ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தனிப்பட்ட சுகாதாரம் என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நோய்த்தொற்றுகளிலிருந்து உங்களைப் பாதுகாப்பு தொடங்கி பொது இடங்களில் எப்படி சுகாதாரமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்பது வரை நாம் தனிப்பட்ட சுகாதாரத்தில் தான் கொண்டுவரமுடியும். ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளை இளம் வயதில் பராமரிப்பது என்பது அவர்களின் கடமை.
அதே சமயம் டீனேஜ் வயதிலும் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் மற்றும் சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் இருக்க வேண்டும் என்றால் அது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது. குறிப்பாக இந்த வயதில் உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான மாற்றங்களை விளைவிக்கும் ஹார்மோன் மாற்றங்கள் உள்பட, தங்களது உடலில் பல மாற்றங்களை அனுபவிக்கின்றனர். இந்த நேரத்தில் உங்களுடைய டீனேஜ் குழந்தைகள் எப்படி தனிப்பட்ட சுகாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து இங்கே நாம் அறிந்துக் கொள்வோம். பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள்..
இளம் வயது தொடக்கம் : தொட்டில் பழக்கம் தான் சுடுகாடு வரை என்பார்கள். ஆம் நம்முடைய சிறு வயதில் என்ன நாம் கற்றுக்கொள்கிறோமோ? அதைத் தான் நம்முடைய வாழ்நாள் முழுவதும் பின்பற்றுவோம். எனவே தான் நமது உடலை எப்படியெல்லாம் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து இளம் வயதில் இருந்தே தொடங்க வேண்டும். கை கழுவுதல், குளித்தல், பல் துலக்குதல் போன்ற தனி மனித சுகாதார விஷயங்களை நீங்கள் இளம் வயதிலேயே கடைப்பிடிக்க தொடங்கும் போது நிச்சயம் டீனேஜ் வயதிலும் தொடரும்..
நல்ல வழிகாட்டியாக இருத்தல் : குழந்தைகளின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் பெற்றோர்கள் நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும். குழந்தைகளை இளம் வயதில் இருந்தே கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு சொல்வதோடு நின்றுவிடாமல், பெற்றோர்களும் அவர்களுடன் சேர்ந்து செய்ய வேண்டும். அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இதனால் இருக்க முடியும்.
வெளிப்படையாக பேசுதல் : டீனேஜர்கள் தங்கள் பெற்றோருடன் தனிப்பட்ட சுகாதாரப் பழக்கங்களைப் பற்றி விசாரிப்பதில் கூச்சம் கொள்ளக்கூடாது. வழக்கமாக காலையில் குளித்தல், டியோடரன்ட் பயன்படுத்துதல் அல்லது அடிக்கடி உடைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது குறித்து சொல்லிக்கொடுப்பதோடு அவர்கள் என்ன செய்கிறார்கள் என நாம் கேட்டறிய வேண்டும்.
புரிந்துக்கொள்ளுதல் : பொதுவாக டீனேஜ் வயது என்றாலே மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்க நேரிடும். இதோடு மட்டுமின்றி சில நேரங்களில் பல சுகாதார நடைமுறைகளை அவர்கள் மறந்துவிடலாம். எனவே அந்நேரத்தில் அவர்களைக் குறைச் சொல்வதை நிறுத்திவிட்டு, பொறுமையாக இருக்க வேண்டும். மேலும் நல்ல சுகாதார பழக்கங்களை மறந்துவிடாதீர்கள். என்பதை அவர்களுக்கு உணர வைக்க வேண்டும்.
உங்களது உடல் சுகாதாரமாக இல்லையென்றால், நீங்கள் அலுவலக பணிக்கோ?அல்லது சொந்த வேலையாக வெளியில் சென்றாலும் யாரும் உங்களிடம் பேசுவதற்குத் தயக்கம் காட்டுவார்கள். வாய்துர்நாற்றம் இல்லாமல் இருப்பதற்கு தினமும் பல் துலக்குதல், வியர்வை வாசனை வெளியில் வராமல் இருப்பது குளித்தல் மற்றும் அடிக்கடி ஆடைகளை மாற்றுதல் போன்றவற்றை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என அமைதியாக அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.