முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உங்களுக்கு இப்போதுதான் முதல் குழந்தை பிறந்துள்ளதா..? நீங்கள் செய்ய வேண்டியதும்.. செய்யக்கூடாததும்..

உங்களுக்கு இப்போதுதான் முதல் குழந்தை பிறந்துள்ளதா..? நீங்கள் செய்ய வேண்டியதும்.. செய்யக்கூடாததும்..

குழந்தையின் உடல் நலன் தொடர்பாக என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை தெரிந்து வைத்து செயல்பட வேண்டும். இதனால் தேவையற்ற பதற்றங்களை தவிர்க்கலாம்.

 • 110

  உங்களுக்கு இப்போதுதான் முதல் குழந்தை பிறந்துள்ளதா..? நீங்கள் செய்ய வேண்டியதும்.. செய்யக்கூடாததும்..

  குழந்தை வளர்ப்பு என்பது மிக கடினமான ஒன்றுமல்ல, மிக எளிதான ஒன்றுமல்ல. சிலர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் குழந்தையை அதன் போக்கில் விட்டுவிடுவார்கள். பின்னர் ஏதேனும் பிரச்சினை வந்தால் மட்டுமே கவலை அடைவார்கள். சிலர் குழந்தை மீது அக்கறை காட்டுகிறேன் என்ற பெயரில் எதற்கெடுத்தாலும் அச்சம் அடைவார்கள்.

  MORE
  GALLERIES

 • 210

  உங்களுக்கு இப்போதுதான் முதல் குழந்தை பிறந்துள்ளதா..? நீங்கள் செய்ய வேண்டியதும்.. செய்யக்கூடாததும்..

  உண்மையில், குழந்தை வளர்ப்பில் அதீத அக்கறை மற்றும் அலட்சியம் என இரண்டுமே தவறானது தான். குழந்தைகளின் தேவைகளை உணர்ந்து அவற்றை செய்து கொடுக்க வேண்டும். குழந்தையின் உடல் நலன் தொடர்பாக என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை தெரிந்து வைத்து செயல்பட வேண்டும். இதனால் தேவையற்ற பதற்றங்களை தவிர்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 310

  உங்களுக்கு இப்போதுதான் முதல் குழந்தை பிறந்துள்ளதா..? நீங்கள் செய்ய வேண்டியதும்.. செய்யக்கூடாததும்..

  வழக்கத்திற்கு மாறாக மூச்சு விடுதல் : குழந்தைகளுக்கு பல சந்தர்பங்களில் மூச்சு இரைப்பது போல தென்படும். சில சமயம், மூச்சு விடாததைப் போல இருக்கும். இதைப் பார்த்து சட்டென்று பயந்துவிடக் கூடாது. மூக்கில் ஏற்படுகின்ற அடைப்புகள் காரணமாக இதுபோன்று நடக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 410

  உங்களுக்கு இப்போதுதான் முதல் குழந்தை பிறந்துள்ளதா..? நீங்கள் செய்ய வேண்டியதும்.. செய்யக்கூடாததும்..

  ஹார்மோன் மாற்றம் : குழந்தை சில சமயம் அசைவின்றி காணப்படும். உடலில் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சேருவதே இதற்கு காரணமாகும். கர்ப்பப்பை வழியாகவும், தாய்ப்பால் வழியாகவும் இந்த ஹார்மோன் குழந்தைக்கு சென்றடைகிறது.

  MORE
  GALLERIES

 • 510

  உங்களுக்கு இப்போதுதான் முதல் குழந்தை பிறந்துள்ளதா..? நீங்கள் செய்ய வேண்டியதும்.. செய்யக்கூடாததும்..

  தூக்கி வாரிப்போடுதல் : குழந்தை அசந்து தூங்கும் சமயம் அல்லது விளையாடிக் கொண்டிருக்கும் சமயம், திடீரென்று தூக்கிவாரிப் போட்டதைப் போல காணப்படும். தூக்கத்தில் நிகழுகின்ற சாதாரண பிரச்சனை இது. இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை.

  MORE
  GALLERIES

 • 610

  உங்களுக்கு இப்போதுதான் முதல் குழந்தை பிறந்துள்ளதா..? நீங்கள் செய்ய வேண்டியதும்.. செய்யக்கூடாததும்..

  மார்பில் கட்டிகள் : உங்கள் செல்லக் குழந்தையின் மார்பு பகுதியில் ஏதேனும் புள்ளிகள் அல்லது கட்டிகள் தென்படலாம். மார்பு வளர்ச்சிக்காக ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோலேக்டின் ஹார்மோன்கள் அதிகப்படியாக சுரப்பதன் எதிர் விளைவாக இதுபோல தென்படலாம்.

  MORE
  GALLERIES

 • 710

  உங்களுக்கு இப்போதுதான் முதல் குழந்தை பிறந்துள்ளதா..? நீங்கள் செய்ய வேண்டியதும்.. செய்யக்கூடாததும்..

  மார்பில் பால் : ஆண் குழந்தைகள் சிலரின் மார்புக் காம்புகளில் இருந்து பால் போன்ற திரவம் கசியும். இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. உடலில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்களால் இது நிகழும்.

  MORE
  GALLERIES

 • 810

  உங்களுக்கு இப்போதுதான் முதல் குழந்தை பிறந்துள்ளதா..? நீங்கள் செய்ய வேண்டியதும்.. செய்யக்கூடாததும்..

  ரத்தம் கக்குதல் : தாய்ப்பால் ஊட்டி முடித்த பிறகு சில குழந்தைகள் துப்பும் எச்சிலில் ரத்தம் கலந்திருக்கும். உங்கள் மார்புக் காம்புகளில் புண் இருப்பதன் காரணமாக அல்லது குழந்தையின் உணவுக் குழாயில் ஏற்பட்டுள்ள புண் காரணமாக இதுபோல நிகழக் கூடும்.

  MORE
  GALLERIES

 • 910

  உங்களுக்கு இப்போதுதான் முதல் குழந்தை பிறந்துள்ளதா..? நீங்கள் செய்ய வேண்டியதும்.. செய்யக்கூடாததும்..

  ஆரஞ்சு சருமம் : மருத்துவ ரீதியாக இந்த பிரச்சினைக்கு கரோடெனீமியா என்று பெயர். கரோடின் சத்து மிகுந்த கேரட் போன்ற உணவுகளை குழந்தைகள் அதிகம் உட்கொள்வதன் காரணமாக இதுபோல நிகழக் கூடும்.

  MORE
  GALLERIES

 • 1010

  உங்களுக்கு இப்போதுதான் முதல் குழந்தை பிறந்துள்ளதா..? நீங்கள் செய்ய வேண்டியதும்.. செய்யக்கூடாததும்..

  எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும்? : வளரும் குழந்தைகளுக்கு ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக சின்ன, சின்ன பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பானது தான். அவை தாமாகவே குணமாகிவிடும். அவை நீடித்திருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை செய்யலாம்.

  MORE
  GALLERIES