ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » தேர்வு எழுத தயாராகும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கோல்டன் ரூல்ஸ்..!

தேர்வு எழுத தயாராகும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கோல்டன் ரூல்ஸ்..!

நீங்கள் பரிட்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள் எனில் இந்த 10 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுங்கள்.

 • 111

  தேர்வு எழுத தயாராகும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கோல்டன் ரூல்ஸ்..!

  தேர்வு நாள் நெருங்கிவிட்ட சமயத்தில் கட்டாயம் மாணவர்களிடையே பதட்டம் உண்டாவது இயல்புதான். ஆனால் அந்த பதட்டத்தை போக்கும் வகையில் சில விஷயங்களை நீங்கள் முன்கூட்டியே பின்பற்ற வேண்டியது அவசியம். அந்த வகையில் நீங்கள் பரிட்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள் எனில் இந்த 10 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுங்கள்.

  MORE
  GALLERIES

 • 211

  தேர்வு எழுத தயாராகும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கோல்டன் ரூல்ஸ்..!

  பாடத்திட்டத்தை வகுத்துக்கொள்ளுங்கள் : நீங்கள் தேர்வுக்காக படிக்க அமரும் முன் என்னவெல்லாம் படிக்க வேண்டும், எதையெல்லாம் ரிவைஸ் செய்ய வேண்டும் என்பதை ஒரு அட்டவணையாக போட்டு வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் படிக்க அமரும்போது தெளிவு கிடைக்கும். நீங்கள் திட்டமிடும் அட்டவணையில் பாடங்கள் மற்றும் தலைப்புகளின் பெயரைப் பட்டியலிடுங்கள், ஒவ்வொரு பாடத்தையும் முன்னுரிமை படி வரிசைப்படுத்துங்கள். தேர்வுக்கு முந்தைய நாட்களின் படிக்க வேண்டிய பாடங்களின் எண்ணிக்கையை பட்டியலிடவும் மற்றும் ஒவ்வொரு பாடத்திற்கும் நேரத்தை ஒதுக்கவும், ஒரு நாளைக்கு படிக்கும் நேரத்தை வடிவமைக்கவும், இடைவேளைகளை திட்டமிடவும்.

  MORE
  GALLERIES

 • 311

  தேர்வு எழுத தயாராகும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கோல்டன் ரூல்ஸ்..!

  2. படிக்கும் இடத்தை தேர்வு செய்யவும் - நீங்கள் தேர்வு செய்யும் இடமானது அமைதியான மற்றும் வசதியான சூழலில் இருந்தால் சிறந்த முறையில் படிக்கவும், கவனம் செலுத்தவும் முடியும். வீட்டின் அறையில் சிறந்த வெளிச்சம், சுத்தமான காற்று மற்றும் அமைதியாக இருக்கும் இடத்தைக் கண்டறியவும். குறைந்த கவனச்சிதறல் உள்ள இடங்கள் படிப்பிற்கு மிகவும் பொருத்தமான இடமாகும். கவனச்சிதறல்களைத் தவிர்க்க, முடிந்தவரை தேவையற்ற பொருட்களை அந்த அறையிலிருந்து அப்புறப்படுத்தவும். படிக்கும் போது மொபைல் போனை ஆஃப் செய்யவும் அல்லது ஃப்ளைட் மோடில் வைக்கவும்.

  MORE
  GALLERIES

 • 411

  தேர்வு எழுத தயாராகும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கோல்டன் ரூல்ஸ்..!

  3. வழக்கமான இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள்– மனித மூளைக்கு அவ்வப்போது இடைவேளை கொடுக்கப்படும்போது அது சிறப்பாகச் செயல்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே இடைவேளையின்றி நீண்ட நேரம் படிப்பதை விட, குறைந்த இடைவேளை எடுத்துக்கொண்டு படிப்பது மிகவும் நல்லது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நம் மனம் உறங்கும்போது அல்லது சுறுசுறுப்பாக இல்லாதபோது படிக்கும்படி நம்மை நாமே வற்புறுத்துவது மேலும் சோர்வடையச் செய்யும். எனவே, தவறாமல் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், சிறிது நேரம் நடந்து செல்லுங்கள், கண்களை மூடிக்கொள்ளுங்கள் அல்லது தூரமான விஷயங்களை சில நேரம் பார்த்துவிட்டு கண்களுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுங்கள். இந்த இடைவேளையில் செல்ஃபோன் , டிவியை தவிருங்கள்.

  MORE
  GALLERIES

 • 511

  தேர்வு எழுத தயாராகும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கோல்டன் ரூல்ஸ்..!

  4. ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுங்கள் - நல்ல உணவுப் பழக்கம் எப்போதும் சிறந்த ஆரோக்கியத்தையும், அதிக ஆற்றலையும் தருகிறது. ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும், அதற்குப் பதிலாக அளவுக்கு அதிகமான தூக்கம், பகல் தூக்கம், சோர்வு அல்லது நோய்களைத் தவிர்க்க புதிய மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்வதை அதிகரிக்கவும். உடலை சரியாக நீரேற்றமாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிக்கவும். பருப்புகள், தயிர் மற்றும் விதைகளை உட்கொள்வது சிறந்த செறிவு மற்றும் நினைவாற்றலைத் தக்கவைக்க உதவும்.

  MORE
  GALLERIES

 • 611

  தேர்வு எழுத தயாராகும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கோல்டன் ரூல்ஸ்..!

  5. முறையான தூக்க முறையை கடைப்பிடிக்கவும் - தினசரி வளர்சிதை மாற்ற சுழற்சி முறையாக நடந்தால் மட்டுமே ஆற்றலையும் வலிமையையும் பெற முடியும். அதற்கு தூக்கம் மிக மிக அவசியம். அப்போதுதான் மனித மனமும் உடலும் முழுமையாக ஓய்வெடுக்கின்றன. எனவே தினசரி இரவு 8 மணிநேரம் நல்ல தூக்கம் அவசியம் என சுகாதார நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. சிலர் இரவில் தாமதமாகப் படிப்பதை விரும்பலாம், சிலர் அதிகாலையில் படிக்கலாம், எனவே பகலில் எந்த நேரம் சிறந்தது என்பதைச் சரிபார்த்து, சரியான உறக்கத்தை ஒழுங்காகப் பராமரிக்கவும்.

  MORE
  GALLERIES

 • 711

  தேர்வு எழுத தயாராகும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கோல்டன் ரூல்ஸ்..!

  6. எப்போதாவது குழுக்களாக இணைந்து படிக்கவும் - எப்போதாவது குழுக்களாகப் படிப்பது, சொந்தமாகப் படிக்கும் போது தவறவிட்ட அதே தலைப்பு மற்றும் பாடத்தைப் பற்றிய கூடுதல் அறிவையும் யோசனைகளையும் பெற உதவும். ஒருவருக்கொருவர் கேள்விகளைக் கேட்பதன் மூலம் , சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதன் மூலம் அந்த பாடம் பற்றிய தெளிவான நுண்ணறிவு மற்றும் சிறந்த நினைவாற்றலை பெற முடியும்.

  MORE
  GALLERIES

 • 811

  தேர்வு எழுத தயாராகும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கோல்டன் ரூல்ஸ்..!

  7. முழுவதையும் படித்து, சுருக்கமான குறிப்புகளை உருவாக்கவும் - எந்தவொரு பாடத்தையும் முழுமையாகக் கற்க முழுமையான வாசிப்பு அவசியம். ஆசிரியர்கள் கொடுத்தது மற்றும் அதன் ஆதாரங்களில் இருந்து மற்ற தகவல்களைப் படித்து, சரிபார்க்கவும். படிக்கும் போது சுருக்கமான குறிப்புகளை உருவாக்குவது, நாம் எந்த அளவு படித்து புரிந்துகொண்டுள்ளோம் என்பதை அறிய ஒரு வாய்ப்பு. அதோடு கடைசி நேர ரிவைஸின் போது இந்த குறிப்புகளை பார்த்துக்கொள்ளவும் உதவியாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 911

  தேர்வு எழுத தயாராகும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கோல்டன் ரூல்ஸ்..!

  8. முந்தைய ஆண்டுகளின் தேர்வு வினாத்தாள்களையும் படிக்கவும் - பாடங்களைப் படித்து முடித்தவுடன், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களை நாம் படிக்க வேண்டும். இதன் மூலம் தேர்வுக்கு நாம் எவ்வளவு தயாராக இருக்கிறோம் என்பதை இது நமக்கு உணர்த்துவது மட்டுமல்லாமல், தேர்வுகளில் உள்ள வினாத்தாள்களின் தன்மை மற்றும் வகையை அறியவும் வாய்ப்பளிக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் மிகவும் பொருத்தமான பதில்களைக் கண்டறிவதற்கான நுட்பங்களைக் கண்டுபிடிப்பதற்கும் உதவியாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 1011

  தேர்வு எழுத தயாராகும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கோல்டன் ரூல்ஸ்..!

  9. மீண்டும் மறுபரிசீலனை செய்யுங்கள் - எந்தவொரு தேர்விலும் கலந்துகொள்ளும் எவருக்கும் திருத்தம் அவசியம். பரீட்சைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக இருந்தாலும் சரி அல்லது அதற்கு முந்தைய நாளாக இருந்தாலும் சரி, ஏற்கனவே படித்த தகவல்களை இன்னும் விரிவாக உள்வாங்க உதவும்.

  MORE
  GALLERIES

 • 1111

  தேர்வு எழுத தயாராகும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கோல்டன் ரூல்ஸ்..!

  10. தேர்வு நாளைத் திட்டமிடுங்கள் - தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாகத் திட்டமிடுவது, தேர்வு நாளில் எல்லாவற்றையும் எளிதாக்கும். பரீட்சையின் அனைத்து தகவல்களையும் தேவைகளையும் முன்கூட்டியே தயார் செய்வது கட்டாயமாகும். பரீட்சை நாளுக்கு முன் நன்றாக தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பரீட்சை நாளில், அதிகாலையில் எழுந்து, நிறைய தண்ணீர் குடித்து, தூக்கம் வராமல் இருக்க லேசான சத்தான உணவுகளை உண்ணுங்கள். தேவையான அனைத்து எழுதுபொருட்களையும் வரிசைப்படுத்தி எடுத்துச் செல்லுங்கள்,தேர்வுக்கு தாமதமாக செல்வதை தவிர்க்க அரை மணி நேரத்திற்கு முன்பே வீட்டிலிருந்த் கிளம்பிவிடுங்கள். அதிலும் உங்களுடன் தேர்வு எழுதப் போகும் நண்பர்களுடன் சென்றால் இன்னும் பாசிடிவாக இருக்கும்.

  MORE
  GALLERIES