Home » Photogallery » Lifestyle
தேசிய இளைஞர்கள் தினம்.. இளைஞர்களின் சக்தியை பெரிதும் நம்பிய சுவாமி விவேகானந்தரின் சிந்திக்கத் தூண்டும் பொன்மொழிகள்!!
Swami Vivekananda | National Youth Day இன்றைய தினம் தேசிய இளைஞர்கள் தினம். ஒவ்வொரு ஆண்டும் விவேகானந்தரின் பிறந்த தினம் தேசிய இளைஞர்கள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இளைஞர்களின் சக்தியை பெரிதும் நம்பிய சுவாமி விவேகானந்தரின் சிந்திக்கத் தூண்டும் பொன்மொழிகள் ஒரு தொகுப்பு.
1/ 16


செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
4/ 16


நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை)
6/ 16


தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.
9/ 16


இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.*
15/ 16


தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.