7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, என் ஜி. கே என பல ஹிட் திரைப்படங்களைக் கொடுத்த செல்வராகவனுக்கு இந்த வருடம் ஜாக்பாட்தான் அடிக்கப்போகிறது. தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக புத்தாண்டு அன்று போஸ்டர் வெளியிட்டார். அதோடு ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தை ரீரிலீஸ் செய்தார். 2010 ஆண்டு வெளியான படமாக இருந்தாலும் கனிசமான அளவில் திரையரங்குகளில் கூட்டம் நிறைகிறது.
அதாவது தற்போது கீதா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். எனவே மருத்துவர் கொடுத்த குறிப்புப் படி குழந்தைப் பிறக்க இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன என்பதையே அவ்வாறு கூறியுள்ளார். கீதா , செல்வராகவனுக்கு பிறக்கப்போவது மூன்றாவது குழந்தை. அவர்களுக்கு ஏற்கனவே மகன் மற்றும் மகள் என இரு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.