முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » வெயில் காலத்தில் சிக்கலடையும் குழந்தைகளின் முடியை பராமரிக்க டிப்ஸ்..!

வெயில் காலத்தில் சிக்கலடையும் குழந்தைகளின் முடியை பராமரிக்க டிப்ஸ்..!

வெயில் காலங்களில் குழந்தைகளின் தலைமுடியில் அதிக சிக்கு, வியர்வை, உள்ளிட்டவை காணப்படும். மேலும், இந்த தலைமுடி சிக்கலை போக்குவது கொஞ்சம் கடினமான இருக்கும்.

  • 17

    வெயில் காலத்தில் சிக்கலடையும் குழந்தைகளின் முடியை பராமரிக்க டிப்ஸ்..!

    வெயில் காலம் என்றாலே பல்வேறு உடல்நல பாதிப்புகள் எளிதாக ஏற்படலாம். குறிப்பாக தலைமுடி சார்ந்த பிரச்சினைகள் அதிக அளவில் வருவது இயல்பானது தான். பொடுகு, முடி வறண்டு போவது, முடி உதிர்வு, உச்சந்தலையில் அரிப்பு போன்ற பாதிப்புகள் வெயில் காலத்தில் வரக்கூடும். பெரியவர்களுக்கே இப்படியென்றால், குழந்தைகளுக்கும் இது போன்ற பிரச்சினைகள் வருவதற்கு சாத்தியம் அதிகம். எனவே, இதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முடியை ஆரோக்கியமாக பராமரிக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 27

    வெயில் காலத்தில் சிக்கலடையும் குழந்தைகளின் முடியை பராமரிக்க டிப்ஸ்..!

    குழந்தை நல நிபுணரான திருமதி.கிஞ்சல் போபட் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்பதில், குழந்தை நலம் பற்றி பல குறிப்புகளை அவவ்போது வழங்கி வருகிறார். இவர் COO மற்றும் R for Rabbit என்கிற நிறுவனத்தின் இணை நிறுவனரும் ஆவார். கிஞ்சல் கூறுகையில், "கோடைக்காலம் குழந்தையின் மென்மையான முடியில் கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தும் காலமாகும். இதனால் முடி உதிர்ந்து போகலாம், வறட்சி அடையலாம் மற்றும் முடி உடையலாம் என்று பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே, குழந்தைகளின் தலைமுடிக்கு சரியான பராமரிப்பு மிகவும் அவசியம். அதேபோல, குழந்தைக்கு பயன்படுத்தக்கூடிய ஹேர் கேர் புராடக்ட்கள் இயற்கையான பொருட்கள் கொண்டவையா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்' என்று குறிப்பிடுகிறார். இந்த பதிவில் குழந்தைகளின் தலைமுடியை எவ்வாறு பராமரிக்கலாம் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 37

    வெயில் காலத்தில் சிக்கலடையும் குழந்தைகளின் முடியை பராமரிக்க டிப்ஸ்..!

    கடுமையாக பிரஷ்ஷிங் செய்யக் கூடாது! வெயில் காலங்களில் குழந்தைகளின் தலைமுடியில் அதிக சிக்கு, வியர்வை, உள்ளிட்டவை காணப்படும். மேலும், இந்த தலைமுடி சிக்கலை போக்குவது கொஞ்சம் கடினமான இருக்கும். எனவே, முடியில் உள்ள சிக்கலை மென்மையான முறையில் நீக்க முயற்சியுங்கள். இதற்கு மெல்லிய பற்களை கொண்ட பேபி சீப்பை பயன்படுத்தலாம். குழந்தைகளுக்காக என்று விற்பனையாகும் சீப்பில் பற்கள் அகலமாக இருப்பதால் தலைமுடியின் சிக்கலை எளிதாக நீக்கி முடியும். இது போன்ற பேபி சீப்பு பயன்படுத்துவதால் தலைமுடி சிக்கலை வலியற்ற முறையில் நீக்கலாம். தலைமுடி சிக்கலை மேலும் எளிதாக்க நீக்க, உங்கள் குழந்தைக்கு டீடாங்க்லிங் ஸ்ப்ரேயை நீங்கள் பயன்படுத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 47

    வெயில் காலத்தில் சிக்கலடையும் குழந்தைகளின் முடியை பராமரிக்க டிப்ஸ்..!

    ஈரத்தப்பத்துடன் வைத்திருங்கள்: வெயில் காலங்களில் குழந்தைகளின் தலைமுடியை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது நல்லது. இது கோடை காலத்தில் ஏற்பட கூடிய சேதம் மற்றும் முடி உடைதலை தடுக்க உதவியாக இருக்கும். இதற்கு நீங்கள் ஓட்ஸ் மற்றும் அவகேடோ போன்ற பொருட்கள் இருக்கும் ஷாம்பூவை குழந்தைக்கு பயன்படுத்தலாம். இவை குழந்தையின் முடியை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும். மேலும், குழந்தையின் முடி மென்மையாக இருக்க வாரந்தோறும் இயற்கை மூலப்பொருட்கள் அடங்கிய எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 57

    வெயில் காலத்தில் சிக்கலடையும் குழந்தைகளின் முடியை பராமரிக்க டிப்ஸ்..!

    இறுக்கமான ஹேர்ஸ்டைல்கள் வேண்டாம்! பொதுவாக குழந்தைகளின் முடி மிகவும் மென்மையாக இருப்பதால் அவர்களின் தலைமுடியில் இறுக்கமான ஹேர்ஸ்டைல் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஜடை, போனிடெயில் மற்றும் கொண்டை போன்ற இறுக்கமான ஹேர்ஸ்டைல்கள் உங்கள் குழந்தையின் தலைமுடிக்கு சேதத்தை ஏற்படுத்தலாம். எனவே, வெயில் காலங்களில் இறுக்கமான ஹேர்ஸ்டைல்களை தவிர்ப்பது நல்லது.

    MORE
    GALLERIES

  • 67

    வெயில் காலத்தில் சிக்கலடையும் குழந்தைகளின் முடியை பராமரிக்க டிப்ஸ்..!

    தொப்பி அல்லது ஸ்கார்ப் பயன்படுத்தவும்: நமது சருமத்தைப் போலவே, நமது தலைமுடியும் சூரியனின் புற ஊதாக் கதிர்களால் சேதமடைய கூடியவை. அதே போன்று, குழந்தைகளின் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, உங்கள் குழந்தையின் மென்மையான முடி சேதமடையாமல் இருக்க, அவர்களை வெயிலில் அழைத்து செல்லும்போது தொப்பி அல்லது ஸ்கார்ப் பயன்படுத்துவது அவசியம். இவ்வாறு செய்வதால் அவர்களின் தலைமுடியைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், வெப்பமான காலங்களில் அவர்களை வசதியாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க முடியும்.

    MORE
    GALLERIES

  • 77

    வெயில் காலத்தில் சிக்கலடையும் குழந்தைகளின் முடியை பராமரிக்க டிப்ஸ்..!

    ஆரோக்கியமான உணவுகள்: குழந்தைகளின் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகள் மிக முக்கியம். அந்த வகையில் பல்வேறு நன்மைகளை கொண்ட பாதாம், அக்ரூட், சியா விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்ற நட்ஸ் வகைகளை குழந்தைகளின் அன்றாட உணவில் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். அதே போன்று, தினசரி போதுமான அளவு குழந்தைகளுக்கு தண்ணீர் தருவதையும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES