ஸ்கள் வரும் போகும், ஆனால் கிளாசிக்கான சில விஷயங்கள் எப்போதும் பழையது போல் தோன்றாது. இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் முறைக்கும் பொருந்தும். குழந்தைகள் வீட்டில் இருக்கும் நேரத்தில் அவர்களை மகிழ்ச்சியாக மற்றும் உற்சாகமாக வைத்திருக்க பெற்றோர்கள் பல்வேறு வழிகளை கையாள்கிறார்கள். பல்வேறு தந்திரங்களை பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் இந்த டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகள் பெற்றோர்களுடன் நேரத்தை செலவிடுவதை விட பெரும்பாலும் டிவி, ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் என ஏதாவதொரு ஸ்கிரினின் முன்னால் தான் தங்கள் பொழுதை கழிக்கிறார்கள்.
இந்த ட்ரெண்ட் எல்லாமே கடந்த சில வருடங்களுக்குள் வந்ததுதான். இதற்கு முன்னால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நேரத்தை பல பயனுள்ள வகைகளில் செலவழிக்க உதவியாக இருந்தார்கள். அத்தகைய பல விஷயங்களை அப்போது சிறுவர்களாக இருந்த பல பெற்றோர்கள் இப்போது மறந்தே விட்டார்கள். இவற்றை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
வெளியில் நேரம் செலவிடுவது : மனிதர்களின் சிறந்த நண்பன் இயற்கை. நீங்கள் குழந்தைகளாக இருக்கும்போது பள்ளி விட்டு வந்ததும் மாலை நேரத்தில் மற்றும் விடுமுறை நாட்களில் காலை முதல் மாலை வரையிலும் நாம் வீட்டில் இருப்பதை நம் பெற்றோர்கள் அதிகம் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்றைய குழந்தைகள் வெளியே தெருவுக்குள் இறங்கி மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதை விட ஆன்லைன் கேம்களைதான் அதிகம் விளையாடி கொண்டிருக்கிறார்கள். வெளியில் நேரத்தை செலவழிப்பதை விட வீட்டிற்குள்ளேயே அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை டிஜிட்டல் டிவைஸ்களில் மூழ்கியிருப்பதிலிருந்து வெளியே கொண்டு வந்து, வீட்டை விட்டு வெளியே சென்று விளையாட ஊக்குவிக்க வேண்டும்.
குடும்பத்துடன் சேர்ந்து தினமும் டின்னர் : பல குடும்பங்களில் ஒன்றாக சேர்ந்து உணவுகளை சாப்பிடும் பழக்கம் இன்னும் பின்பற்றப்பட்டு வந்தாலும், முன்பு போல பரவலாக பின்பற்றப்படுவது இல்லை. வேலை நேரம் மற்றும் தொழில் வாழ்க்கை காரணமாக பலரின் வாழ்க்கை மிகவும் பிஸியாவே இருக்கிறது. சிலர் சாப்பிட கூட நேரமில்லாமல் ஓடி கொண்டிருக்கிருக்கிறார்கள். இருப்பினும் வழக்கமான அடிப்படையில் குறைந்தபட்சம் குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவு சாப்பிடுவது மிகவும் உற்சாகமான அனுபவத்தை கொடுக்கும். இது பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையிலான பிணைப்புகளை வலுப்படுத்த சிறந்த வழியாகும்.
கொண்டாட்டங்கள் : முன்பு ஒரு கொண்டாட்டம் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி நிறைந்த அழகான ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது கொண்டாட்டங்கள் என்பது எவ்வளவு ஆடம்பரமாக கொண்டாடப்படுகிறது. எவ்வளவு பேர் அழைக்கப்படுகிறார்கள் என்பதை பற்றியதாக இருக்கிறது. குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஒரு விசேஷ நிகழ்வை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு குறிப்பிட்ட கொண்டாட்டத்தின் சாரத்தை உயிர்ப்பாக வைத்திருப்பதும் அவசியம் தானே. நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் என குறைவான கூட்டத்தை கொண்டு ஆனால் அதிக அன்பு நிறைந்த பழையகால கொண்டாட்டங்களை மீண்டும் கொண்டு வருவது உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் வித்தியாசமான மற்றும் நல்ல அனுபவத்தை தரும்.
இரவு நேர விளையாட்டுக்கள் : படுக்க செல்லும் வரை ஃபோன்கள், லேப்டாப்ஸ், டேப்லெட்ஸ்களை வைத்து கொண்டே டிஜிட்டல் கேம்ஸ்களை விளையாடும் உங்கள் குழந்தைகளுக்கு லுடோ, பரமபதம், செஸ், கேரம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாட கற்று தந்து அவர்களுடன் நீங்களும் விளையாடி அவர்களின் இரவு நேரத்தை இனிமையாக்குங்கள். இந்த கேம்ஸ் ஆன்லைனில் இருக்கும் என்றாலும், நேரடியாக விளையாடுவதில் கிடைக்கும் அனுபவத்தை அவர்களுக்கு கொடுப்பது சிறப்பாக பொழுதை கழிக்க உதவும்.
குழந்தைகளை அவர்களாகவே இருக்க விடுங்கள் : இப்போது 5 அல்லது 6 வயது குழந்தைகள் கூட அதை செய்து விட்டது. இதை செய்து விட்டது என சாதனை பட்டியல் வாசிக்கப்படுகிறது. ஆனால் உங்கள் குழந்தை எப்படிப்பட்டவர்கள், எவ்வளவு அழுத்தம் தங்குவார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். எனவே போட்டித்தன்மையுடனும், எதிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற உணர்வுடனும் வளர்த்து அவர்களது குழந்தை பருவத்திற்கு இடையூறு செய்யாதீர்கள். குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க அனுமதிப்பது தான் நல்லது. அப்போது தான் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதை அவர்களே அறிந்து கொள்ள முடியும்.