முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » “பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உறவுகளை கேஜெட்டுகள் இப்படித்தான் பாதிக்கிறதாம்“.. நிபுணர் என்ன சொல்கிறார்கள்..?

“பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உறவுகளை கேஜெட்டுகள் இப்படித்தான் பாதிக்கிறதாம்“.. நிபுணர் என்ன சொல்கிறார்கள்..?

ஆன்லைன் விளையாட்டுகள், தேவையில்லாத வீடியோக்கள் பார்ப்பதற்கு அடிமையாகுதல் போன்ற நிலைக்கு உங்களது குழந்தைகள் வராமல் இருக்க வேண்டும் என்றால் அது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது.

  • 17

    “பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உறவுகளை கேஜெட்டுகள் இப்படித்தான் பாதிக்கிறதாம்“.. நிபுணர் என்ன சொல்கிறார்கள்..?

    இன்றைக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தாலும், இது ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். இதுவே நம்மையும், நம்முடைய குடும்பத்தையும் பாதிக்கும் அளவிற்கு இருந்துவிடக்கூடாது. இருந்தப்போதும் சில நேரங்களில் நம்மை அறியாமல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் பல பாதிப்புகளை நாம் சந்திக்கின்றோம். அவற்றில் ஒன்று தான் குழந்தைகளுக்கும், மொபைல், லேப்டாப் போன்ற கேஜெட்டுகளும் உள்ள தொடர்பு. ஒவ்வொரு குழந்தைகளுக்கு வழிகாட்டியாக பெற்றோர்கள் இருந்த காலங்கள் மறந்து, இன்றைக்கு இணையத்தில் என்ன சொல்கிறார்களோ? அதைத் தான் குழந்தைகள் வேதவாக்குகளாக எடுத்துக்கொள்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 27

    “பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உறவுகளை கேஜெட்டுகள் இப்படித்தான் பாதிக்கிறதாம்“.. நிபுணர் என்ன சொல்கிறார்கள்..?

    ஆம் காலையில் எழுந்தது முதல் தூங்குவது வரை மொபைல் போன் உள்ளிட்ட கேஜெட்டுகளை பெற்றோர்களாகிய நாமே கொடுக்கிறோம். இதனால் நேர்மறை மற்றும் பல எதிர்மறையான பிரச்சனைகளை சந்திப்பதோடு, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கிடையே உறவில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுக்குறித்து சமீபத்தில் நடத்திய ஆய்வுகளில் எப்படியெல்லாம் தொழில்நுட்பங்களால் பெற்றோர், குழந்தை உறவில் பாதிப்படைகிறது என்பது குறித்து நிபுணர்கள் தெரிந்துள்ள கருத்துக்கள் குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

    MORE
    GALLERIES

  • 37

    “பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உறவுகளை கேஜெட்டுகள் இப்படித்தான் பாதிக்கிறதாம்“.. நிபுணர் என்ன சொல்கிறார்கள்..?

    இதுக்குறித்து குருகிராமில் உள்ள KIIT உலகப் பள்ளியின் முதல்வர் டாக்டர். நீலிமா கம்ரா தெரிவிக்கையில், குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது என்பது ஒவ்வொரு வயதினருக்கும் இன்றியமையாதது என்கிறார். இத்தகைய செயல் குடும்பத்தில் ஆழமானப் பிணைப்பை ஏற்படுத்த உதவுதோடு, தலைமுறை இடைவெளிகளைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதற்கான ஆய்வுகள் உள்ளதாகவும் கூறுகிறார்.

    MORE
    GALLERIES

  • 47

    “பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உறவுகளை கேஜெட்டுகள் இப்படித்தான் பாதிக்கிறதாம்“.. நிபுணர் என்ன சொல்கிறார்கள்..?

    ஆனால் இன்றைக்கு பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே சரியான உறவு இல்லாதது மிகவும் வெளிப்படையானது என்றும்? இதற்கு நாம் யாரைக்குறைக் கூறுவது என்று தெரியவில்லை என்கிறார். மேலும் எந்தவொரு சாதனங்களும், தொழில்நுட்பமும், மனிதர்களை ஒருபோதும் அடிமைப்படுத்தாது எனவும், சூழ்நிலைத் தான் மாற்றுகிறது. எனவே குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ற செயல்படுங்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

    MORE
    GALLERIES

  • 57

    “பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உறவுகளை கேஜெட்டுகள் இப்படித்தான் பாதிக்கிறதாம்“.. நிபுணர் என்ன சொல்கிறார்கள்..?

    மேலும் குடும்ப உறுப்பினர்களைப் புறக்கணித்து நாம் கேஜெட்டுகளைப் பயன்படுத்தும் போது, பாசம் மற்றும் குடும்பத்தில் ஈடுபாடு இருக்காது எனவும், இது குழந்தைகளை பெருமளவில் பாதிக்கும் எனவும் கூறுகின்றனர். குழந்தைகள் மொபைலுக்கு அடிமையாகும் போது பெற்றோர்களாகிய நாம் என்ன சொல்கிறோம் என்பதைக் கூட கவனிக்க முடியவில்லை. எப்போதும் ஆன்லைனில் உள்ள விளையாட்டுகள் மற்றும் வீடியோக்களைத் தான் நினைவில் வைக்க முயல்கின்றனர். இதனால் பல குழந்தைகள் மனரீதியாக பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றனர் குழந்தை நல நிபுணர்கள்.

    MORE
    GALLERIES

  • 67

    “பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உறவுகளை கேஜெட்டுகள் இப்படித்தான் பாதிக்கிறதாம்“.. நிபுணர் என்ன சொல்கிறார்கள்..?

    இதேப் போன்று பாய் பர்மானந்த் வித்யா மந்திர் டெல்லியின் கல்வி இயக்குனர் பிரதிபா ஷர்மா தெரிவிக்கையில், சமீபத்திய ஆண்டுகளில், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் மற்றும் கேமிங் சாதனங்கள் அனைத்தும் நேர்மறை மற்றும் எதிர்மறையாக பெற்றோர்-குழந்தை உறவுகளில் தாக்கத்தை ஏற்படுகிறது என கூறுகிறார்.. கற்றலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை விட்டு தேவையில்லாத நேரங்களில் கையில் கொடுப்பது தான் சிக்கல்களுக்குக் காரணம் என்கிறார் பிரதிபா ஷர்மா.

    MORE
    GALLERIES

  • 77

    “பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உறவுகளை கேஜெட்டுகள் இப்படித்தான் பாதிக்கிறதாம்“.. நிபுணர் என்ன சொல்கிறார்கள்..?

    எனவே கேஜெட்டுகள் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் உறவுகளைப் பாதிக்கும் மிகப்பெரிய வழிகளில் ஒன்றாக உள்ளதை அறிந்துக்கொள்ள வேண்டும். ஆன்லைன் விளையாட்டுகள், தேவையில்லாத வீடியோக்கள் பார்ப்பதற்கு அடிமையாகுதல் போன்ற நிலைக்கு உங்களது குழந்தைகள் வராமல் இருக்க வேண்டும் என்றால் அது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்வதை மறந்துவிடாதீர்கள்..

    MORE
    GALLERIES