கடும் குளிரில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? தாய்மார்களுக்கான டிப்ஸ்!
பிறந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், அவர்களின் உடல்நலனில் தாய்மார்கள் கூடுதல் கவனமசெலுத்துவது அவசியம்.
Web Desk | January 5, 2021, 11:18 AM IST
1/ 7
கொரோனாவுக்கு அடுத்தபடியாக குளிர் நம்மை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருக்கிறது. இந்த குளிர்காலத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் நலமாக இருக்கும் ஒருவர் குளிர்காலத்தில் ஏற்படும் சளி, காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களில் இருந்து தப்பித்துவிடலாம். இதனால் ஒவ்வொருவரும் தங்களின் உடல்நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டிய காலம் இது.
2/ 7
குறிப்பாக, குழந்தைகள் இந்தக் குளிர் காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். பிறந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், அவர்களின் உடல்நலனில் தாய்மார்கள் கூடுதல் கவனமசெலுத்த சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
3/ 7
தாய்ப்பால் (Breast feeding) : குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வளர்ப்பதில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது தாய்ப்பால். வைரஸ் உள்ளிட்ட தொற்று நோய்களுக்கு எதிர்த்து போராடுவதற்கு தேவையான ஆன்டிபாடிகள், தாய்பால் மூலம் குழந்தைகளுக்கு கிடைகின்றன. பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதங்களாவது தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறுவதுடன், தொற்று நோய்களில் இருந்து அவர்களை பாதுகாக்கிறது.
4/ 7
தாயின் அரவணைப்பு (mother care) : குளிர்காலத்தில் நம் உடலுக்கு தேவையான சூடு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிறந்த குழந்தைக்கு அவை எப்போதும் சரியான அளவில் இருக்காது. இதனால், தாய்மார்கள் குழந்தையை தங்களின் அரவணைப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம், தாயின் உடம்பில் இருந்து குழந்தைக்கு தேவையான வெதுவெதுப்பு கிடைத்து உடல் பாகங்கள் சிறப்பாக செயல்பட உதவுகின்றன. தாயின் அரவணைப்பில் இருக்கும் பச்சிளம் குழந்தைகள் மிக மிக குறைவாகவே சளித்தொல்லையால் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
5/ 7
குளிர்கால உடைகள் (winder dresses) : குளிர்காலத்துக்கு என்று விற்பனை செய்யப்படும் ஸ்வெட்டர் உள்ளிட்ட உடைகளை குழந்தைகளுக்கு அணிவிக்க வேண்டும். இதன்மூலம் அவர்களின் உடல் சூடு குறையாமல் தடுக்க முடியும். மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு சாக்ஸ் மற்றும் தொப்பியை கட்டாயமாக அணிவித்து விடுங்கள். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உடைகளை அணிவித்துவிட்டால் அவர்களுக்கு அசௌகரிமாக இருக்கும். குழந்தைகள் தாராளமாக உலவுவதற்கு ஏற்ற வகையிலான உடைகளை அணிவித்துவிடுங்கள்.
6/ 7
ரூம் ஹீட்டர் (Room Heater) : குளிர்காலத்தில் நிலவும் குளிர்ந்த வெப்பநிலை குழந்தைகளின் ஆரோக்கியத்தை எளிதில் பாதிப்பதுடன், சுவாசக் குழாயின் வழியாக வைரஸ் தொற்று ஏற்படவும் வழிவகுக்கின்றன. இதனால் வீடுகளில் குழந்தைகள் இருக்கும் அறைகளில் ரூம் ஹீட்டர்களை (Room Heater) பயன்படுத்தலாம். எதிர்பாராத விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால், குழந்தைகள் அதனை எளிதில் அணுக முடியாத இடத்தில் பெற்றோர் வைக்க வேண்டும்.
7/ 7
இயற்கை குளியல் (oil bath) : குழந்தைகளுக்கு குளிர்காலத்தில் Oil bath எனப்படும் மூலிகை எண்ணெய் குளியலை மேற்கொள்ளலாம். இதனால், குழந்தைகளின் ரத்த ஓட்டம் அதிகரித்து நரம்புகள், எலும்பு, சதைகள் வலுப்பெறும். தோல் பகுதியில் ஏற்படும் வறட்சி நீங்கி, மிருதுவாக இருக்கும். உடல் சூட்டை சரியான அளவில் வைத்திருக்க எண்ணெய் குளியல் உதவும். ஆரோக்கியமான தூக்கத்தையும் குழந்தைகளுக்கு கொடுக்கும். உடல் வறட்சியை தடுப்பதற்காக சில ஸ்பெஷல் கிரீம்களும் ( Special Creams) கிடைக்கின்றன. அவற்றையும் குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.