பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் உடலில் சில ஆச்சர்யமூட்டும் மாற்றங்கள் நடப்பதுண்டு. பெண்கள் கருத்தரிப்பது என்பது அவர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான அம்சமாகும். அதுவும் முதல் பிரசவம் என்றால் பல விஷயங்கள் வித்தியாசமாகவும், சந்தேகத்துடனும், விளங்காத புதிராக இருக்கும். கர்ப்பகாலத்தில் இயற்கையாக ஏற்படும் சில சின்ன பிரச்சினை கூட பெரிய பிரச்சினையாக தோன்றும். அதே போல சில அரிய உடல்மாற்றங்களும் ஏற்படுவதுண்டு. ஆகையால் கருத்தரிக்க வேண்டும் எனத் திட்டமிடும் போதிலிருந்தே சில அடிப்படை உண்மைகளை தெரிந்துகொள்ள வேண்டும். அவை என்னென்ன என்பது பற்றி இங்கே காணலாம்.
வித்தியாசமான கர்ப்ப அறிகுறிகள் : ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பம் பற்றிய அனுபவங்களானது வேறுபட்டவைகளாக இருக்கும். மேலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பமாக இருக்கும் போது அறிகுறிகளானது மாறுபடுகின்றன. ஒரு கர்ப்பத்திற்கு பின்வரும் அறிகுறிகள் காணப்படலாம். மேலும், கர்ப்பம் தரித்தலின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் மாதவிடாய் முன் இருப்பது போலவே இருக்கும். முதுகு வலி, உச்சபட்சமான வாசனை உணர்வு மற்றும் கர்ப்பத்திற்கு இன்னும் பல ஆரம்ப அறிகுறிகள் உள்ளன. இதோடு வேறு வித்தியாசமான கர்ப்ப அறிகுறிகள் கூட ஒரு சிலருக்கு ஏற்படலாம். பிரசவிக்கும் காலத்தின் முதலில் ஒரு வாரத்திற்கு அதற்கான அறிகுறிகள் ஒரு பெண்ணுக்கு தோன்றுகிறது. அவ்வாறு முதல் முதலில் கர்ப்பமாக இருக்கும் பெண்ணிற்கு ஏற்படும் சில அறிகுறிகளை நாம் இப்பொழுது பார்க்கலாம்.
இரத்த சோகை மற்றும் கண்களில் தெரியும் மாற்றம் : கரு உருவாகும் காலத்தில் குழந்தைக்கு, ஊட்டம் போன்றவை தாயின் இரத்திலிருந்தே அனுப்பப்படுகிறது. எனவே தாய்க்கு கூடுதலான இரத்த உற்பத்தி இருக்க வேண்டும். பழங்கள், கீரைகள், நட்ஸ்கள் போன்றவற்றை நிறைய சாப்பிட்டால் இரத்த உற்பத்தியும் ஊட்டமும் கிடைக்கும். இல்லா விட்டால் இரத்த சோகை ஏற்படும். இது கர்ப்பிணிக்கு மட்டுமின்றி கருவுக்கும் ஆபத்தை தரும். இரும்புச்சத்து, போலிக் அமில மாத்திரைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். திடீர் திடீரென இரத்த அழுத்தம் உயர்வது, குறைவது இயல்பு. ரத்த அழுத்தம் உயர்வதால் கண்களில் ஏதோ திரை விழுந்ததைப் போன்று இருக்கும். பார்வை மங்கலாகும். இதற்கு பயப்பட வேண்டியதில்லை. பிரசவத்திற்குப் பிறகு இந்தப் பிரச்சினை சரியாகிவிடும்.
சிறுநீர் மற்றும் மலச்சிக்கல் : கர்ப்பத்தின் அழுத்தம் அதிகரிப்பதால் அதிர்ந்து சிரித்தாலோ அல்லது பேசினாலோ சிறுநீர் தானாகப் பிரியும். 10ம் மாதவாக்கில் இப்படி சிறு நீர்க்கசிவு தொடர்ந்து இருந்தால் பனிக்குடம் உடைந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே மருத்துவரை பார்க்க வேண்டும், இல்லாவிட்டால் குழந்தைக்கு ஆபத்து. திடீரென்று சிறுநீர் கழிக்காமல் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை என்றால், கர்ப்பம் ஏற்பட்டிருப்பதற்கு ஒரு அடையாளமாக இருக்கலாம்.
கர்ப்ப காலத்தில் உடலானது கூடுதல் திரவங்களை உற்பத்தி செய்வதன் மூலமாக, சிறுநீர்ப்பைக்கு அதிக வேலை இருப்பதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. ஜீரண மண்டலம் மெதுவாகச் செயற்படுவதாலும், ஹார்மோன் மாற்றத்தால் குடல் விரிவடைதாலும் குடலுக்கு உணவுப் பொருட்கள் தள்ளப்படுவரில் தாமதம் ஏற்படும், நீர்ச்சத்துக்களை குடல் உறிஞ்சி விடும். இதனால் மலச்சிக்கல் ஏற்படும். இது தொடர்ந்தால் மூலநோய் வரும். கருப்பை இடுப்புக் கூட்டை அழுத்துவதாலும் ஆசன வாயின் சிரை நாளங்கள் வெளி நோக்கித் தள்ளப்பட்டு மூலக் கட்டிகள் தோன்றும். இந்தப் பிரச்சினை பிரசவத்திற்குப் பிறகு சரியாகிவிடும் என்றாலும் எச்சரிக்கை உணர்வோடு நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
குமட்டல் - வாந்தி : அநேக கர்ப்பிணி பெண்களுக்கு கருவானது 6 வாரங்கள் சேர்ந்து இருக்கும் போது குமட்டல் ஏற்படுகிறது. ஆனால் சிலருக்கு காலை சுகவீனம் ஏற்படுவதை உணர முடியும். துரதிர்ஷ்டவசமாக சிலருக்கு இது காலை, மதியம் மற்றும் இரவு ஏற்படலாம். இது மூன்று மாத கால கட்டத்தில் நுழையும் போது பெரும்பாலும் குறையும். இடையிடையே வயிறு நிரம்பக்கூடிய நொறுக்கு தீனி மற்றும் இஞ்சி மிட்டாய் போன்றவற்றை சாப்பிட வேண்டும். குப்பையை அன்றாடம் வெளியேற்றும் கடமையில் இருந்து தவறிவிட்டீர்கள் என்றால், குப்பையும் வாந்தியெடுக்க தூண்டிவிடும். ஒரு சில வாசனைகள் வாந்தியெடுக்க தூண்டுதலாக இருக்கும்.
உணவின் முக்கியத்துவம் : தாய் போதுமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டால்தான் பிறக்கப் போகும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்களால் உணவில் மீது வித்தியாசமான ஆசைகள் ஏற்படலாம். புளிப்பான சுவை கொண்ட உணவுகளை அதிகம் விரும்புவர். முதல் சில மாதங்கள் மசக்கை இருப்பதால் சாப்பிடப்பிடிக்காது. புளிப்பு சுவை கர்ப்பகாலத்தில் அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு கேடானது என்பதை அறிந்து தவிர்த்து விட வேண்டும். காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது அவசியம். திடீரென்று, வயிறு போதுமான சிட்ரஸ் பெற முடியாத நிலை அடையும் போது அல்லது வயிற்றில் அஜீரண கோளாறு முதலியவை புதியதாக தோன்றும் பட்சத்தில் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ள முடியும்.
மனநிலையில் மாற்றம் : அடிக்கடி மனதில் சந்தோஷம், கஷ்டம் போன்ற மாற்றங்களை உணர்கிறீர்கள் என்றால், உடல் நலம், புதிய ஹார்மோன்களை அனுசரிக்க ஆரம்பித்து விட்டது என்று பொருள். தாய்மையை நினைத்து சந்தோஷப்பட்டாலும், உடலில் ஏற்படும் மாற்றங்கள், பிரசவத்தைப் பற்றி பயம் ஆகியவற்றால் திடீரென பயம், கவலை போன்ற மனமாற்றங்கள் வரலாம். அழுதாலும் பிள்ளை அவள் தானே பெறவேண்டும். கருக்காலத்தில் அதிகமாக வீடு மற்றும் வெளி வேலை செய்வதால் எரிச்சல், கோபம், சோர்வு போன்றவை ஏற்பட்டு அதன் காரணமாக மன நிலையில் மாறுதல் வரலாம்.
மார்பகங்களில் வலி : கர்ப்பம் தரித்த பிறகுதான் மார்பகத்தின் வளர்ச்சி முழுமையடையும். நிறமாற்றங்கள் ஏற்படும். இரத்த அழுத்தம் அந்தப் பகுதிக்கு அதிகம் செல்வதால் இரத்த நாளங்கள் வீங்கி தொட்டாலே வலிக்கும். மார்பகப்பகுதிகளைச் சுற்றி சின்னச்சின்ன முடிச்சுகள் தோன்ற ஆரம்பிக்கும். இதெல்லாம் மார்பக மாற்றங்கள். இதை ஏதோ பிரச்சினை என நினைத்து பயப்படகூடாது. கருப்பை வளர்த்து முன்னே தள்ளும்போது உடல் சமநிலையை இழந்து தடுமாறும். இதனால் முதுகு வலி வரக்கூடும். கால்களுக்குச் செல்லும் இரத்த நாளங்கள் கருப்பை வளர்ச்சியால் அழுத்தப்படுவதால் கால்கள் வலிக்கும், வாசனைகளை முகர்ந்தால் ஒத்துக்கொள்ளாமல் அவ்வப்போது தலைவலி போன்றவை வரக்கூடும்..