குழந்தைகளின் சரியான வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சி என்று வரும் போது குறிப்பாக வளரும் ஆண்டுகளில், அவர்களின் உயரம் மற்றும் எடை ஆகியவை முக்கியமானவையாக கருதப்படுகின்றன. ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானது என்பதால் ஒரு சில குழந்தைகள் உடல் ரீதியாக சரியான வளர்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஒரு சில குழந்தைகள் மிக அதிக வளர்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
பல பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் உயரத்தை பற்றி கவலை கொண்டுள்ளார்கள். சரியான உணவு, ஊட்டச்சத்து மற்றும் போதுமான உடல் செயல்பாடு ஆகியவை உங்கள் குழந்தையின் உயரத்தை அதிகரிப்பதில் முக்கியமானவை என்றாலும், மரபணுக்களும் பங்கு வகிக்கின்றன. குழந்தையின் உயரம் பற்றி கவலை கொண்டிருக்கும் பெற்றோர்களில் நீங்களும் ஒருவர் என்றால், நன்கு உயரமாக மற்றும் ஆரோக்கியமாக வளர கீழே குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சிகளை உங்கள் குழந்தைகள் செய்யுமாறு பார்த்து கொள்ளலாம்.உங்கள் குழந்தை விரைவாக உயரமாக வளர உதவும் எளிய பயிற்சிகள் இதோ..
ஹேங்கிங் பயிற்சிகள்: ஹேங்கிங் அதாவது தொங்கும் பயிற்சிகள் உயரத்தை சிறந்த பயிற்சிகளில் ஒன்றாகும். எளிய ஹேங்கிங் பயிற்சிகள் உங்கள் குழந்தைகளின் உடலை ஸ்ட்ரெச் செய்து, அவர்களின் முதுகெலும்பை நீட்டி, தசை வலிமையை வளர்க்கும். இது உடலை டோனிங் செய்வதற்கும் ,வடிவமைப்பதற்கும் உதவுகிறது. இதன் மூலம் உங்கள் குழந்தைகளின் உயரம் அதிகரிக்கும்.
யோகா போஸ்கள்:யோகா ஆசனங்கள் உடலின் உயரத்தை அதிகரிக்க தேவையான தோரணை (posture) மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த குழந்தைகளுக்கு உதவுகின்றன. குழந்தைகளுக்கு கோப்ரா போஸ் அல்லது கவ் போஸ் போன்ற எளிய யோகா போஸ்களை கற்று தரலாம். இவை தவிர குழந்தைகள் உயரமாக வளர சூரிய நமஸ்காரம், சக்ராசனம் போன்ற யோகாசனங்களும் சிறந்தவை.
ஸ்கிப்பிங்: ஸ்கிப்பிங் பயிற்சி என்பது அனைவரும் ரசிக்கும் ஒரு வேடிக்கையான பயிற்சியாக இருக்கிறது. மேலும் இந்த பயிற்சி உயரத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. குதித்து குதித்து ஸ்கிப்பிங் ஆடுவது குழந்தைகளின் தலை முதல் கால் வரை தூண்டி செல்களை சுறுசுறுப்பாக்குகிறது. அவர்கள் உடலின் சீரான வளர்ச்சிக்கும், உயரத்தை அதிகரிப்பதற்கும் ஸ்கிப்பிங் சிறந்தது.