சில குழந்தைகள் வயதிற்கு ஏற்ற உயரத்தை கொண்டிருக்க மாட்டார்கள். பெற்றோர்களுக்கு அதுவே பெரும் கவலையாக இருக்கும். ஆய்வுகள் உயரத்திற்கு நாம் சாப்பிடும் உணவும் காரணமாக சொல்லப்படுகிறது. சில குழந்தைகள் மரபணு காரணமாகவும் உயரமாக வளர மாட்டார்கள். அப்படிமரபணு காரணமில்லை எனில் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் உணவுகளில் இந்த காய்கறி , பருப்பு வகைகளை சேர்த்துப் பாருங்கள்.
கேரட் : வைட்டமின் ஏ நிறைந்த, கேரட் குழந்தைகளுக்கு பச்சையாகவோ அல்லது சமைத்தோ கொடுக்கலாம். இந்த பிரகாசமான ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற காய்கறியில் வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, பயோட்டின், நியாசின், மாலிப்டினம், பாஸ்பரஸ் மற்றும் ஃபைபர் ஆகியவை உள்ளன மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன.
பாதாம் : குழந்தைகளுக்கு வழக்கமாக காலையில் ஊறவைத்த பாதாம் பருப்பு கொடுங்கள். இது மூளை சுருசுருப்புக்கு உதவும். ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பாதாம் பண்டைய காலத்திலிருந்தே பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. அவை குழந்தைகளின் எலும்புகளுக்கு நன்மை பயக்கும்.