தமிழகத்தில் தை மாதத்தில் அறுவடை திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை போன்று கேரளத்தில் அறுவடை திருநாள் என்பது ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு நாம் வண்ணக் கோலமிடுவதைப் போலவே, ஓணம் பண்டிகைக்கு கேரள மக்கள் வண்ணமயமான மலர்களைக் கொண்டு பூக்கோளம் இடுகின்றனர். இந்தக் கோலம் அன்றி ஓணம் பண்டிகை சிறப்பு பெறாது.