ரிலாக்ஸ் செய்ய உதவும்: நாய்கள் எப்போதுமே நம்மை மகிழ்விக்கின்றன. தூங்குவதற்கு முன் நாய்களுடன் வேடிக்கையாக சிறிது நேரம் விளையாடுவது மகிழ்ச்சிக்கு காரணமான ஆக்ஸிடாஸின் ஹார்மோன் வெளிப்பட உதவுகிறது. தூக்கத்தில் பிரச்சனை இருந்தால் உங்கள் நாயுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது அதனை எளிதாக சரி செய்ய உதவும்.
குளிரில் அரவணைப்பு: குளிர்காலத்தில் நமக்கும் சரி, நாய்க்கும் சரி நிச்சயம் ஒரு நல்ல அரவணைப்பு தேவைப்படும். அதே நேரம் பொதுவாகவே நாயின் உடல் வெப்பநிலை மனித வெப்பநிலையை விட அதிகமாக உள்ளது. உங்கள் பெட்டில் படுத்திருக்கும் நாய், உங்களை அரவணைக்கும் போது நிம்மதியான தூக்கத்திற்கு தேவையான கதகதப்பை உணர்வீர்கள்.
மனச்சோர்விலிருந்து விடுதலை: உங்கள் பாசமிகு நாயுடன் ஒன்றாக தூங்குவது ரத்த அழுத்தம் மற்றும் கார்டிசோலின் அளவை குறைக்க உதவும். அதாவது உங்கள் மன அழுத்தம் மிக விரைவில் சரியாகி விடும். உங்கள் நாயின் மகிழ்ச்சியான குரல், அதன் விளையாட்டு, அது வாலை ஆட்டும் விதம் கூட உங்களை நேர்மறையான மனநிலைக்கு இட்டு செல்லும்.
அலர்ஜி அல்லது ஆஸ்துமா: உங்களுக்கு அலர்ஜி அல்லது ஆஸ்துமா இருக்கும் பட்சத்தில் நாயுடன் ஒரே படுக்கையில் தூங்குவது விஷயங்களை மோசமாக்கி விடும். என்னதான் நீங்கள் தூய்மையாக அவற்றை வைத்திருந்தாலும் அதன் ரோமங்கள் அலல்து அதன் உடலில் இருக்கும் அழுக்குகள் உள்ளிட்டவை உங்களுக்கு இருக்கும் சிறிய அலர்ஜிகளை கடுமையானதாக மாறலாம். இது தீவிர உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
அழுக்காகும் படுக்கை: நாய்களை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும் அவற்றின் சருமம் மற்றும் ரோமத்தில் எளிதாக ஒட்டுண்ணிகள் வந்து விடும். உங்களுடன் அவற்றை படுக்க வைத்து கொள்வதால் எளிதாக உங்களுக்கும் அவை பரவலாம். எனவே ஒவ்வொரு நாளும் நாயும், நீங்களும் எழுந்த பிறகு படுக்கையை சுத்தப்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
தூக்கத்தின் தரம்: ஒரு சிலருக்கு நாய் அருகில் படுத்திருப்பதால் சரியாக தூக்கம் வராது. நாய்களின் வாழ்க்கையில் தோராயமாக 3 தூக்க சுழற்சிகள் இருப்பதால் அவை விழித்திருக்கும் நேரங்களில் உஷாராக இருக்கின்றன. இரவு நேரங்களில் 2 - 3 முறை விழுகின்றன. ஆனால் நமக்கு இரவு நீண்ட தூக்கம் மிகவும் முக்கியம் என்பதால் அவற்றை படுக்க வைக்கும் போது, அவை விழித்தால் நமது தூக்கமும் கெடும்.