பெரும்பாலான பெண்கள் பொதுவாக கர்ப்பத்திற்குப் பிறகு ஸ்ட்ரெச் மார்க் எனப்படும் பிரசவ தழும்பு (Stretch Marks) பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பக்காலத்தில் அதிக எடை உடையவர்களுக்கும், ஒன்றுக்கு மேலான குழந்தைகளை சுமப்பவர்களுக்கும், வயிற்றில் உள்ள குழந்தையின் எடை அதிகமாக இருப்பவர்களுக்கும், பனிக்குட நீரானது அளவுக்கு அதிகமாக இருப்பவர்களுக்கும் தழும்புகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.
அதேசமயம் இந்த பிரசவ தழும்புகள் ஏற்படுவதற்கான ஒரே காரணம் பெண்கள் கர்ப்பம் தான் என்று சொல்ல முடியாது. சில கர்ப்பம் ஆகாத பெண்களுக்கும் இந்த பிரச்சனை உள்ளது. அதேபோல ஆண்களுக்கும் தழும்புகள் ஏற்படுகின்றன. திடீர் எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு காரணமாக இந்த வரி வாரியான தழும்புகள் ஏற்படுகின்றன. சிறியவர்கள் பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் இந்த பிரச்சனை வருகிறது. இந்த ஸ்ட்ரெச் மார்க் பிரச்சனையில் இருந்து விடுபட மக்கள் பெரும்பாலும் பல்வேறு அழகு சிகிச்சைகளை நாடுகிறார்கள். இருப்பினும், கெமிக்கல் நிறைந்த அழகு சிகிச்சைகளில் பக்க விளைவுகளும் அதிகம் என்பதை பலர் உணர்வதில்லை. தீங்கு விளைவிக்கும் பக்கவிளைவுகளைத் தவிர்ப்பதற்கு, சில பயனுள்ள வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தலாம்.
1. கற்றாழை : கற்றாழை என்பது தோல் திசுக்களை மீண்டும் உருவாக்க உதவும் ஒரு தாவரமாகும். மேலும் இது அற்புதமான குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. கற்றாழை ஜெல்லை எடுத்து வரித்தழும்பு உள்ள பகுதியில் மசாஜ் செய்து பின்னர் 20-30 நிமிடங்கள் உலர வைக்கவும். தினமும் இதைச் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
2. கோகோ பட்டர் : கோகோ பட்டர் வரித்தழும்புகளை குறைக்க உதவுகிறது. மேலும் கர்ப்ப காலத்தில் மற்றும் அதற்கு பிறகு பயன்படுத்தினால் அவை வரித்தழும்புகளை முற்றிலும் மறைந்துவிடும். கோகோ பட்டரை தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு தழும்பு உள்ள பகுதியில் தடவ வேண்டும். இதை சருமத்தில் நன்கு மசாஜ் செய்து வந்தால், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வரித்தழும்புகள் குறைந்து மறைந்து போவதைக் காணலாம்.
3. வெள்ளரி மற்றும் எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாற்றின் இயற்கையான அமிலத்தன்மை வடுக்கள் குணமடையவும் குறைக்கவும் உதவுகிறது. அதேபோல வெள்ளரி சாறு உங்கள் சருமத்தை புதியதாக வைக்க உதவுகிறது. எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளரி சாற்றை சம பாகங்களில் கலந்து, அந்த கலவையை வரித்தழும்புகள் உள்ள தோல் பகுதியில் தடவவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி சருமத்தை கழுவலாம். இது தவிர, எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து பஞ்சில் நனைத்து, தழும்புள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதன்பிறகு அந்த இடத்தில் எண்ணெய்யை தடவிக் கொள்ளலாம்.
5. ஆப்ரிகாட் மாஸ்க் மற்றும் எண்ணெய் : ஆப்ரிகாட் பழங்கள் சிறந்த எக்ஸ்ஃபோலைட்டிங் போக்குகளைக் கொண்டுள்ளன. அவை வரித்தழும்புகளை குணப்படுத்தும். 2-3 ஆப்ரிகாட் பழங்களை எடுத்து, அவற்றை வெட்டி விதைகளை வெளியே எடுக்கவும். பழத்தை பேஸ்ட் போல நசுக்கி, மாஸ்க் போல பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 15 நிமிடங்கள் விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி, அப்பகுதியை கழுவ வேண்டும். இது தவிர சுத்தமான ஆப்ரிகாட் எண்ணெய்யில் தோல் புத்துணர்ச்சியூட்டும் பண்புகள் நிறைந்துள்ளன. எனவே இவை தழும்புகளை குறைக்க உதவுகிறது.
7. ஊட்டமளிக்கும் தோல் மாஸ்க் : 2 முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக அடித்து, அதனுடன் ஒரு எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பேஸ்ட், போதுமான பால் சேர்த்து நன்றாக கலந்து வழித்தழும்புகளில் தடவி முழுமையாக உலர விடவும். பின்னர் அதனை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்வதன் மூலம் தழும்புகள் மறையும்.