திருமணமான பெண்களை பொறுத்தவரை கருத்தரிப்பது என்பது ஒரு மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவம். மருத்துவ வளர்ச்சி பெருகிவிட்ட இந்த காலகாட்டத்தில், ஒரு பெண் கருவுற்றிருப்பதை வீட்டில் இருந்தபடியே ப்ரெக்னன்சி கிட் (Pregnency Kit) மூலம் தானாகவே சோதித்து அறிந்து கொள்ள முடியும். இது போன்ற தற்போதைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாம் எளிதில் சோதனைகளை செய்துகொள்ளலாம்.
1. பூண்டு மற்றும் வெங்காயம் சோதனை: (GARLIC / ONION TEST) : பண்டைய எகிப்தில் வாழ்ந்த ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை இந்த வினோத சோதனை மூலம் சொல்ல முடியும். இரவில், பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய பெண்ணின் பெண்ணுறுப்புக்கு அருகில் பூண்டு அல்லது வெங்காயம் வைக்கப்படும். காலையில், பெண்ணின் சுவாசத்தில் பூண்டு மற்றும் வெங்காயத்தின் வாசனை இருந்தால், அவள் கர்ப்பமாக இல்லை என்றும் மாறாக, அதன் வாசனை இல்லை என்றால் அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்பதையும் உறுதி செய்வார்களாம். அதாவது உடலில் அந்த வாசனையின் மேல்நோக்கிய பயணிப்பதை கருவில் இருக்கும் குழந்தை தடுப்பதாக நம்பப்படுகிறது.
2. கண் பரிசோதனை: (THE EYE TEST) : மருத்துவர் ஜாக் கில்லெமியோ என்பவர் 16ம் நூற்றாண்டில், ஒரு பெண்ணின் கண்களை கொண்டு அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்று சொல்ல முடியும் என்று கூறியுள்ளார். அவரைப் பொறுத்தவரை, ஒரு பெண் கர்ப்பமாக இருந்தால், அவளது ஆழமான கண்கள் வளரும், மேலும் கருவிழி சிரியதாகும். அவளது கண் இமைகள் வீழ்ச்சியடையும், அவள் கண்களின் மூலையில் வீங்கிய நரம்புகளை உருவாக்கும். இதனை வைத்து ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
3. கோதுமை மற்றும் பார்லி சோதனை: (THE WHEAT AND BARLEY TEST) : இது மிகவும் ஒரு கற்பனையான சோதனையாகவே தெரிகிறது. பண்டைய காலத்தில் ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், இந்த இரண்டு தானியங்களையும் கொண்ட ஒரு பையில் அவளை சிறுநீர் கழிக்கும்படி கேட்கப்படுமாம். அதன் பிறகு, அந்த பையில் பார்லி முளைத்தால், அது ஒரு பையனாக இருக்கும் என்றும், கோதுமை முளைத்தால் அது ஒரு பெண்ணாக இருக்கும் என்றும், இல்லையென்றால் அவள் கர்ப்பமாக இல்லை என்பதையும் உறுதிப்படுத்துவர்களாம்.
4. தாழ்பாள் சோதனை (THE LATCH TEST) : வீட்டு கதவுகளை மூட உதவும் தாழ்பாளை வைத்து கர்ப்பப் பரிசோதனை செய்வதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. 15ம் நூற்றாண்டில் ஒரு பாத்திரத்தில் தாழ்ப்பாளை வைத்து, பெண்களை அதில் சிறுநீர் கழிக்கும்படி கேட்பார்களாம். சில மணிநேரங்களுக்குப் பிறகு, தாழ்ப்பாள் ஏதேனும் ஒரு அடையாளம் தெரிந்தால், அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பது உறுதியாகும். இல்லையெனில் அவள் கர்ப்பமாக இல்லை என கணிப்பார்களாம்.
6. தாய்ப்பால் சோதனை (THE BREAST MILK TEST) : இந்த சோதனை மேற்கண்ட சோதனைகளை காட்டிலும் சிறுது ஆறுதல் அளிப்பதாகத்தான் தெரிகிறது. இருப்பினும் இது ஒரு வினோதமான சோதனை தான். ஒரு மகனைப் பெற்றெடுத்த தாய்ப்பாலை சோதிக்கப்பட வேண்டிய பெண்ணை குடிக்க சொல்வார்களாம். அதனைக் குடித்த பெண்ணுக்கு வாந்தி அல்லது குமட்டல் ஏற்பட்டால் அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என உறுதி செய்யப்படுமாம்.
7. வண்ண சோதனை (THE COLOR TEST) : இது ஒரு விஞ்ஞான ஆதரவைக் கொண்டுள்ளது. கர்ப்பமடைந்த ஒரு பெண் ஆறாவது வாரத்தை எட்டும் போது, அந்த பெண்ணின் அந்தரங்கங்கள் ஒரு ஊதா அல்லது நீல நிறத்தில் மாறும் என்று பலர் நம்பினர். இது உண்மை தான், ஏனென்றால் கருவுற்ற பெண்ணின் கீழ் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும். 1830 களில் வாழ்ந்தவர்கள் அந்தரங்கங்களை சோதித்துப் பார்த்து முடிவெடுப்பார்களாம்.