நாம் பெற்றோராகும் போது, ஒழுக்கம் மற்றும் சுய ஒழுங்கு மிகவும் முக்கியம். அப்பொழுதுதான் குழந்தைகள் நாம் சொல்வதை கேட்கும் மட்டுமல்ல நம்மை பார்த்து கற்றுக்கொள்ளும். குழந்தைகளின் உணர்ச்சிகளை பெற்றோர்கள் நிச்சயமாக கண்டுகொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய முடியாவிட்டால் உங்களிடம் இருந்து குழந்தைகளை தூரமாக்கும். நீங்கள் கண்டிப்பானவராக தோன்றுவீர்கள். நீங்கள் கண்டிப்பான பெற்றோரா என்று அறிய 6 வழிகள் உள்ளன. அவற்றை இங்கு காண்போம்.
குழந்தைகளை நச்சரிக்காதீர்கள் : பெற்றோர்-குழந்தை உறவில் எல்லைகள் இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதே போல எப்போது எதை எப்படி செய்ய வேண்டும் என்பதும் கூட. குழந்தைகளை எதற்கெடுத்தாலும் நச்சரித்துக் கொண்டே இருப்பது, உங்களை கண்டிப்பானவராக காட்டும். சில இடங்களில் நீங்கள் உங்களின் விதிகளை குழந்தைகளுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். அவர்களுக்கான சுதந்திரத்தை நீங்கள் கொடுக்க வேண்டும்
சர்வாதிகாரியா நீங்கள்? : குழந்தைகள் அப்பாவியாக தோன்றலாம். ஆனால் சில சமயங்களில் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி, அவர்களின் விருப்பம் தான் உங்களின் விருப்பமும் என்று உணர வைக்க வேண்டும். இதனை தவிர்த்துவிட்டு எதிர்மறையாக செய்யும் போது குழந்தைகள் அதனால் மனதளவில் பாதிக்கப்படுவார்கள். இத்தகைய செயல்கள் உங்களை சர்வாதிகாரியாக காட்டும். உங்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான உறவில் மோதலை ஏற்படுத்தலாம்.
வெற்றியும்,தோல்வியும் ஒன்றுதான் :உங்கள் குழந்தை எல்லாவற்றிலும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பது சரி என்றாலும், அவர்கள் தோல்வியடையும் போது அவர்களைப் பாராட்டுவதும் முக்கியம். அவர்கள் தோல்வியடைந்தால், ஒரு பெற்றோராக அவர்களை பாராட்டவும், அவர்களின் முயற்சிகளை பாராட்டவும் வேண்டும்.இதனால் குழந்தைகள் மனம் தளராமல், இருப்பதுடன் உங்களின் குழந்தைகள் அடுத்த முறை இன்னும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள்.
பொய்யாக இருக்காதீர்கள் : நீங்கள் கண்டிப்பான பெற்றோராக இருக்கும் பட்சத்தில், உங்களிடம் குழந்தைகள் அடிக்கடி பொய் சொல்வார்கள். அது உங்களால் எளிதில் கண்டுபிடிக்கவும் முடியும். அவர்கள் உங்களிடத்தில் உன்மையை சொல்வதை காட்டிலும், பொய் சொல்வதே சிறந்தது என்று நினைப்பார்கள். உண்மையை சொன்னால் தண்டிக்கப்படுவோமோ? என்ற அச்சத்தில் இவ்வாறு செய்கிறார்கள்.
குழந்தைகள் எதிர்பார்ப்பது : உங்கள் குழந்தை மோசமான செயலில் ஈடுபடும் போது , அவர்களிடம் பேச முயற்சி செய்தீர்களா? அல்லது அவர்களை அச்சுறுத்துகிறீர்களா? என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.எனவே நீங்கள் அச்சுறுத்துவது போல செயல்பட்டால் அது குழந்தைகளிடம் உங்களை பற்றிய எண்ணம் தவறாகவே அமையும் எனலாம். உங்களின் குழந்தை என்ன எதிர்பார்க்கிறது,அவர்களின் சுபாவம் என்ன என்று நீங்கள் அறிய முயற்சி செய்ய வேண்டும்.
அன்புதான் ஜெயிக்கும் : சில நேரத்தில் குழந்தைகள் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்த இயலாமல் போகிறது. ஒரு பெற்றோராக உங்கள் குழந்தையை அவர்கள் எதுவும் சொல்லாவிட்டாலும், நீங்கள் புரிந்து கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் குழந்தையின் வேண்டுகோள் எதுவாக இருந்தாலும் நீங்கள் காதுகொடுத்து கேட்க வேண்டும். அவர்களை புறக்கணிக்காமல் அவர்களை கையாளும் போது, அவர்கள் உங்களிடத்தில் உண்மையாகவும், அன்பாகவும் இருப்பார்கள்.