முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பிறந்த குழந்தையின் சரும பராமரிப்பு பற்றி மருத்துவர்களின் வழிகாட்டுதல்..!

பிறந்த குழந்தையின் சரும பராமரிப்பு பற்றி மருத்துவர்களின் வழிகாட்டுதல்..!

குழந்தையை குளிப்பாட்டிய பிறகு அல்லது ஸ்பாஞ்ச் பாத் செய்த பிறகு மென்மையான லேசாக ஈரத்துடன் இருக்கும் பொழுதே குழந்தைக்கு மாய்ஸ்சரைசரை அப்ளை செய்ய வேண்டும்.

 • 19

  பிறந்த குழந்தையின் சரும பராமரிப்பு பற்றி மருத்துவர்களின் வழிகாட்டுதல்..!

  சரும பராமரிப்பு என்று வரும் பொழுது குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமான கவனம் தேவை. பிறந்த குழந்தையின் சருமம் பெரியவர்களின் சருமத்தை விட 30% மெல்லியதாக இருக்கும் எனவே அதில் இருக்கும் ஈரப்பதம் மிக விரைவில் குறைந்து விடும். அது மட்டுமிலாமல், குழந்தைகளுக்கு அலர்ஜி, ரேஷஸ், உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எளிதில் எரப்டக்கூடும். குழந்தைகளுக்கென்றே இருக்கும் தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் அதில் கூட ஒரு சில தயாரிப்புகளில் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதால், பேபி ஸ்கின் கேர் தயாரிப்புகளை தேர்வு செய்வதில் மருத்துவர்களின் ஆலோசனை தேவை. குழந்தைகளின் சருமத்தை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதைப் பற்றி மருத்துவர்களின் பரிந்துரைகளும் வழிகாட்டுதலும் இங்கே.

  MORE
  GALLERIES

 • 29

  பிறந்த குழந்தையின் சரும பராமரிப்பு பற்றி மருத்துவர்களின் வழிகாட்டுதல்..!

  குழந்தைகளின் சரும பராமரிப்பு என்று வரும்போது அவர்களின் சருமம் நீண்ட காலத்திற்கு ஈரத்தன்மையுடன் இருப்பதற்கான சரும பராமரிப்பு முறையை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைகிரார்கள். பிறந்த குழந்தைக்கு பொருந்தக்கூடிய சரும பராமரிப்பு முறையை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் இதற்கு மருத்துவர்கள் ஏ பி சி என்ற மூன்று விஷயங்களை நினைவில் வைத்துக் கொண்டால் போதும் என்று கூறுகிறார்கள். பல்வேறு பிரபலமான மருத்துவமனைகளில் குழந்தைநல மருத்துவ மற்றும் ஆலோசகராக பணியாற்றுபவர்கள், குழந்தை சிறப்பு மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் குழந்தைகளின் சரும பராமரிப்பு குறிப்பிடப்படும் 3 விஷயங்கள் என்றால் என்ன என்பதைப் பற்றி கூறியது பின்வருமாறு.

  MORE
  GALLERIES

 • 39

  பிறந்த குழந்தையின் சரும பராமரிப்பு பற்றி மருத்துவர்களின் வழிகாட்டுதல்..!

  போதுமான மாய்ஸ்சரைஸர் : மாய்ஸ்சரைஸர் என்பது பெரியவர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய சரும பராமரிப்பு பொருள் அல்ல. குழந்தைக்கும் இது மிக மிக அவசியம். வெதுவெதுப்பான அல்லது சூடான நீரில் குளிப்பாட்டும் போதும், பல அடுக்கு ஆடைகளை அணிவிக்கும் பொழுதும், குழந்தைகள் தவழும் பொழுது, வேக வேகமாக குழந்தைகள் ஓடும் பொழுது அவர்களுடைய சருமம் வெப்பத்திற்கு வெளிப்பட்டு சருமத்தில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து, வறண்டு போகிறது.

  MORE
  GALLERIES

 • 49

  பிறந்த குழந்தையின் சரும பராமரிப்பு பற்றி மருத்துவர்களின் வழிகாட்டுதல்..!

  எனவே குழந்தைகளுக்கு மாய்ஸ்சரைசிங் மிக மிக அவசியம். அதுமட்டுமில்லாமல் குளிர்காலத்தில் அவை சருமத்தில் ஒரு லேயராக செயல்பட்டு குழந்தைகள் கதகதப்பாக இருப்பதை உறுதிசெய்யும்.

  MORE
  GALLERIES

 • 59

  பிறந்த குழந்தையின் சரும பராமரிப்பு பற்றி மருத்துவர்களின் வழிகாட்டுதல்..!

  மருத்துவர்கள் பரிந்துரைக்க கூடிய மென்மையான மற்றும் சருமத்திலிருந்து எளிதில் ஈர்த்துக் கொள்ளக்கூடிய குழந்தை சரும பராமரிப்பும் தயாரிப்புகளை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். பொதுவாகவே, குழந்தைகளுக்காக விற்பனை செய்யப்படும் தயாரிப்புகளில் மில்க் புரோட்டீன், வைட்டமின் ஈ, வைட்டமின் பி5, கற்றாழை, உள்ளிட்ட பலவிதமான சருமத்துக்கான ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இவற்றில் சருமத்தில் எரிச்சல் ஊட்டும் எந்தவிதமான பொருட்களும் அல்லது ரசாயனங்களும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. பேபி லோஷனை உடலுக்கும், கிரீமை முகத்துக்கும் பயன்படுத்த வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 69

  பிறந்த குழந்தையின் சரும பராமரிப்பு பற்றி மருத்துவர்களின் வழிகாட்டுதல்..!

  குளியல் முறை : இந்திய பீடியாட்ரிக் அமைப்பு வெளியிட்ட வழிமுறைகளின்படி, குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட முறையில் சரியாக குளிப்பாட்டுவது என்பது குளிர்காலத்தில் குழந்தைகளின் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை தக்க வைத்து சரும பாதிப்பு எதையும் ஏற்படுத்தாது. குழந்தைகள் சுத்தமாக சுகாதாரமாக இருப்பதற்கு இரண்டு முறை குளிப்பாட்டுவதை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் சூடான நீரில் குளிப்பாட்டுவதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீரில் குழந்தைகளை குளிப்பாட்ட இந்திய குழந்தை நல அமைப்பு பரிந்துரைக்கிறது. குழந்தைகளின் மென்மையான மற்றும் சென்சிட்டிவான சருமத்திற்கு ஏற்ற மைல்டான கிளென்சர்களை பயன்படுத்தலாம். இவற்றில் pH லெவல் சரியான அளவில் இருக்கும் மற்றும் அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய எந்தவித உட்பொருளும் சேர்க்கப்பட்டு இருக்காது.

  MORE
  GALLERIES

 • 79

  பிறந்த குழந்தையின் சரும பராமரிப்பு பற்றி மருத்துவர்களின் வழிகாட்டுதல்..!

  குழந்தையை குளிப்பாட்டிய பிறகு அல்லது ஸ்பாஞ்ச் பாத் செய்த பிறகு மென்மையான லேசாக ஈரத்துடன் இருக்கும் பொழுதே குழந்தைக்கு மாய்ஸ்சரைசரை அப்ளை செய்ய வேண்டும். இது எளிதில் உரிந்து கொள்ளும் மற்றும் நீண்ட நேரத்திற்கு ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

  MORE
  GALLERIES

 • 89

  பிறந்த குழந்தையின் சரும பராமரிப்பு பற்றி மருத்துவர்களின் வழிகாட்டுதல்..!

  சுத்தமான டயாப்பர்கள் : வழக்கமாக இருப்பதை விட குளிர்ச்சியான நாட்களில் குழந்தைகளுக்கு ராஷஸ் அதிகமாக ஏற்படும். ஏற்கனவே குளிரை தாங்கும் அளவுக்கு மூன்று அல்லது நான்கு லேயர்கள் ஆடை அணிவிக்க வேண்டும். இதைத் தவிர்த்து குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் டயாப்பர்களையும் மாற்ற கூடிய சூழ்நிலை ஏற்படும். எனவே டயாப்பர் பகுதி பொதுவாக ஈரமாக மற்றும் சென்சிட்டிவான பகுதியாக இருப்பதால், உராய்வு ஏற்பட்டு குழந்தையின் சருமம் பாதிக்கப்படும்.

  MORE
  GALLERIES

 • 99

  பிறந்த குழந்தையின் சரும பராமரிப்பு பற்றி மருத்துவர்களின் வழிகாட்டுதல்..!

  சில குழந்தைகளுக்கு தொற்றும் ஏற்படும். எனவே குழந்தைகளுக்கு நீண்ட நேரம் டயப்பரை அணிவிக்காமல் அவ்வப்போது மாற்றி, டயாப்பர் பகுதிகளை முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும். ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருக்கும் வைப்ஸ்களை பயன்படுத்துவதை தவிர்த்து வெது வெதுப்பான நீரில் நனைத்த பஞ்சு அல்லது சுத்தமான துணியை வைத்து குழந்தைகளை சுத்தம் செய்யலாம். அல்லது, pH லெவல் நியூட்ரலாக இருக்கும் அல்லது மைல்டாக இருக்கும் பேபி வைப்ஸ்களை பயன்படுத்தலாம்.

  MORE
  GALLERIES