ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » முட்டை முதல் பிராக்கோலி வரை… குழந்தைகளை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகள்

முட்டை முதல் பிராக்கோலி வரை… குழந்தைகளை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகள்

ஆரோக்கியமான உணவுகளை வித்தியாசமான ஸ்டைலில் நீங்கள் தயார் செய்து கொடுக்கும்போது, அந்த உணவை சாப்பிட்ட மகிழ்ச்சியிலேயே நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருப்பார்கள்.

 • 16

  முட்டை முதல் பிராக்கோலி வரை… குழந்தைகளை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகள்

  குழந்தைகள் நாள் முழுவதும் ஆக்டிவாக இருக்க வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள், அவர்களுக்கான உணவில் கவனத்தை செலுத்துவது நல்லது. ஆரோக்கியமான உணவுகளை வித்தியாசமான ஸ்டைலில் நீங்கள் தயார் செய்து கொடுக்கும்போது, அந்த உணவை சாப்பிட்ட மகிழ்ச்சியிலேயே நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருப்பார்கள். அதேநேரத்தில் அந்த உணவுகள் ஆரோக்கியமானதாகவும், ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருக்க வேண்டும். அப்படியான உணவுகள் என்ன என்று கேட்கிறீர்களா?. இது உங்களுக்கான லிஸ்ட்.

  MORE
  GALLERIES

 • 26

  முட்டை முதல் பிராக்கோலி வரை… குழந்தைகளை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகள்

  1. தானியங்கள் - நார்ச்சத்து உணவுகள் : எண்ணெய் பலகாரங்கள் மற்றும் எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட உணவுகளைக் கொடுப்பதைக் காட்டிலும், நார்ச்சத்து மிக்க ஆரோக்கியமான உணவுகளான தானியங்களை சமைத்து கொடுப்பது நல்லது. செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தாத இந்த உணவுகள், அவர்களை நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். எண்ணெய் உணவுகள், குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் சோர்வை ஏற்படுத்தக்கூடியவை.

  MORE
  GALLERIES

 • 36

  முட்டை முதல் பிராக்கோலி வரை… குழந்தைகளை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகள்

  2. நீர் சத்து பழங்கள் : நீர் சத்து நிறைந்த பழங்களான தர்ப்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய், சுரைக்காய், நீர்ப்பூசணிக்காய் உள்ளிட்டவைகளை ஸ்நாக்ஸாகவும், உணவுகளிலும் சேர்த்துக் கொடுக்கலாம். உடலில் நீர்ச்சத்து மிக மிக அவசியம். குழந்தைகள் அதிகமாக விளையாடுவார்கள் என்பதால், போதுமான நீரை எடுத்துக் கொள்ளமாட்டார்கள். அதனால், குடிநீருக்கு இணையாக இதுபோன்ற பழங்களை, அன்றாடம் காலை மற்றும் மாலைப் பொழுதுகளில் பெற்றோர்கள் கொடுத்தால், குழந்தைகள் ஆக்டிவாக இருப்பார்கள்.

  MORE
  GALLERIES

 • 46

  முட்டை முதல் பிராக்கோலி வரை… குழந்தைகளை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகள்

  3. கிரீக் யோகார்ட் : யோகார்ட் என்பது தயிரில் தயாரிக்கப்படுவது. யோகார்ட்டில் பல வகை இருந்தாலும் கிரீக் யோகார்ட்டையே உணவியலாளர்கள் அதிகம் பரிந்துரைக்கின்றனர். பாலை சுட வைத்து ஆறிய நிலையில் மோர் சேர்த்து இரவு முழுவதும் வைக்கப்பட்டால், அவை புளித்து தயிராக மாறும். யோகார்ட் என்பது, பாலை நன்றாக சுட வைத்து, ஆடை சிதைவுறாமல் ஏற்கனவே இருக்கும் யோகார்ட்டின் சிறு பகுதியை சேர்த்து வெதுவெதுப்பான நீரில் சுமார் 8 முதல் 12 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பின்பு, பிரிட்ஜில் 4 மணி நேரம் வைத்து, அதன்பிறகு சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

  MORE
  GALLERIES

 • 56

  முட்டை முதல் பிராக்கோலி வரை… குழந்தைகளை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகள்

  4. ஓட் மீல் : காலைநேரத்துக்கு குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த உணவு ஓட்மீல். புரதச்சத்து மற்றும் போதுமான ஊட்டச்சத்துகள் நிரம்பியிருக்கிறது. வெறுமனே ஓட்மீலை மட்டும் கொடுத்தால் குழந்தைகளுக்கு பிடிக்காமல் கூட போகலாம். பாதாம், முந்திரி, கருப்பு திராட்சை ஆகியவற்றையும் சேர்த்துக் கொடுத்தால், ஆர்வமாக சாப்பிடுவார்கள்.

  MORE
  GALLERIES

 • 66

  முட்டை முதல் பிராக்கோலி வரை… குழந்தைகளை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகள்

  5. மீன் : சால்மன் மீனில் ஓமேகா 3 ஆசிட் நிறைந்திருக்கிறது. இதனை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இவை தவிர முட்டை, பிராக்கோலி மற்றும் நட்ஸ்களான பேரிட்சை, பாதாம், முந்திரி உள்ளிட்டவைகளும், அவர்களுக்கு கொடுக்கும் உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இந்த உணவுகள் எல்லாம் உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருப்பவை.

  MORE
  GALLERIES