
    GALLERIES

  • 67

    குழந்தை வளர்ப்பின்போது செலவுகளை குறைத்துக் கொள்வது எப்படி?

    குழந்தைகளுக்காக தாத்தா, பாட்டி, மாமா, அத்தை என்று நெருங்கிய உறவினர்களும், உங்கள் நண்பர்களும் கொடுக்கின்ற பரிசுப் பொருட்களை சேமித்து வைத்து தேவையான சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளவும். அதேபோல அவர்கள் கொடுக்கும் பணத்தையும் குழந்தைகளின் நலனுக்காக மட்டும் செலவிடவும்.

    MORE
    GALLERIES

  • 77

    குழந்தை வளர்ப்பின்போது செலவுகளை குறைத்துக் கொள்வது எப்படி?

    மின்னுவதெல்லாம் பொன்னல்ல : சூப்பர்மார்க்கெட் சென்றால் அல்லது ஆன்லைன் ஷாப்பிங் தளம் சென்றால், குழந்தைகளுக்கு என்று நிறைய பொருள்கள் இருக்கும். ஒவ்வொன்றுமே நமக்கு தேவைப்படும் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், வாங்கிய பின் பல பொருள்கள் பயன்படாமல் போகலாம். ஆகவே, நன்றாக யோசித்து தேவையானவற்றை மட்டும் வாங்கவும்.

    MORE
    GALLERIES