அனுஷ்காவிற்கு இந்த மாதம் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Web Desk | January 8, 2021, 2:54 PM IST
1/ 6
அனுஷ்கா ஷர்மா , விராட் கோலிக்கு இந்த மாதம் குழந்தைப் பிறக்கும் என மருத்துவர் தேதி கொடுத்துள்ளார். எனவே நிறைமாத கர்பிணியாக இருக்கும் அனுஷ்காவிற்கு எப்போது வேண்டுமானாலும் குழந்தைப் பிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அனுஷ்கா , விராட் கோலிக்கு பெண் குழந்தைதான் பிறக்கும் என ஜோதிடர் பண்டித் ஜகன்நாத் கணித்துள்ளார்.
2/ 6
மிகவும் பிரபலமான ஜோதிடர் பண்டித் ஜகன்நாத். அவர் கணிக்கும் விஷயங்கள் அப்படியே நடப்பதாக நம்பப்படுகிறது. அந்த வகையில் அனுஷ்கா , விராட்டிற்கு பெண் குழந்தைதான் பிறக்கும் என உறுதியாக்கக் கூறியுள்ளார்.
3/ 6
அனுஷ்கா கர்பமாக இருக்கிறார் என்கிற செய்தியை லாக்டவுனில்தான் அறிவித்தனர். இதனால் வீட்டிற்குள்ளேயே பயந்து முடங்கியிருந்ததாகவும் அந்த சமயத்தில் கணவர் விராட்தான் தன்னை முழுமையாக கவனித்துக்கொண்டார் என அனுஷ்கா இந்த மாத வோக் இந்தியா இதழில் நேர்காணல் அளித்துள்ளார். அதோடு நேர்காணலுக்காக அவர் எடுத்த அட்டைப் புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வைரலானது.
4/ 6
இந்த தம்பதிகள் தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையை பார்க்க மிகவும் ஆவலாக இருப்பதாகக் கூறியுள்ளார். அதோடு அனுஷ்கா தன் ஆரோக்கியத்திலும், கருவில் இருக்கும் குழந்தையையும் இப்போதிலிருந்தே ஆரோக்கியமாக கவனித்து வருகிறார். அதற்கு அவருடைய இன்ஸ்டா புகைப்படங்களே சாட்சி.
5/ 6
தனக்கு நல்ல முறையில் குழந்தைப் பிறக்க வேண்டும் என்பதற்காக தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார். சமீபத்தில் கூட டிரெட்மில்லில் அவர் நடக்கும் புகைப்படம், தலைகீழாக நின்று பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வைரலானது.
6/ 6
எந்தக் குழந்தை பிறந்தாலும் அதை அன்போடு வரவேற்க விராட் , அனுஷ்கா மட்டுமன்றி அவர்களுடைய ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.