அன்னையர் தின வரும் மே மாதம் 8ம் தேதி கொண்டாட உள்ளது. அன்னையர் தினத்தில் உங்கள் தாயை சிறப்பாக உணர எண்ணற்ற வழிகள் உள்ளன. அதில் நமது அன்னையை சமையல் அறைக்கு செல்ல விடாமல் ஒரு நாளாவது சிறப்பாக உணர வைக்கலாம். இதனால் அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்.அவருக்கு பதிலாக நாமே நமது அம்மாவிற்கு விதவிதமாக சமைத்து கொடுத்து அசத்தலாம். உங்கள் அம்மாவை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உணர வைக்க எளிதான சமையல் வகைகள் குறித்து இங்கு காண்போம்.,
எளிதான காலை உணவுகள்: உங்கள் அம்மாவிற்கு பிடித்த உணவுகளை தயார் செய்து அவருக்கு கொடுத்து அசத்துங்கள். அவருக்கு பிடித்தமான உணவுகளுடன் படுக்கைக்கு சென்று அவரை எழுப்பி ஆச்சரியப்படுத்துங்கள். உங்கள் அம்மா அதனை பார்த்து மகிழ்ச்சியடைவார். நீங்கள் வீட்டில் எளிதாக செய்யக்கூடிய சுவையான காலை உணவுகளான ஆம்லெட், பான்கேக், உப்மா, சாண்ட்விச், பொங்கல், கேசரி போன்ற சில எளிய மற்றும் சுலபமாக செய்யக்கூடிய சமையல் குறிப்புகளை நீங்கள் முயற்சி செய்யலாம்.
எளிதான மதிய உணவு வகைகள்: உங்கள் தாயின் முகத்தில் புன்னகையை தக்க வைக்க விரும்பினால் மதிய உணவையும் நீங்களே தயார் செய்து அவருக்கு கொடுங்கள். வெஜ் பிரியாணி, புலாவ் , அசைவ உணவுகள், தக்காளி சாதம் என இவற்றில் ஏதேனும் ஒன்றை செய்து கொடுத்து அசத்துங்கள். அல்லது அவருக்கு பிடித்த உணவுகள் என்னென்ன என்பதை அறிந்து அதனை செய்து கொடுத்து மகிழ்ச்சியாக்குங்கள்.
எளிதான ஸ்நாக்ஸ் ரெசிபிகள்: மாலையில் குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து ஸ்நாக்ஸ் ரெசிபிகள் சாப்பிடுங்கள். பேல் பூரி, தேனீர், பஜ்ஜி , வடை,சமோசா இனிப்புகள், உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ், சிறுதானிய ஸ்நாக்ஸ் போன்றவற்றை செய்து கொடுத்து அசத்துங்கள். தேநீர், காபிக்கு பதிலாக பாயசம், பாசுந்தி, மில்க்ஷேக்ஸ், ஜூஸ்கள் போன்றவற்றை செய்து கொடுத்து அசத்துங்கள்.
எளிதான இரவு உணவுகள்: அன்னையர் தினத்தில் இரவு உணவின் போது அறுசுவை உணவு செய்து அசத்துங்கள். சிக்கன் ப்ரைடு ரைஸ் , பாஸ்தா மற்றும் நூடுல்ஸ் போன்ற எளிதாக செய்ய கூடிய உணவுகளை செய்து அம்மாவிற்கு கொடுங்கள். இந்த எளிய இரவு உணவுகள் அனைத்தும் 20 நிமிடங்களுக்குள் செய்து விடலாம். மசாலா தோசை, சப்பாத்தி , கொத்து பரோட்டா போன்ற சுவையான உணவுகளை செய்தும் கொடுக்கலாம். உங்கள் தாயை மகிழ்விப்பது உங்களுக்கும் மகிழ்ச்சியை தரும். எனவே, 2022 அன்னையர் தினத்தை உங்கள் அம்மா எப்படி விரும்புகிறாரோ அப்படியே கொண்டாடுங்கள்.