பெற்றோர்கள் வேறுபடலாம் ஆனால், தத்தம் குழந்தைகளுக்கு நசுக்கப்பட்ட பழம் அல்லது காய்கறியை ஊட்டும் பொழுது அவர்கள் சந்திக்கும் அனுபவம் ஒரே மாதிரியாகேவ இருக்கும். என்னதான் வேடிக்கை காட்டி, பாட்டு பாடி ஊட்டினாலும், குழந்தைகள் அதை வெளியே துப்புவதும், கக்குவதும் அல்லது சில சமயங்களில் கொடுத்த முழு உணவும் வாயிலிருந்து திரும்ப வருவதுமாகவே இருக்கும்.
இதுபோன்ற சூழ்நிலைகளில், இனிப்பான அல்லது இனிப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பது உண்மையிலேயே மிகவும் எளிமையாக உணவளிக்கும் ஒரு முறையாகும். குழந்தைகளும் சிரித்துக்கொண்டே எந்தவிதமான அடமும் இல்லாமல் உணவை உட்கொள்ளும். "அப்பாடா! சாப்பாடு கொடுத்தாச்சு" என்று நீங்களும் பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்.
ஏனெனில் குழந்தைகளுக்கு சர்க்கரை கொடுக்கவே கூடாது! உங்கள் குழந்தை பிறந்து வளரும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இனிப்புகளை ஊட்டுவது, குறிப்பாக சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட பொருட்களை வழங்குவது, குழந்தையின் வளர்ச்சியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஒரு உணவு பதப்படுத்தும் போதே ஆடட் சுகர்ஸ் (Added sugars) சேர்க்கப்படுகின்றன. இனிப்புகள், சிரப்கள் மற்றும் பழங்கள் / காய்கறி சாறுகள் போன்ற உணவுகளில் சர்க்கரை சேர்க்கப்படுகின்றன. குறிப்பாக யோகர்ட், குழந்தைகளுக்கான தின்பண்டங்கள், ப்ரூட் ட்ரிங்க்ஸ், ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்வீட் பேக்கரி உணவு பொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது.
ஏன் கொடுக்க கூடாது? பிறந்த முதல் இருபத்தி நான்கு மாதங்களில் குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கு, நிறைய ஊட்டச்சத்துக்கள் மற்றும் கலோரிகள் தேவை. சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட உணவுகள் கலோரிகள் நிறைந்ததாக இருந்தாலும், அவற்றில் ஊட்டச்சத்துக்கள் இல்லை. மேலும் முதல் 2 ஆண்டுகளில் குழந்தைகள் பொதுவாகவே குறைந்த அளவிலான உணவையே உண்கின்றனர். எனவே தான் அவர்கள் உட்கொள்ளும் எந்தவொரு உணவும் அவர்களின் உடலுக்கு நன்மை பயக்குமா என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்; முதல்படியாக சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட உணவுகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
நீண்ட கால விளைவுகளையும் மனதில் கொள்ள வேண்டும்! பிறந்த முதல் 2 ஆண்டுகளில் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணும் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே உடல் பருமன், இருதய நோய் மற்றும் பல் சிதைவு போன்றவைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், குழந்தைகள் தங்கள் வாழ்க்கையின் முதல் இருபத்தி நான்கு மாதங்களில் அதிகம் விரும்பி சாப்பிட்ட உணவுகளையே அதற்கடுத்த காலங்களிலும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே, சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமான உணவுகளை அவர்களுக்கு பழக்கினால் அவர்களின் எதிர்கால உடல் நலமும் ஆரோக்கியமாகவே இருக்கும்
எம்மாதிரியான உணவுகளை கொடுக்கலாம்? குழந்தைகளின் அன்றாட உணவில் இருந்து சர்க்கரையை முற்றிலுமாக நீக்கி, மாறாக காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான மற்றும் சில கசப்பான உணவுகளை கொடுப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இந்த இடத்தில் தான் நீங்கள் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க வேண்டும். அவர்களை இனிப்பு சாப்பிட அனுமதிக்க வேண்டும், ஆனால் எவ்வளவு இனிப்பு சாப்பிடலாம் என்று வரையறுக்கவும் வேண்டும்.
மேலும் உங்கள் குழந்தையின் வயதைப் பொறுத்து ஃபார்முலா மில்க் (formula milk) தாய்ப்பால் அல்லது வேறு ஏதேனும் பால் போன்ற பானங்களுக்கு மாறலாம். இது தவிர, உங்கள் குழந்தைக்கான உணவைத் தயாரிக்கும் போது சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் முயற்சி செய்யலாம். மேலும் உங்கள் குழந்தைக்காக நீங்கள் வாங்கும் எல்லா வகையான பொருட்களிலும் சர்க்கரையின் அளவு குறித்து பரிசோதிக்கவும், இது 'ஆடட் சுகர்ஸை' தவிர்க்க உதவும் ஒரு முக்கியமான படியாகும். பொதுவாக ஆடட் சுகர்ஸ் எப்போதும் பட்டியலிடப்படுவதில்லை எனவே 'ஸ்வீட்ன்டு' (sweetened) என்கிற குறிச்சொற்களை கவனிக்கவும்.