யாருக்கு எப்போது என்ன நிகழும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. வாழ்க்கைத் துணை, நேசிப்பவர்கள், திடீரென்று நம்மை விட்டு பிரிவதை தாங்கிக் கொள்ள முடியாது, அதே நேரத்தில் அந்தப் பிரிவை தடுக்கவும் முடியாது. இதில் குறிப்பாக, வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள், அதுவும் குழந்தையை வைத்திருப்பவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே ஆகிவிடும்! தனியாளாக குழந்தையை எப்படி வளர்ப்பது என்பது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். குழந்தை வளர்ப்பத்தில் சிங்கிள் பேரண்ட்டாக, வாழ்க்கை துணையை இழந்தவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வுகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
இழப்பைத் தாங்கிக் கொண்டு குழந்தையை வளர்ப்பது : உங்களுக்கு கணவன் அல்லது மனைவி இறந்து போவது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் உங்கள் குழந்தையுடைய அப்பா அல்லது அம்மா என்ற மற்றொரு இடமும் வெறுமையாகிறது. எனவே இது இரட்டை இழப்பாக மிகப்பெரிய சவாலாக, இந்த வருத்தத்தில் தூக்கத்திலிருந்து வெளி வரமுடியுமா என்ற நிலையை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் ஒற்றை பெற்றோராக குழந்தையை எப்படி நல்லவிதமாக வளர்ப்பது என்பதையும் முன்னிறுத்துகிறது!
உணர்ச்சிபூர்வமான பாதிப்புகள் அதிகம் – மனைவியை இழந்த சிங்கிள் பேரண்ட் : கோவிட் தொற்று காலத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்த பல குடும்பங்கள் கணவன் அல்லது மனைவி / குழந்தையுடைய பெற்றோர் என்று யாரோ ஒருவரை இழந்து நிரந்தரமான வலியை துக்கத்தை ஏற்படுத்திய பல சம்பவங்களைக் கேட்டிருக்கிறோம். தன்னுடைய மனைவி இறந்துவிட்டார், எப்படியாவது தேற்றிக் கொண்டுதான் வரவேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்தாலும், என்னுடைய குழந்தை அம்மா வேண்டும் என்று அழும் பொழுது என்னால் எப்படி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை.ஊர் உலகமெல்லாம் என்னைப் பரிதாபமாகப் பார்க்கிறது என்று மனைவியை இழந்த ஒரு நபர் உணர்ச்சி பூர்வமாக தான் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை பகிர்ந்து கொண்டுள்ளார்.
கணவனை இழந்த, அப்பா இல்லாத குழந்தையை வளர்த்து வரும் பெண்ணின் கண்ணீர் : கணவனை இழந்து குழந்தையை வளர்க்கும் பெண்களுக்கு இருக்கும் சிக்கல்கள் வேறு. சிங்கள் பெற்றோராக ஒரு தாய் நான் எதிர்கொள்ளும் சவால்களை கூறியிருக்கிறார். குழந்தை சம்பந்தப்பட்ட அனைத்து முடிவுகளும் தான் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும், எல்லா முடிவுகளையும் எடுப்பது ஒரு வகையான குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது என்றும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய குழந்தைகள் வளர்வதை பார்ப்பது தனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனால், தன்னுடைய கணவனால் அதை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் அதைவிட அதிகமாக இருப்பதாகவும் கூறி உள்ளார். இதே போன்ற பலவிதமான அனுபவங்களை பலரும் பகிர்ந்துள்ளனர்.
பிரிவின் வருத்தத்தில் இருந்து ஓடி ஒளியாதீர்கள்: உங்களையோ அல்லது உங்கள் குழந்தையை, உங்கள் வாழ்க்கைத்துணை இழப்பில் இருந்து கவனம் சிதற வைக்க வேண்டுமென்று நீங்கள் அதைத் தவிர்க்க கூடாது. உங்களுடைய உணர்வுகளை சரியான முறையில் நீங்கள் வெளிப்படுத்தாமல், தற்காலிகமாக உங்களை பிஸியாக வைத்துக் கொள்வது என்பது பிரச்சனைகளை ஏற்படுத்தும்.நாட்பட்ட நோய்கள் எவ்வாறு உடலில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறதோ, அதே போல நீண்ட காலத்திற்கு உங்களுடைய, உங்கள் குழந்தைகளின் உணர்வுகளை நீங்கள் வெளிப்படுத்தாமலேயே இருப்பது, தீவிரமான மனநல பிரச்சனையாக முடியலாம்.
துக்கத்துடன் வரும் மாற்றங்களை கொள்ளுங்கள் : பிரிவில், இழப்பில், அது சம்பந்தப்பட்ட மாற்றங்களை எதிர்கொள்வது மற்றும் ஏற்றுக்கொள்வது மிகமிக கடினம். ஆனால் உங்கள் கணவன் அல்லது மனைவியின் இறப்பிற்கு பிறகு வரக்கூடிய மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கு நீங்கள் ஓரளவுக்கு உங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அது மட்டுமில்லாமல் உங்கள் குழந்தை சார்ந்து உங்களுடைய எதிர்காலத்தை திட்டமிடுவது வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்வதற்கு உதவும்.உதாரணமாக நீங்கள் உங்களுடைய பெற்றோரின் உதவியை கேட்கக் போகிறீர்களா, உங்கள் குழந்தைக்கு தாத்தா பாட்டியின் அரவணைப்பு தேவையா, நீங்கள் அதே இடத்தில் இருக்க வேண்டுமா அல்லது வேறு ஊருக்கு செல்ல வேண்டுமா என்பதைப் பற்றி உங்கள் குழந்தையின் எதிர்காலத்தையும் சேர்த்து நீங்கள் யோசிக்கும் பொழுது மாற்றங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம்.
வேலைகளை சரியாக திட்டமிட்டு நேரம் தவறாமல் செய்யுங்கள் : ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்ய வேண்டுமென்பதில் உறுதியாக இருந்து, திட்டமிட்டு அதனை தவறாமல் செய்யுங்கள்.உங்களுக்கு மனம் வலித்தாலும், கஷ்டமாக இருந்தாலும், அழ வேண்டுமென்று தோன்றினால் கூட அதை கொஞ்சம் ஒதுக்கி வைத்து, அன்றாட வேலைகளை செய்யுங்கள். கன்சிஸ்டன்டாக இருப்பது என்பது குழந்தைகளுக்கு நல்ல பாதுகாப்பை கொடுக்கும். அது மட்டுமில்லாமல் அப்பா அல்லது அம்மா இறந்துவிட்டார், ஆனால் இன்னொரு என்னை பார்த்துக் கொள்கிறார் என்ற உங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக உணர்வார்கள்.மகிழ்ச்சியான வீட்டில் திடீரென்று அப்பா அல்லது அம்மா இல்லாமல் இருப்பது குழந்தைகளுக்கு எவ்வளவு பாதிப்பாக இருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும். உங்களுடைய துக்கம் ஒரு பக்கம் இருந்தாலுமே, நீங்கள் தினசரி வேலைகளை செய்வதில் கவனம் செலுத்தும் பொழுது உங்களுக்கு கொஞ்ச நேரம் அது ஒரு வடிகாலாக இருக்கும்.
உங்கள் குழந்தைக்கு தேவையான ஆதரவை வழங்கத் தயாராக இருங்கள் : தந்தை அல்லது தாயை இழந்த குழந்தைகளுக்கு நிச்சயமாக மன ரீதியான, உணர்ச்சி ரீதியான, பாதிப்புகள் ஏற்படும். அடிக்கடி மன அழுத்தம் மற்றும் மன சோர்வால் அவர்கள் அவதிப்படுவார்கள். எனவே உங்கள் குழந்தைக்கு தேவையான ஆதரவையும், ஆறுதலையும் தருவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். எனவே உங்கள் குழந்தைகள் சரியாகத் தூங்காமல் இருந்தாலோ, சரியாக சாப்பிடாமல் இருந்தாலோ அல்லது தங்களை பற்றி தாழ்வாக நினைத்து கொள்ளும் சூழல் எதேனும் இருந்தாலுமே, அந்த அறிகுறிகளை நீங்கள் கண்காணித்து அவர்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவ ஆலோசனை மற்றும் கவுன்சிலிங் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள் : இப்போதெல்லாம் மன அழுத்தம் அல்லது பதற்றம் உள்ளிட்டவற்றை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. அது மட்டுமல்லாமல் மனநல மருத்துவரையோ அல்லது தெரபிஸ்ட்டையோ பார்ப்பது என்பது சாதாரணமானதாக மாறிவிட்டது. எனவே நீங்கள் மிகப்பெரிய துக்கத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்றால் தயங்காதீர்கள். உங்களால் துக்கம், உணர்ச்சி பூர்வமான பாதிப்பில் இருந்து செய்ய முடியவில்லை எனும் பட்சத்தில் நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு மருத்துவரின் ஆலோசனை, உளவியல் ஆலோசனை மற்றும் கவுன்சிலிங் ஆகியவை பெரிய அளவில் உதவும்.
உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் : சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பது பழமொழி. அதாவது நீங்கள் உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்ச்சி பூர்வமாக ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் தான் உங்களுடைய குழந்தை அல்லது குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ள முடியும். உங்களுக்கு இது கூடுதல் பாரமாக அல்லது கூடுதல் பொறுப்பாக தெரியலாம். ஆனால் உங்கள் குழந்தைக்கும் அவருடைய தந்தை அல்லது தாயை இழந்து இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. அதே நேரத்தில் குற்ற உணர்ச்சியில் எப்பொழுதுமே உங்களுக்கான சந்தோஷத்தையும் நீங்கள் தொலைக்க வேண்டாம்.உங்கள் மீது அக்கறை காட்டாமல், கவனிக்காமல் வருத்தத்திலேயே இருந்தால் உங்கள் குழந்தையும் அதனால் பாதிக்கப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள்.