முதல்முறையாக ஒரு பெண் தாயாக மாறுவதும், இந்த உலகிற்கு ஒரு புதிய உயிரை அறிமுகப்படுத்துவதும் ஒரு பெண் அனுபவிக்கக்கூடிய சிறந்த உணர்வுகளில் ஒன்றாகும். பல வேதனை வலிகள் இருந்தாலும் ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் இந்த ஒரு தருணத்தை அனுபவிப்பது என்பது ஒரு வரம் தான். வாழ்க்கையின் இந்த புதிய கட்டத்தின் உணர்வு கடந்த காலங்களில் இருந்ததை விட முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இருப்பினும், முதன் முறையாக தாய்மையடைந்த பிறகு பெண்கள் பல சவால்களையும் சிக்கல்களையும் சந்திக்க நேரிடும். எல்லாமே முதல் முறையாக நடப்பதால், தாய்மார்கள் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்வது என்பது சற்று கடினம்.
முதன்முறையாக தாய்மை அடையும்போது, பெண்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளில் ஒன்று தாய்ப்பால் கொடுப்பது. அனுபவமின்மை காரணமாக, ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய சரியான முறை அல்லது தாய்ப்பால் கொடுக்கும் முன்பு அவர்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி பலருக்கு தெரியாது. எனவே, முதல் முறையாக தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பால்கொடுக்கும் போது அவர்கள் மனதில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
2. படுத்த நிலையில் தாய்ப்பால் கூடாது: (No lying down) : பல தாய்மார்கள் படுத்துக்கொண்டே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பார்கள். ஆனால் இந்த நிலை புதிதாக பிறந்த குழந்தைக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கும். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு படுத்துக் கொண்டு தாய்ப்பால் கொடுக்கும்போது அவர்களில் காது நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
4. கவனமாகப் பிடித்துக் கொள்ளுங்கள் (Hold carefully) : தாய்ப்பால் கொடுத்த பிறகு, குழந்தையை உங்கள் தோளில் வைத்துக்கொண்டு, முதுகில் இரண்டு-மூன்று நிமிடங்கள் தடவவும். இது பாலை சரியாக ஜீரணிக்க உதவும். இந்த சமயத்தில் குழந்தையின் கழுத்து பகுதியை மிக கவனமாக பிடித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் பிறந்த குழந்தைக்கு கழுத்து பகுதி சரியாக நிற்காது.
6. மார்பக பம்பைப் பயன்படுத்தவும் (Use breast pump) : புதிதாக தாய்மையடைந்த பெண்கள் பலர் தங்கள் குழந்தைக்கு இயற்கையான முறையில் தாய்ப்பால் கொடுப்பதில் சில சிக்கலைகளை சந்திப்பார்கள். சில சமயங்களில் குழந்தைக்கு தாயின் மார்பில் இருந்து பாலை உறிஞ்ச முடியாமல் போகலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மார்பக பம்பைப் பயன்படுத்தி பாலை வெளியே எடுக்கலாம்.
தாயின் பால் குழந்தைக்கு அற்புதமான நன்மைகளைக் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் புதிதாகப் பிறந்த குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமானது. எனவே, தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவதோடு புதிதாக தாய்மையடைந்தவர்கள் மேற்கண்ட குறிப்புகளை கவனமாக மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள்