முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கோடை விடுமுறையை உங்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக மாற்ற சில டிப்ஸ்!

கோடை விடுமுறையை உங்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக மாற்ற சில டிப்ஸ்!

கோடை காலம் மிகவும் சிறந்த காலம். ஏனென்றால், நமது குழந்தைகளுக்கு நாம் நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்கலாம். அப்படி, இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற சில உதவிக்குறிப்புகள் இங்கே.

 • 111

  கோடை விடுமுறையை உங்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக மாற்ற சில டிப்ஸ்!

  நமது குழந்தைகளுடன் நேரத்தை செலவிடவும், அவர்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்கவும் கோடை காலம் மிகவும் சிறந்தது. ஏனென்றால், பள்ளிகள் விடுமுறை என்பதால் குழந்தைகள் வீட்டில் அதிக நேரத்தை செலவிடுவார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு நிறைய பொழுதுபோக்கு விஷயங்களை கற்பிக்கலாம். இருப்பினும் கோடை விடுமுறையில், நமது குழந்தைகள் கொளுத்தும் வெயிலில் விளையாட தயாராக இருப்பார்கள். வீட்டுக்குள்ளேயே அருமையான தருணங்களை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 211

  கோடை விடுமுறையை உங்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக மாற்ற சில டிப்ஸ்!

  நர்சரியைப் பார்வையிட அழைத்து செல்லலாம் : உங்கள் குழந்தைகளுக்கு தோட்டக்கலை மீதான ஆர்வத்தை வளர்க்க விரும்பினால், அவர்களை அருகில் உள்ள நர்சரிக்கு அழைத்துச் சென்று பல்வேறு வகையான செடிகள் மற்றும் பூக்களை பற்றி கூறலாம். உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வைக்க சில பூ செடிகளையும் வாங்கி செல்லலாம். மேலும், உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல உங்கள் நகரத்தில் ஏதேனும் மலர் கண்காட்சி நடைபெறுகிறதா என்று அறிந்து, அவர்களை அழைத்து செல்லுங்கள்.

  MORE
  GALLERIES

 • 311

  கோடை விடுமுறையை உங்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக மாற்ற சில டிப்ஸ்!

  வாசிப்பு திறனை மேம்படுத்தலாம் : புத்தகம் வாசிப்பதால், மனநலத்தை அதிகரிக்கிறது, மன அழுத்தத்தை குறைவதாக ஆய்வுகள் கூறுகிறது. எனவே, குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் அவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தலாம். ஆனால், பாடப்புத்தகங்களை வாசிக்க கூற வேண்டாம். ஏனென்றால், என்னடா லீவுல கூட நாம் படிக்கணுமா என நினைத்துவிடுவார்கள். ஆதலால், கதை புத்தகங்கள், விடுகதை போன்ற புத்தகங்களை வாசிக்க கொடுக்கலாம். இல்லையெனில், உங்கள் குழந்தை படிக்க விரும்பும் புத்தகங்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 411

  கோடை விடுமுறையை உங்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக மாற்ற சில டிப்ஸ்!

  செல்லப்பிராணி வளர்ப்பு : குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த செயல்பாடுகளில் ஒன்று செல்லப்பிராணி வளர்ப்பு. இது உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சியளிக்கும் பொழுதுபோக்காக இருக்கும். இதனால், உங்கள் குழந்தை மிகவும் பொறுப்புள்ளவராகவும், பொறுமையாகவும், இரக்கமுள்ளவராகவும், தன்னம்பிக்கை கொண்டவராகவும் மாற்றும். செல்லப்பிராணிக்கு நகங்களை வெட்டுதல், உணவளித்தல், வாக்கிங் அழைத்து செல்வது போன்ற விஷயங்களை உங்கள் குழந்தைகளை செய்ய சொல்லுங்கள்.

  MORE
  GALLERIES

 • 511

  கோடை விடுமுறையை உங்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக மாற்ற சில டிப்ஸ்!

  கழிவுகளை மறுசுழற்சி செய்ய கற்றுக்கொடுப்பது : தேவையற்ற கழிவுகளை மறுசுழற்சி செய்வது சுற்றுச்சூழல் நட்பு நடைமுறையாக கருதப்படுகிறது. காகிதம், அட்டை, பிளாஸ்டிக், ஸ்டீல் கேன்கள் போன்ற கழிவுப்பொருட்களை புதியதாக மாற்ற உதவுகிறது. நீண்ட நாள் ஆன தகர டப்பாக்களை பெயிண்ட் செய்து அதில் செடி வைக்க கற்றுக்கொடுக்கலாம். வீட்டிலேயே மறுசுழற்சி செய்வதன் மூலம் உங்கள் பிள்ளையை ஒரு பொழுதுபோக்காக மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 611

  கோடை விடுமுறையை உங்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக மாற்ற சில டிப்ஸ்!

  பாட்டு பாடுதல் : பாடுவது ஒரு ஆர்வம் மற்றும் திறன் சார்ந்த பொழுதுபோக்காகும், இது மனதை தளர்த்த உதவுகிறது மற்றும் மேம்பட்ட சுவாசம் மற்றும் இதய செயல்பாடு போன்ற பல உடலியல் நன்மைகளை வழங்குகிறது. ஒரு பாட்டு வகுப்பில் சேர்வது உங்கள் குழந்தையின் திறமையை அதிகரிக்க உதவுவதோடு, அவர்களின் பாடும் திறனை மேம்படுத்தவும் உதவும்.

  MORE
  GALLERIES

 • 711

  கோடை விடுமுறையை உங்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக மாற்ற சில டிப்ஸ்!

  நடனம் : நடனம் மிகவும் பொழுதுபோக்கு மற்றும் சுவாரஸ்யமான ஒன்று. இது மனதை நிதானப்படுத்தவும் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. உங்கள் குழந்தை நடனமாட ஆர்வமாக இருந்தால், அவர்களை ஒரு நடன வகுப்பில் சேர்ப்பது நல்லது. ஒரு தொழில்முறை உதவியாளரிடமிருந்து நடனத்தைக் கற்றுக்கொள்வது, நடனத் திறன்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு உதவும்.

  MORE
  GALLERIES

 • 811

  கோடை விடுமுறையை உங்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக மாற்ற சில டிப்ஸ்!

  சமைக்க கற்பித்தல் : சமைப்பது நம்மில் பலருக்கும் மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று. ஏனென்றால், சமைப்பது மிகவும் மகிழ்ச்சியான திறமையாகும். அதனால் தான் அனைவரையும் சமையல் எளிமையாக ஈர்க்கிறது. உங்கள் குழந்தைகளுக்கு சமைப்பதில் ஆர்வம் இருந்தால், அவர்களுக்கு சமைக்க கற்றுக்கொடுக்கலாம். இல்லையெனில், உங்களுக்கு உதவ கூறலாம். அவர்களை எக்காரணம் கொண்டும் திட்டாதீர்கள்... பொறுமை முக்கியம். தீயில்லாமல் சமைக்க கற்றுக்கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 911

  கோடை விடுமுறையை உங்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக மாற்ற சில டிப்ஸ்!

  தைப்பது அல்லது பின்னல் : கை அல்லது இயந்திரம் மூலம் நூல் அல்லது துணி வைத்து கைவினை பொருட்களை தயாரிக்க கற்றுக்கொடுக்கலாம். இதனால், கைவினைப்பொருளின் மீதான இவர்களின் ஆர்வம் அதிகரிக்கும். பின்னல் வகுப்புகள் லேஸ்கள் போன்ற மென்மையான பின்னல் பொருட்களை உருவாக்க சிக்கலான பின்னல் முறைகளைக் கற்றுக்கொள்ள உதவும். இல்லையெனில், சிறப்பு வகுப்புகளுக்கும் அனுப்பலாம்.

  MORE
  GALLERIES

 • 1011

  கோடை விடுமுறையை உங்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக மாற்ற சில டிப்ஸ்!

  நாணயங்களை சேகரித்தல் : தற்போதையை குழந்தைகள் பலரின் ஆர்வமாக காயின் சேகரிப்பு இருந்து வருகிறது. இது குழந்தைகளுக்கு மிகவும் சுவாரஸ்யமாகவும், கல்வி சம்மந்தமான பொழுதுபோக்காகவும் இருக்கும். நாணயங்களை சேகரிப்பது, அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் உங்கள் பிள்ளையை ஊக்குவிக்கிறது. தனித்துவமான மற்றும் அரிய நாணயங்களை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் இந்த பொழுதுபோக்கில் நீங்களும் ஈடுபடலாம்.

  MORE
  GALLERIES

 • 1111

  கோடை விடுமுறையை உங்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக மாற்ற சில டிப்ஸ்!

  புகைப்படம் எடுத்தல் : போட்டோகிராஃபி தற்போது அனைவருக்கும் பிடித்த பொழுதுபோக்காக இருக்கும். ஏனென்றால், தொலைபேசி வைத்திருக்கும் அனைவரும் புகைப்படக்கலைஞர்களாக மாறிவிட்டார்கள். அவர்களுக்குத் தேவையானது கேமரா, வழிகாட்டுதல் மற்றும் நல்ல படங்களை எடுப்பதற்கான உதவிக்குறிப்புகளை வழங்குங்கள். பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற பல்வேறு இடங்களுக்கு உங்கள் குழந்தையை அழைத்துச் செல்லுங்கள், படங்களைக் கிளிக் செய்து ஜாலியாக இருங்கள்.

  MORE
  GALLERIES