

பொதுவாக குழந்தைகளை வளர்ப்பதே கடினம்தான். ஆனால் இன்றைய தலைமுறையானது சற்று அட்வான்ஸானது. போட்டிகள், சவால்கள் நிறைந்தது. அதற்கு ஏற்ப உங்கள் குழந்தையை எப்படி வளர்க்கப்போகிறீர்கள் என்ற பொறுப்பும், சவால்களும் ஒவ்வொரு தந்தைக்கும் உள்ளன. அவை என்னென்ன பார்க்கலாம்.


உனக்காக வாழ வேண்டும் : யார் என்ன சொன்னாலும் உள்மனம் என்ன சொல்கிறதோ அதை கேட்டு பயணி. என்னவாக வேண்டும் என விரும்புகிறாயோ அதையே பின்பற்று என தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.


உண்மை பக்கம் நில் : பொய்களால் நிறந்த உலகில் உண்மைக்கே மரியாதை உண்டு. எனவே உண்மை எது ,பொய் எது என்கிற பகுத்தறிவைக் கற்றுக்கொடுங்கள். உண்மை வழியில் நிற்கக் கற்றுக்கொடுங்கள்.


மரியாதை : ஆண் குழந்தை என்றால் கத்துவது, கோபப்படுவதுதான் ஆண் தன்மை என்றில்லை. மற்றவர்களை மதிப்பதும், உன்னை நீ மதிப்பதிலும் உண்டு என்று கற்றுக்கொடுங்கள். அவ்வழியில் உன் தேவையை மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என கற்றுக்கொடுங்கள்.


நேரத்தை கையாளுதல் : நேரம் என்பது எவ்வளவு பொன்னானது என்பதை புரிய வையுங்கள். வீடியோ கேம், சாட், செல்ஃபோன் என நேரத்தை செலவழிக்காமல் பயனுடையதாக எப்படி மாற்ற வேண்டும் எனக் கற்றுக்கொடுங்கள்.


பொறுப்பு : நல்ல தந்தையாக தன் பிள்ளைகளுக்கு தான் கூறும் வார்த்தை, செயல் மற்றும் கடமைகளில் எப்படி பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். மற்றவர்கள் மீது பழி போடுவதும், தப்பிப்பதும் சிறந்த மனிதனுக்கு அழகல்ல என்பதை சொல்லிக்கொடுங்கள்.


ஆரோக்கியமான உறவுமுறை : நண்பனாக இருந்தாலும், உறவினர்கள் யாரையும் காயப்படுத்துதல் தவறு எனக் கற்றுக்கொடுங்கள். மரியாதை, மன்னிப்பு , விட்டுக்கொடுத்தல் , அன்பு , அக்கறை என ஆரோக்கியமான வழியில் உறவுகளை எப்படி கொண்டு செல்வது என்று கற்றுக்கொடுங்கள்.