தற்போதைய காலகட்டத்தில் உங்கள் குழந்தைகளுக்கு சுய ஒழுக்கத்தைக் (self discipline) கற்பிப்பது அவசியம். இது அவர்களுக்கு பொறுப்பாளர்களை மட்டுமல்ல, அவர்களை மகிழ்ச்சியாகவும், புத்திசாலித்தனமாக வைத்திருக்கவும் உதவும். மேலும், இந்த நல்ல பழக்கவழக்கங்கள் நீண்ட காலத்திற்கு உதவும் மற்றும் ஒரு சில விஷயங்களின் மதிப்பை அவர்களுக்குக் கற்பிக்கும். பொதுவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒழுக்கமாகவும், நல்லவராகவும் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக பல முயற்சிகள் செய்வர்.
ஆனால், ஒரு குழந்தை ஒழுக்கமாக வளர முக்கிய முன்னுதாரணமாக திகழ வேண்டியது பெற்றோர்கள் மட்டுமே. குழந்தைகள் ஒவ்வொரு செயல்களையும் அவர்களின் பெற்றோரை பார்த்துதான் கற்றுக்கொள்கின்றனர். எனவே உங்கள் குழந்தைக்கு ஒழுக்கத்தைக் கற்பிக்க நீங்கள் அதிக நேரத்தையும் செலவிட வேண்டியிருக்கும். அதேசமயம் மிகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும்.
உங்கள் குழந்தைகள் சில தவறான விஷயங்களை செய்யும் போது நீங்கள் அவற்றைச் சரிசெய்ய வேண்டும். அவர்களுக்கு சுய கட்டுப்பாட்டைக் கற்பிக்க வேண்டும். மேலும், அவர்கள் நினைக்கும் விஷயங்கள் சரியாக நடக்காமல் இருந்தால் அதனை எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ள பெற்றோர்கள்தான் ஊக்குவிக்க வேண்டும். அந்த வகையில் உங்கள் குழந்தைகளின் நடத்தையை நிர்வகிக்கவும், ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கவும் சில வழிகளை பற்றி தெரிவித்து கொள்ளுங்கள்.
அவர்களின் நல்ல நடத்தையைப் பாராட்டுங்கள் : குழந்தைகளை அவர்கள் செய்யும் சில விஷயங்களுக்காக பாராட்டப்படுவதை மிகவும் விரும்புவர். அவர்கள் சுய கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும்போதோ அல்லது பொறுப்பான நடத்தையைக் காட்டும்போதோ, அவர்களைப் புகழ்ந்து, அவர்களின் நடத்தைக்கு பாராட்டுகளை தெரிவித்தால் அந்த பழக்கத்தை குழந்தைகள் மேலும் பின்பற்றுவார்கள்.
நீங்கள் ஏன் இதைச் செய்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு விளக்குங்கள் : பெற்றோர்கள் மிகவும் கண்டிப்பாகவும் கடினமாகவும் இருப்பதால் சில நேரங்களில் உங்கள் குழந்தைகளுக்கு மனக்கசப்பு ஏற்படலாம். இதைத் தவிர்க்க, நீங்கள் எதையுமே வேண்டாம் என்று ஏன் சொல்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். அவர்களின் வாழ்க்கையைப் கட்டமைக்க ஒரு அட்டவணையைப் நீங்கள் ஏன் பின்பற்றுகிறீர்கள் என்பதை அவர்களுக்கு விளக்குங்கள்.
அவர்கள் மீது மிகவும் கடினமாக செயல்பட வேண்டாம் : உங்கள் குழந்தை அடம் பிடிக்கும் ஒருவராக மாறுவதை நீங்கள் ஒரு போதும் விரும்பமாட்டீர்கள். எனவே எந்த ஒரு விஷயத்திற்கும் அவர்களை கட்டாயப்படுத்துவதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக, அவர்களுக்கு கற்பித்தல் மற்றும் சுய ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை புரிய வைக்கவும்.
குழந்தைகள் முன் நீங்கள் பேசும் போது அதிக கவனம் கொள்ள வேண்டும்: குழந்தையின் முன் உங்களுக்கு பிடிக்காதர்வர்களை பற்றியோ அல்லது நீங்கள் கோபமாக இருப்பவர்களை பற்றியோ இழிவாக பேசாதீர்கள். அனைவரை பற்றியும் நல்ல கருத்துக்களை மட்டுமே கூறுங்கள். குழந்தைகள் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளையும் கவனிப்பர். எனவே , இது பிற்காலத்தில் அவர்கள் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தாமல் தடுக்க நாம் எடுக்கும் ஒரு பெரிய முயற்சி.