அடுத்த நாளுக்காக இரவிலேயே தயாராவது : வெற்றிகரமான பெண்கள் அடுத்த நாளுக்காக முன்கூட்டியே தயாராக இருக்கவே விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் ஒரு திட்டத்தை வைத்து அதை சரியாக பின்பற்றுகிறார்கள். அவர்களின் இந்த பழக்கம் மற்றவர்களை விட அவர்களை முன்னிலைப்படுத்துகிறது. ஏனென்றால் வழக்கமாக எல்லோரும் இரவில் ஓய்வெடுப்பதில் கவனம் செலுத்தும் போது, வெற்றிகரமான பெண்கள் அடுத்த நாளுக்கான திட்டத்தை உருவாக்க இரவில் சிறிது நேரத்தை ஒதுக்குகிறார்கள்.
படுக்கையை சரியாக வைத்து கொள்வது : படுக்கை மற்றும் படுக்கையறையை சுத்தமாக மாறும் ஒழுங்காக பேணுவதில் வெற்றிகரமான பெண்கள் மிகவும் கவனம் செலுத்துகின்றனர். ஏனென்றால் வெற்றிகரமான பெண்கள் விகாரமான மற்றும் பொருட்கள் கலைந்து கிடக்கும் படுக்கைகளை வெறுக்கிறார்கள். எனவே அவர்கள் எவ்வளவு டயர்டாக இருந்தாலும், நிம்மதியாக தூங்க தங்கள் படுக்கைகளை ஒழுங்காக வைக்கிறார்கள். மறுநாள் காலை தூங்கி எழுந்த பிறகும் மீண்டும் படுக்கையை சரி செய்கிறார்கள்.செய்கிறார்கள்.
திட்டமிட 5 நிமிடங்கள் : வெற்றிகரமான பெண்கள் தங்கள் காலை பொழுதில் 5 நிமிடங்களை தங்கள் முழு நாளையும் திட்டமிட ஒதுக்குகிறார்கள். ஒரு நாளை துவங்கும் முன்பே முன்கூட்டியே திட்டமிடுவது சிக்கல்களை தவிர்க்க உதவுகிறது என்பதால் தினமும் காலையில் 5 நிமிடங்களாவது பிளானிங்கிற்காக ஒதுக்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.