

‘10 மாசம் உன்னை நான் சுமந்து பெத்தேன்’ என்று டையலாக்குகளை சொல்லாத அம்மாக்களே இல்லை. இதில் அவர்களுக்கு ஒரு பெருமை. நம் தாய்க்கு பெருமை கிடைக்கிறது என்றால் அதை நாம் ஏன் தடுக்க வேண்டும். ஆனால் மேல்சொன்னது ஒரு பேச்சுக்குத்தான். உண்மையில் இந்த பத்து மாதம் ஒரு குழந்தையை அம்மா சுமப்பதில்லை. ஷாக்கா இருக்கா? ஷாக் வேண்டாம் இந்த உள்ளடக்கத்திற் படிச்சு அர்த்தம் தெரிஞ்சிக்கோங்க.


கருப்பை ஒரு கருவைச் சுமப்பது மொத்தம் ஒன்பது மாதம் ஒரு வாரமும் தான். இது கூட கடைசியாக மாதவிடாய் வந்த முதல் நாளிலிருந்து எண்ணப்படும் கணக்குதான். இந்த ஒன்பது மாதங்களை மூன்று மூன்று மாதங்களாகப் பிரித்துக் கொள்கிறார்கள் மருத்துவர்கள். இந்த பருவத்தை டிரைமெஸ்டர் (Trimester) என்ற பெயரால் குறிப்பிடுவார்கள். முதல் மூன்று மாதங்கள் வரை முதல் டிரைமெஸ்டர், நான்காவது மாதத்திலிருந்து ஆறாம் மாதம் வரை ‘இரண்டாவது டிரைமெஸ்டர்’, ஏழாவது மாதத்திலிருந்து குழந்தை பிறக்கும் வரை ‘மூன்றாவது டிரைமெஸ்டர்’ என்று இந்த காலகட்டத்தைப் பிரிக்கலாம்.


நீங்கள் கர்ப்பமாக இருப்பதை அறிந்தவுடன் உங்கள் உற்சாகத்தை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இதைப் பற்றி முழு உலகிற்கும் தெரியப்படுத்த, காட்டு கத்து கத்த ஆசை வரும். ஆனால் பெரும்பாலான அம்மாக்கள் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் குறையும்போது அதாவது முதன் மூன்று மாதத்தைத் தாண்டும்வரை காத்திருக்க விரும்புகிறார்கள்.


இதனால் ஏற்படும் ஒரே பிரச்சனை என்னவென்றால், கர்ப்பத்தின் (pregnancy) அறிகுறிகளை அவர்களுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து மறைக்க சிரமப்படுகின்றனர். நீங்களும் சிறிது காலத்திற்கு உங்களின் கர்ப்ப செய்தியை உறுதியாகும் வரை மறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு உதவக்கூடிய சில யோசனைகளை உங்களுக்காக நாங்கள் இங்கே கொண்டுவந்துள்ளோம்.


தளர்வான ஆடைகளை அணியுங்கள் (Wear loose clothes):- உங்கள் கர்ப்பத்தை பிறருக்கு அறிவிக்க நீங்கள் தயாராக இல்லை என்றால், கொஞ்ச நாளைக்கு இறுக்கமாக உங்கள் உடலுடன் பொருந்தக்கொடிய துணிகளைத் தவிர்க்கவும், குறிப்பாக உடலுடன் ஒட்டிக்கொள்ளும் ஆடை அல்லது சட்டை போன்ற உங்கள் வயிற்றை முன்னிலைப்படுத்தக்கூடிய ஆடைகளை அணிய வேண்டாம். உங்கள் வயிற்றில் தளர்வான உடையை அணிந்து வெளியே செல்லுங்கள். கூடுமான அளவிற்கு ஜீன்ஸ் அல்லது கால்சட்டை போன்ற இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.


பயணம் தவிர்ப்பது நல்லது (Avoid Travelling):- முதல் டிரைமெஸ்டரின்போது, தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குண்டும், குழியுமாக உள்ள சாலைகளில் பயணிக்கும் போது ஏற்படும் அதீத குலுங்கல்கள், வேகத்தடைகளில் தூக்கிப்போடுவது, மலை ஏற்றப்பயணங்களில் திடீர் திடீரென உடல் சாய்வது போன்றவை கர்ப்பிணியின் கருப்பையைப் பாதிக்கும். அப்போது கருகலையும் ஆபத்து நேரும். பொதுவாக கவனிக்க வேண்டியவை முதல் டிரைமெஸ்டரில் உடல் சோர்வாக இருப்பது இயற்கை. தேவைப்படும் போதெல்லாம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் நீண்டநேரம் நின்றுகொண்டு வேலைசெய்பவர்கள், அவ்வப்போது உட்கார்ந்து ஓய்வு எடுக்கவேண்டும். இரவு நேரப் பணிக்குச் செல்பவர்கள் இந்த முதல் டிரைமெஸ்டரில் மட்டுமாவது பணிநேரத்தை மாற்றிக்கொள்வது நல்லது.


கூடுதலானவற்றை ஆடையுடன் அணிந்து கொள்ளுங்கள் (Add accessories):- உங்கள் வழக்கமான உடையுடன் ஒரு தாவணி அல்லது நகைகளைச் சேர்ப்பது பிறரின் கவனத்தை உங்கள் மீதிருந்து திசை திருப்பும். இதெல்லாம் ஒரு சிறந்த வழியாகும். ஒரு பிரகாசமான வண்ண தாவணி அல்லது ஒரு ஜோடி பெரிய காதணிகள் ஹான்ட் பேக் போன்றவை கவனத்தின் முக்கிய புள்ளியிலிருந்து பிறரின் கவனத்தை ஈர்க்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு பெரிய பையை எடுத்துச் செல்லலாம். இதனால் உங்கள் வயிறு பிறருக்கு தெரியாது.


மது அல்லது சிகரெட் பிடிப்பவரிடம் இருக்க வேண்டாம் (Away from Smoke) :- குழந்தை உண்டாகி மூன்று மாதங்களுக்குள் பல சிக்கல்களை கர்ப்பவதிகள் சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் நீங்கள் மறைக்க முயலும் செய்தியை பிறர் எளிதில் அறிந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம். அதனால் கூடுமான அளவிற்கு மது சிகரெட் பீடி அல்லது போதைப் பொருள் போன்றவற்றில் இருந்து உங்களை விலக்கி வைத்துக் கொள்ளுங்கள்.


அதை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றாலும் உங்கள் அருகாமையில் உங்கள் கணவரோ அல்லது வேறு யாரோ அதை பயன்படுத்தினால் அந்த இடத்தில் நீங்கள் இருக்க வேண்டாம். அல்லது அவர்களை போதை பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் அந்த நாற்றம் உங்களுக்கு குமட்டல் அல்லது வாந்தியை ஏற்படுத்தும் இதனால் பிறர் உங்கள் நிலையை எளிதில் உங்களை அடையாளம் காணுவார்கள்.


லெமன் ஜூஸ் / பெப்பெர்மிண்ட் டீயை எப்போது வைத்திருங்கள் (Have peppermint tea) : இந்த நேரத்தில் உங்களுக்கு குமட்டல் அல்லது வாந்தி ஏற்படும். பொது இடங்களில் வாந்தி அல்லது குமட்டல் ஏற்பட்டால் அதை பலரும் கவனிப்பார்கள். இதனால் நீங்கள் வெளியில் செல்லும்போது உங்களுடன் ஒரு பிளாஸ்கை வைத்திருப்பது முக்கியம். அந்த பிளாஸ்கில் பெப்பர்மின்ட் டீ, புதினா அல்லது வேறு ஏதேனும் வாசம் மிக்க ஒரு ஜூசை வைத்திருங்கள். இது உங்கள் குமட்டல் அல்லது வாந்தி ஏற்படுவதிலிருந்து உங்களை தடுக்கும் இதனால் பிறரின் கவனம் உங்கள் மீது திரும்பாது. கூடுமான அளவிற்கு வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.


கருத்தரித்தல் என்பது சாதாரணமான விஷயம் அல்ல. நம் சிறு கவனக்குறைவு அடுத்த தலைமுறையை பாதிக்கும் அளவிற்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்ற செய்தியை நீங்கள் அறிந்தால் முதலில் பொறுமை காத்து சில நாட்கள் காத்திருந்து பின்னர் அதை வெளிஉலகிற்கு தெரிவியுங்கள். இதன் மூலம் நீங்கள் தேவையற்ற மன கவலைகளிலிருந்து விடுபட முடியும். மேலும் இம்மாதிரியான நேரங்களில் கூடுமான அளவிற்கு உங்கள் உடலில் மட்டுமல்லாது வயிற்றில் உள்ள கருவும் பத்திரமாக பாதுகாப்பதற்கான வழிகளை பின்பற்றுங்கள். மேலே சொன்ன விஷயங்கள் நிச்சயம் உங்களுக்கு உதவும்.