1. வெள்ளெலிகள்: ஹேம்ஸ்டர், கினி பிக் என அழைக்கப்படும் வெள்ளெலிகள் மிகவும் மென்மையான இதயம் கொண்ட உயிரினம் ஆகும். இது அதிக சத்தம் கேட்டால் கூட மனிதர்களைப் போல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்க கூடும். மேலும் உணவு மற்றும் சுற்றுப்புற சத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மிகவும் பாதுகாப்பாக கவனித்து வளர்க்க வேண்டும். இதன் ஆயுட்காலமும் 2 முதல் 3 ஆண்டுகள் மட்டுமே என்பதால் செல்லப்பிராணியாக வளர்ப்பது, இறுதியில் பெரும் சோகத்தை கொடுக்கும்.
2. குரங்குகள்: குரங்குகள் பார்க்க அழகாக இருக்கும், அதன் சுறுசுறுப்பையும், செயல்பாட்டையும் பார்க்கும் போது உங்களுக்கு சின்ன குழந்தையை போல் குதூகலமான மனநிலை கிடைக்கும். ஆனால் குரங்குகள் நாய்களை விட புத்திசாலிகள், எவ்வித அறிகுறியும் இன்றி எங்கும் நுழையக்கூடியவை. மேலும் தனது எஜமானர் யார் என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் தாக்கக்கூடியவை. இதன் கடி மூலம் HIV-1 மற்றும் ஹெபடைடிஸ் A ஆகிய நோய்கள் பரவக்கூடும் என்பதால் குரங்குகள் செல்லப்பிராணியாக வளர்க்க சரியானவை அல்ல.
3. பெரிய பூனை வகைகள்: சிங்கம், புலி போன்ற பெரிய பூனை வகைகளின் குட்டிகளைப் பார்க்கும் போது எடுத்துக் கொஞ்சலாம் என ஆசை வரலாம். ஆனால் அவை பிறப்பிலேயே வேட்டையாடும் குணத்துடன் இருப்பவை என்பதை மறந்துவிடாதீர்கள். என்ன தான் சிங்கம், புலி போன்றவற்றை பாசமாக பாலூட்டி, சீராட்டி வளர்த்தாலும் அதன் ஒரே தாக்குதல் உங்கள் உயிரை காவு வாங்க ஏற்றது.
5. டாரன்டுலா: இந்த பிரம்மாண்டமான பெரிய சைஸ் சிலந்திகள் பார்க்க அழகாக இருக்கலாம், ஆனால் இவை மனிதர்களுடன் அரிதாகவே பழகுகின்றன. அரவணைப்பு, சுற்றி விளையாடுவது போன்ற பழக்கம் கிடையாது. அவை விரும்பினால் உங்களை ஒரே கடியில் கொன்றுவிடக்கூடும். எனவே இதனுடன் விளையாடினால் கூட கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.