திருமணம் ஆன பெண்களின் வாழ்க்கையில் கர்ப்பம் என்பது ஒரு பெரிய வரப்பிரசாதமாகும். அத்தகைய சிறப்பு மிக்க கர்ப்ப காலத்தில் பெண் மனதளவிலும் உடல் அளவிலும் பல்வேறு மாற்றங்களைப் பெறுகின்றனர். விரைவில் வீட்டிற்கு ஒரு புதிய வருகை வரும் என்ற ஆவலுடன் காத்திருக்கும் போது, ஏதேனும் தவறு நடந்து விடுமோ என்ற பயமும் அவ்வாறு நேர்ந்தால் என்ன செய்வது என்று தெரியாமலும் நீங்கள் கவலைப்படலாம். அப்படியானால் கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் கருவுற்ற நாள் முதல் பெண்கள் ஒவ்வாமையை எதிர்கொள்வதால் பெரும்பாலும் உணவை தவிர்த்து விடுவார்கள். பலவீனமாக இருக்கும் பெண்களுக்கு கருச்சிதைவு உண்டாக வாய்ப்புண்டு. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் உணவு முறையும் அதில் ஒன்றாக கூறலாம். அதனால்தான் மருத்துவர்கள் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவார்கள்.
வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியமும் மூளை வளர்ச்சியும் சிறப்பாக இருக்க சத்துக்கள் மிக்க உணவுகள் தான் உதவி புரிகிறது. முதல் மூன்று மாத காலங்களில் சிசுவின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பதால் அதை மேம்படுத்த உதவி புரியும் கால்சியம் மற்றும் புரத சத்துக்கள் நிறைந்த உணவை சேர்த்து கொள்வது அவசியம். அதே சமயம், நமது சில தகாத பழக்கங்களும் குழந்தைக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். ஆரோக்கியமான கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்கு ஏழு பொதுவான தவறுகள் உள்ளன. அவற்றை பெண்கள் தவிர்ப்பது மிகவும் முக்கியம்.