முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » காய்ச்சல், வாந்தி, சோர்வு.. குழந்தைகளுக்கு சிறுநீர் பாதை தொற்று இருப்பதை எப்படி கண்டறிவது..?

காய்ச்சல், வாந்தி, சோர்வு.. குழந்தைகளுக்கு சிறுநீர் பாதை தொற்று இருப்பதை எப்படி கண்டறிவது..?

குழந்தைகளின் செரிமானக் கட்டமைப்பில் நுழையக் கூடிய பாக்டீரியா தான், சிறுநீர் பாதையிலும் தொற்று ஏற்படக் காரணமாக அமைகிறது என்று தேசிய சுகாதார சேவை மையம் தெரிவிக்கின்றது.

  • 17

    காய்ச்சல், வாந்தி, சோர்வு.. குழந்தைகளுக்கு சிறுநீர் பாதை தொற்று இருப்பதை எப்படி கண்டறிவது..?

    நம் உடலில் சுத்திகரிக்கப்படும் கழிவுகள் சிறுநீர் என்ற பெயரில் சிறுநீர் பாதை வழியாக வெளியேறுகிறது. இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு சிறுநீர் குழாய்கள், ஒரு சிறுநீர் பை மற்றும் ஒரு சிறுநீர் வெளியேற்ற குழாய் ஆகியவை இந்த கட்டமைப்பில் உள்ளன. சிறுநீர் பாதை ஆரோக்கியமாக இருப்பதுதான் ஒட்டுமொத்த உடல் நலனுக்குமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 27

    காய்ச்சல், வாந்தி, சோர்வு.. குழந்தைகளுக்கு சிறுநீர் பாதை தொற்று இருப்பதை எப்படி கண்டறிவது..?

    ஆனால், பாக்டீரியா போன்ற நோய் தொற்றுகள் சிறுநீர் குழாய்களை பாதிக்கின்றன. பெரியவர்களுக்கு சிறுநீர் குழாய் தொற்று ஏற்படுவது மிக இயல்பானது. குறிப்பாக பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சிறுநீரகத்தில் தொற்று அல்லது சிறுநீர் குழாய்கள் தொற்று என்றால் அது மேல்பகுதி யூடிஐ என்று குறிப்பிடப்படுகிறது. அதுவே சிறுநீர் பை மற்றும் சிறுநீர் வெளியேற்றக் குழாய் பகுதியில் தொற்று ஏற்பட்டால் அது கீழ்பகுதி யூடிஐ என்று குறிப்பிடப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 37

    காய்ச்சல், வாந்தி, சோர்வு.. குழந்தைகளுக்கு சிறுநீர் பாதை தொற்று இருப்பதை எப்படி கண்டறிவது..?

    குழந்தைகளுக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவது ஏன்? குழந்தைகளின் செரிமானக் கட்டமைப்பில் நுழையக் கூடிய பாக்டீரியா தான், சிறுநீர் பாதையிலும் தொற்று ஏற்படக் காரணமாக அமைகிறது என்று தேசிய சுகாதார சேவை மையம் தெரிவிக்கின்றது. கழிவறை செல்லக் கூடிய குழந்தைகள் முறையாக தண்ணீர் வைத்து சுத்தம் செய்ய தெரியாமல் இருப்பதாலும் அவர்களுக்கான தொற்று வாய்ப்பு அதிகரிக்கிறது. சிறுநீர் வெளியேற்றக் குழாய் வழியாக உள்புகுந்து சிறுநீர் பை மற்றும் சிறுநீரகங்கள் வரை சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    MORE
    GALLERIES

  • 47

    காய்ச்சல், வாந்தி, சோர்வு.. குழந்தைகளுக்கு சிறுநீர் பாதை தொற்று இருப்பதை எப்படி கண்டறிவது..?

    கவனிக்க வேண்டிய அறிகுறிகள் : உங்கள் குழந்தைகளுக்கு அதிக வெப்பத்துடன் கூடிய காய்ச்சல், வாந்தி, கடுமையான சோர்வு, ஆற்றலின்மை, சாப்பிடுவதில் சிரம், சருமம் மஞ்சளாக மாறுவது, பச்சிளம் குழந்தைகளுக்கு கண்களில் வெள்ளை தட்டுவது போன்றவை சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் ஆகும். பெற்றோர் இவற்றை கவனமாக கண்காணிக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 57

    காய்ச்சல், வாந்தி, சோர்வு.. குழந்தைகளுக்கு சிறுநீர் பாதை தொற்று இருப்பதை எப்படி கண்டறிவது..?

    துல்லியமான அறிகுறிகள் : உங்கள் குழந்தை சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்படுவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அடிவயிற்று பகுதியில் வலி, சிறுநீரில் துர்நாற்றம் மற்றும் அடர் வெள்ளை நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது போன்றவை சிறுநீர் பாதை தொற்றுக்கான அறிகுறிகள் ஆகும். இவற்றை குழந்தைகளிடம் பார்த்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 67

    காய்ச்சல், வாந்தி, சோர்வு.. குழந்தைகளுக்கு சிறுநீர் பாதை தொற்று இருப்பதை எப்படி கண்டறிவது..?

    அபாயங்களை குறைப்பது எப்படி? குழந்தைகளுக்கு நீர்ச்சத்து போதுமான அளவில் இருக்க வேண்டும். கழிவறையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பயன்படுத்துவதற்கு கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளின் உள்ளாடைகள் தளர்வாக இருக்க வேண்டும். குழந்தைகளிடம் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை அவ்வபோது ஆராய்ந்து மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 77

    காய்ச்சல், வாந்தி, சோர்வு.. குழந்தைகளுக்கு சிறுநீர் பாதை தொற்று இருப்பதை எப்படி கண்டறிவது..?

    சிகிச்சை முறைகள் : உங்கள் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுத்திய பாக்டீரியாவை அழிக்க ஆண்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர் பரிந்துரை செய்வார். குழந்தைகளின் வயது, அவர்களுக்கு அலர்ஜி ஏற்படக் கூடிய தன்மை போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து அதற்கு ஏற்ப மருந்துகள் கொடுக்கப்படும். வீட்டில் அதிகப்படியான தண்ணீர் அருந்தக் கொடுப்பதன் மூலமாகவும் குழந்தையின் தொற்று பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

    MORE
    GALLERIES