ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குழந்தைகளை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டுமா..? இதோ இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்...

குழந்தைகளை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டுமா..? இதோ இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்...

குழந்தைகள் பேசுவது எப்போதுமே அழகு தான். மழலை மொழியில் அவர்கள் பேசுவதை நாம் எப்போதும் கிண்டல் செய்யக்கூடாது. அவர்களுக்கு முன்னதாக பேசுவதைக் கலாய்த்து சிரிக்கக்கூடாது.

 • 16

  குழந்தைகளை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டுமா..? இதோ இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்...

  குழந்தை வளர்ப்பு என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் மிகவும் சவாலான விஷயம் தான். பிறந்தது முதல் பார்த்துப் பார்த்து வளர்க்கும் குழந்தைகளின் எதிர்கால வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதற்கு பெற்றோர்கள் அடித்தளமாக இருக்க வேண்டும். இதற்காகப் பணம் சேர்த்து வைப்பது அல்லது ஆடம்பரமான கல்வி வழங்குவது என்பது ஒரு புறம் இருந்தாலும் அவர்களுக்கு ஒழுக்கத்தையும், நல்ல பண்பையும் கற்றுக்கொடுப்பது தான் பெற்றோர்களின் தலையாய கடமை. என்னென்ன என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்…

  MORE
  GALLERIES

 • 26

  குழந்தைகளை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டுமா..? இதோ இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்...

  குழந்தைகளுக்கு உதாரணமாக இருத்தல் : பெற்றோர்கள் எப்போதும் குழந்தைகளுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். ஆம் நாம் என்ன பேசுக்கிறமோ அதைத் தான் குழந்தைகளும் கற்றுக்கொள்ளும். எனவே அவர்களுக்கு முன்பாக சண்டையிடுதலோ? கெட்ட வார்த்தைகளையோ பேசக்கூடாது. அதற்கு மாற்றாக ஒரு பிரச்சனை வந்தால் எப்படி தீர்த்து விட வேண்டும் என்பது குறித்து கற்றுக்கொடுக்கத் தேவையில்லை.. அதே சமயம் நீங்கள் எப்படி பிரச்சனையை கையாள்கிறீர்கள்? என்பதைப் பற்றி அவர்கள் தெரிந்துக்கொள்ளும் படி நடக்கவும். இதோடு குழந்தைகளின் முன்னதாக ஸ்மார்ட்போன் போன்ற எந்தவொரு கேஜெட்டையும் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தக்கூடாது என்பதையும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளவும்.

  MORE
  GALLERIES

 • 36

  குழந்தைகளை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டுமா..? இதோ இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்...

  குழந்தைகளின் பேச்சை ஊக்குவித்தல் : குழந்தைகள் பேசுவது எப்போதுமே அழகு தான். மழலை மொழியில் அவர்கள் பேசுவதை நாம் எப்போதும் கிண்டல் செய்யக்கூடாது. அவர்களுக்கு முன்னதாக பேசுவதைக் கலாய்த்து சிரிக்கக்கூடாது. அதற்கு மாற்றாக குழந்தைகளின் பேச்சை எப்போதும் நாம் ஊக்குவிக்க வேண்டும் மற்றும் மதிக்க வேண்டும். இதோடு உங்களது குழந்தைகள் எத்தனை வார்த்தைகளைப் பேசுகிறதோ? அதைப் பொறுத்து அவர்களுடன் உங்களது உரையாடல்களை நீங்கள் ஆரம்பிக்கவும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் குழந்தைகளிடம் நீங்கள் பேசுவதை வழக்கமாக்கிக்கொள்ளவும்.

  MORE
  GALLERIES

 • 46

  குழந்தைகளை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டுமா..? இதோ இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்...

  குழந்தைகளின் மொழித்திறனை வளர்த்தல் : குழந்தைகள் எதிர்காலத்தில் வெற்றியுடன் வளம் வர வேண்டும் என்றால் அவர்களின் மொழித்திறனை நீங்கள் முதலில் ஊக்குவிக்க வேண்டும். படிக்கவோ? பேசவோ? தெரியாது என்றாலும் பல விதமான மொழிகளை அவர்களை கேட்க வைக்கவும். அவர்களுக்க 3 வயதிலேயே பிற மொழிகளை வேறுபடுத்தக்கூடிய திறன் உள்ளது. எனவே அவர்கள் முன்னதாக நீங்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழி புத்தகங்களை சத்தமாக வாசிக்க வேண்டும். இது அவர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு பல மொழிகளைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்படும். மேலும் புத்தகம் வாசிக்கும் பழக்கமும் குழந்தைகளிடம் ஏற்படும்.

  MORE
  GALLERIES

 • 56

  குழந்தைகளை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டுமா..? இதோ இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்...

  விளையாட கற்றுக்கொடுங்கள் : இன்றைக்கு பெரும்பாலான குழந்தைகள் எப்போதுமே டிவி, மொபைல் முன்புதான் நேரத்தை செலவிடுகிறார்கள். எனவே அவர்களுக்கு விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். இதோடு எந்த விளையாட்டில் ஆர்வம் ஏற்படுகிறதோ? அதைத்தொடர்ச்சியாக கற்றுக்கொடுங்கள். உங்களது வேலைக்கு மத்தியில் அவர்களின் விளையாட்டு ஆர்வத்தையும் நீங்கள் ஊக்கப்படுத்த காலை அல்லது மாலை நேரங்களில் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 66

  குழந்தைகளை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டுமா..? இதோ இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்...

  வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுத்தல் : பள்ளியில் சென்று படிப்பதை விட குழந்தைகளுக்கு வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக்கொடுக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவது முதல் துணி துவைப்பது, சமைப்பது போன்றவற்றையும் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொடுக்க வேண்டும். இந்த வேலைகளை நீங்கள் செய்யப் பரிந்துரைக்கும் போதே அவர்களுக்கு எண்களை வரிசைப்படுத்த கற்றுக்கொடுக்கவும் மறந்துவிடாதீர்கள்.

  MORE
  GALLERIES