ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » இரண்டாவது லாக்டவுன் : குழந்தைகளுக்கு போர் அடிக்காமல் வீட்டிற்குளேயே சமாளிக்க டிப்ஸ்..!

இரண்டாவது லாக்டவுன் : குழந்தைகளுக்கு போர் அடிக்காமல் வீட்டிற்குளேயே சமாளிக்க டிப்ஸ்..!

வீட்டுக்குள் மட்டுமே இருக்க வேண்டிய சூழல் இருப்பதால், குழந்தைகளுக்கான விளையாட்டு தோழர்கள் பெற்றோர்கள் மட்டுமே.

 • 16

  இரண்டாவது லாக்டவுன் : குழந்தைகளுக்கு போர் அடிக்காமல் வீட்டிற்குளேயே சமாளிக்க டிப்ஸ்..!

  கொரோனா கடந்த 2 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு நீண்டதொரு விடுமுறையை கொடுத்திருக்கிறது. காலையில் நேரமாக எழுந்திருக்க தேவையில்லை, பள்ளிக்கு அவசர அவசரமாக ஓடத் தேவையில்லை, வீட்டு பாடமில்லை. அவர்களுக்கான எந்தவொரு கமிட்மென்ட்ஸூம் இல்லாததால் உற்சாகமாக இருக்கும் அவர்கள், விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்.

  MORE
  GALLERIES

 • 26

  இரண்டாவது லாக்டவுன் : குழந்தைகளுக்கு போர் அடிக்காமல் வீட்டிற்குளேயே சமாளிக்க டிப்ஸ்..!

  வீட்டுக்குள் மட்டுமே இருக்க வேண்டிய சூழல் இருப்பதால், குழந்தைகளுக்கான விளையாட்டு தோழர்கள் பெற்றோர்கள் மட்டுமே. இதனால், விளையாடுவதற்கு அழைத்துக் கொண்டே இருக்கும் குழந்தைகளுக்கு, தனித் திறமைகளையும், வீட்டு வேலைகளையும் கற்று கொடுப்பதற்கு சரியான நேரம் இது. பெற்றோராகிய நீங்கள் என்ன செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 36

  இரண்டாவது லாக்டவுன் : குழந்தைகளுக்கு போர் அடிக்காமல் வீட்டிற்குளேயே சமாளிக்க டிப்ஸ்..!

  வீட்டு வேலைகள் : சுகாதாரமாக இருப்பது பற்றி குழந்தைகள் பள்ளியில் சொல்லிக்கொடுத்திருப்பார்கள். அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான சரியான தருணம் இது. வேலையை கடினமாக செய்யச் சொல்லி பணிக்காமல், அவர்களை மகிழ்ச்சியாக செய்யும்படி கேட்டுக்கொள்ளுங்கள். ஒரு வேலையை செய்யும்போது கவனக்குவிப்பும், தன்னம்பிக்கையும் அவர்களுக்குள் வளரும். செல்போன் உள்ளிட்ட டெக் பொருட்கள் பயன்படுத்துவது குறையும். வீட்டை சுற்றியிருக்கும் செடிகளை அகற்றுதல், புதிய செடிகளை நட்டு தண்ணீர் ஊற்றுதல், சமையல் கலைகளை கற்றுக்கொடுத்தல், காய்கறி நறுக்குதல் போன்ற வேலைகளை கொடுக்கலாம். நாள்தோறும் செய்யும்போது ஒழுக்கம் அவர்களுக்குள் மேம்படும்.

  MORE
  GALLERIES

 • 46

  இரண்டாவது லாக்டவுன் : குழந்தைகளுக்கு போர் அடிக்காமல் வீட்டிற்குளேயே சமாளிக்க டிப்ஸ்..!

  தனித்திறமைகளை வளர்த்தல் : உங்கள் குழந்தைகளுக்கு இருக்கும் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதில் ஈடுபடுத்தலாம். நடனம், இசை, வாசிப்பு, புதிய கலைப் பொருட்களை வடிவமைத்தல், ஓவியம் வரைதல் ஆகியவை அவர்களுக்கு புதுவிதமான கிரியேடிவ் சிந்தனைகளை உருவாக வழிவகுக்கும். செல்போன்களில் வீடியோ கேம் ஆகியவற்றை விளையாடும்போது சிந்தனைத் திறன் குறைந்து, புதிய சிந்தனை அவர்களுக்குள் தோன்றாது. கிரியேடிவ் விஷயங்களில் அவர்களை ஈடுபடுத்தும்போது உற்சாகத்துடன், மன அழுத்தம் இல்லாமல் இருப்பார்கள்

  MORE
  GALLERIES

 • 56

  இரண்டாவது லாக்டவுன் : குழந்தைகளுக்கு போர் அடிக்காமல் வீட்டிற்குளேயே சமாளிக்க டிப்ஸ்..!

  உடற்பயிற்சி  : கொரோனா காலத்தில் சுகாதாரமாக இருக்கும் அதேநேரத்தில் மனதளவிலும், உடலளவிலும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் காலை, மாலை நேரங்களில், அதனை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். தியானம் மற்றும் யோகாசனப் பயிற்சிகளையும் சொல்லி பழக்கப்படுத்தும்போது, அவர்கள் சிந்தனை முழுவதும் நல்ல எண்ணங்கள் நிறைந்ததாக அமையும். ஸ்கிப்பிங் விளையாடுதல், கை, கால்களை நீட்டுதல், குனிதல், குதித்தல் ஆகிய உடற்பயிற்சிகள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்

  MORE
  GALLERIES

 • 66

  இரண்டாவது லாக்டவுன் : குழந்தைகளுக்கு போர் அடிக்காமல் வீட்டிற்குளேயே சமாளிக்க டிப்ஸ்..!

  விளையாட்டு : விளையாட்டில் குழந்தைகளுக்கு மிகவும் ஆர்வம் இருக்கும் என்பதால், அனலிட்டிகல் மற்றும் கிரியேட்டிவிட்டி நிறைந்த விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்கலாம். செஸ், கேரம், புதிர் கணக்குகள் ஆகியவற்றை விளையாடலாம். சில இணையதளங்களில் வீடுகளுக்குள்ளேயே விளையாடும் வகையிலான கிரியேட்டிவ் விளையாட்டுகளை உருவாக்கிக் கொடுக்கின்றன. அதனை தேடிப் பிடித்து, நீங்களும் வீட்டிற்குள்ளேயே அந்த விளையாட்டுகளை முயற்சிக்கலாம்.

  MORE
  GALLERIES