ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குளிர்காலத்தில் குழந்தைகளை கதகதப்பாக வைத்துக்கொள்ள அணிய வேண்டிய உடைகள் என்ன..?

குளிர்காலத்தில் குழந்தைகளை கதகதப்பாக வைத்துக்கொள்ள அணிய வேண்டிய உடைகள் என்ன..?

மிகவும் சுட்டித்தனமாக உள்ள குழந்தைகள் அடிக்கடி ஓடியாடி விளையாடு கொண்டிருப்பார்கள். பனி அல்லது குளிர் அதிகமாக உள்ள நேரத்தில் அவர்கள் வெளியே விளையாடிக் கொண்டிருப்பதால் ஃப்ராஸ்ட்பைட் தாக்கும் அபாயம் அவர்களுக்கு அதிகமாக உள்ளது.

 • 16

  குளிர்காலத்தில் குழந்தைகளை கதகதப்பாக வைத்துக்கொள்ள அணிய வேண்டிய உடைகள் என்ன..?

  ஏற்கனவே இந்தியா முழுவதும் குளிர் காலம் துவங்கி விட்ட நிலையில், குளிரிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கவும் அவர்களை கதகதப்பாக வைத்துக் கொள்ளும் வகையிலும் உடைகளை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். குளிர்காலத்தில் குழந்தைகளுக்கான உடையை தேர்வு செய்வது சற்று சிரமமான காரியமும் கூட. ஏனெனில் நீங்கள் தேர்வு செய்யும் உடையானது அவர்களுக்கு கதகதப்பை கொடுக்கும் வகையிலும், அதே சமயம் காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 26

  குளிர்காலத்தில் குழந்தைகளை கதகதப்பாக வைத்துக்கொள்ள அணிய வேண்டிய உடைகள் என்ன..?

  சரியான அடுக்கிலான உடைகளை பயன்படுத்த வேண்டும் : நீங்கள் சரியான அடுக்கிலமைந்த உடைகளை தேர்வு செய்தாலே உங்களது பாதி வேலை முடிந்தது போல் வைத்துக் கொள்ளலாம். மெல்லிய அடுக்குகளை கொண்ட உடைகளை தேர்வு செய்யும் போது, வேண்டிய நேரத்தில் உடைகளை கூடுதலாக சேர்த்துக் கொள்ளவோ அல்லது நீக்கவோ முடியும். ஆனால் உங்கள் குழந்தைக்கு எத்தனை அடுக்குகளான உடை தேவைப்படுகிறது என்பதை தீர்மானிப்பது முக்கியமான ஒன்று. கைக்குழந்தையாக இருந்தால் முழுக்கை மேல் சட்டை மற்றும் பேண்ட்டுகளை அணிவிக்கலாம். அதற்கு மேல் குளிரிலிருந்து பாதுகாக்கும் விதமாக ஸ்வெட்டர் அணிவிக்கலாம் அதற்கும் மேல் கோர்ட் ஆகியவற்றையும் அணிவித்து குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 36

  குளிர்காலத்தில் குழந்தைகளை கதகதப்பாக வைத்துக்கொள்ள அணிய வேண்டிய உடைகள் என்ன..?

  சிறிய விஷயங்களில் கவனம் தேவை : பிரதான உடையை நீங்கள் தேர்வு செய்தவுடன், இதர விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு கதகதப்பு கொடுக்கும் விதமாக சாக்ஸ் மற்றும் தொப்பிகள் ஆகியவற்றை சரியான விதத்தில் தேர்வு செய்து அணிவிக்க வேண்டும். முக்கியமாக அவர்களின் தலை மற்றும் காதுகளை பாதுகாக்கும் விதமான உடைகளை அணிவதால் குளிரிலிருந்து அவர்களை பாதுகாக்க முடியும்.

  MORE
  GALLERIES

 • 46

  குளிர்காலத்தில் குழந்தைகளை கதகதப்பாக வைத்துக்கொள்ள அணிய வேண்டிய உடைகள் என்ன..?

  பயணம் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை :
  சரியான உடைகளை தேர்வு செய்த பிறகு நீங்கள் உங்கள் குழந்தையுடன் வெளியே செல்ல வேண்டும் என்றால் அதற்கும் குறிப்பிட்ட வழிமுறைகள் உள்ளன. முடிந்த அளவு குளிர் குளத்தில் வெளியே செல்லும்போது காரில் செல்வது உகந்ததாக இருக்கும். மேலும் உங்களுடன் மென்மையான போர்வையை எப்போதும் வைத்திருக்க வேண்டும். இதைத்தவிர குழந்தைக்கென்று கூடுதலாக ஒரு செட் உடையை எப்போதும் வைத்திருப்பது நல்லது.

  MORE
  GALLERIES

 • 56

  குளிர்காலத்தில் குழந்தைகளை கதகதப்பாக வைத்துக்கொள்ள அணிய வேண்டிய உடைகள் என்ன..?

  ஃப்ராஸ்ட்பைட் வராமல் தடுப்பது : மிகவும் சுட்டித்தனமாக உள்ள குழந்தைகள் அடிக்கடி ஓடியாடி விளையாடு கொண்டிருப்பார்கள். பனி அல்லது குளிர் அதிகமாக உள்ள நேரத்தில் அவர்கள் வெளியே விளையாடிக் கொண்டிருப்பதால் ஃப்ராஸ்ட்பைட் தாக்கும் அபாயம் அவர்களுக்கு அதிகமாக உள்ளது. அதிக குளிரான வெப்ப நிலையில் சருமம் நீண்ட நேரம் இருக்கும் போது ஃப்ராஸ்ட் பைட் ஏற்படுகிறது. முக்கியமாக கைவிரல்கள், கால் விரல்கள், காது மற்றும் மூக்கு பகுதிகளில் இது உண்டாக்கலாம். உங்கள் குழந்தையின் சருமம் மிகவும் குளிராகவும், நிறம் மாறியும் இருப்பதை உணர்ந்தால் உடனடியாக வீட்டிற்குள் அழைத்துச் சென்று வெந்நீரில் நனைத்த துணியினால் காது மற்றும் மூக்கு ஆகிய பகுதிகளை மெதுவாக துடைக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 66

  குளிர்காலத்தில் குழந்தைகளை கதகதப்பாக வைத்துக்கொள்ள அணிய வேண்டிய உடைகள் என்ன..?

  அதிகமான கதகதப்பும் கூடாது : குழந்தைகளை கதகதப்பாக வைத்துக் கொள்கிறேன் பேர்வழி என்று மொத்தமாக உடைகளை கொண்டு அவர்களை மூடி காற்றோட்டத்தை தடை செய்வது கூடாது. உதாரணத்திற்கு காரில் அமர்ந்தவுடன் உங்கள் குழந்தைகளின் மேலடுக்கு உடைகளை நீக்கிவிடலாம். காருக்குள் இருப்பதால் நல்ல ஏற்கனவே நல்ல கதகதப்பு இருக்கும். அதே சமயத்தில் உங்கள் குழந்தைக்கும் காற்றோட்டமாக இருக்கும். உங்கள் குழந்தையின் சருமம் மிகவும் சிவந்து காணப்பட்டாலோ அல்லது தொடும்போது சூடாக உணர்ந்தாலோ நீங்கள் அதிக அடுக்குகளான உடைகளை அணிவித்துள்ளீர்கள் என்று பொருள். உடனடியாக ஒன்று அல்லது இரண்டடுக்கு துணிகளை நீக்கிவிட வேண்டும்.

  MORE
  GALLERIES