நம் பிள்ளைகள் மிகுந்த புத்திகூர்மை உடையவர்களாக வளர்ந்து, எதிர்காலத்தில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசை எந்த பெற்றோருக்கு இருக்காது? எல்லோருமே நம் பிள்ளைகள் முதன்மையானவராக, வெற்றியாளராக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம். அப்படியானால் இந்த எண்ணம் வெறுமனே நம் மனதிற்குள் இருந்தால் போதுமானது அல்ல. குழந்தைகளை புத்திகூர்மையானவர்களாக நாம் தான் வளர்த்தெடுக்க வேண்டும். எந்தெந்த செயல்கள், குழந்தைகளை திறமை உள்ளவர்களாக மாற்றும் என்பதை தெரிந்து கொண்டு, நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அப்படிப்பட்ட உத்திகள் உங்களுக்கு தெரியவில்லை என்றாலும், இந்தச் செய்தியில் அதற்கான ஆலோசனைகளை தருகிறோம்.