முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மிசோரம்.. ஏன் தெரியுமா..?

இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மிசோரம்.. ஏன் தெரியுமா..?

மகிழ்ச்சி குறியீடு வேலை பிரச்சினைகள், குடும்ப உறவுகள், சமூகப் பிரச்சினைகள், மகிழ்ச்சி, மதம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது

  • 17

    இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மிசோரம்.. ஏன் தெரியுமா..?

    குருகிராமில் உள்ள மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிட்யூட்டில் உள்ள பேராசிரியரான ராஜேஷ் கே பில்லானியா நடத்திய ஆய்வில் இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலமாக மிசோரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை மிகவும் மகிழ்ச்சியாக மாற்றுவதற்கு உந்து காரணியாக இருந்த பல காரணிகளையும் அவர் பகிர்ந்து கொண்டார். அவற்றை தான் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.

    MORE
    GALLERIES

  • 27

    இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மிசோரம்.. ஏன் தெரியுமா..?

    மகிழ்ச்சிக் குறியீடு ஆறு அளவுகோள்களை அடிப்படையாகக் கொண்டது. இதில் வேலை தொடர்பான பிரச்சினைகள், குடும்ப உறவுகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் பரோபகாரம், மகிழ்ச்சி, மதம் மற்றும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் COVID-19 இன் விளைவு ஆகியவை அடங்கும். இந்த 6 அளவுகளிலும் மிசோரம் தான் முன்னிலையில் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 37

    இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மிசோரம்.. ஏன் தெரியுமா..?

    எழுத்தறிவு விகிதம்: மாநிலம் 100% கல்வியறிவு விகிதத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது. மிசோரம், சவாலான சூழ்நிலையிலும் மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்கிறது. மேலும் இந்த மாநிலம் இந்தியாவில் இரண்டாவது 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாநிலமாகும். முதல் மாநிலம் கேரளா.

    MORE
    GALLERIES

  • 47

    இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மிசோரம்.. ஏன் தெரியுமா..?

    ஒரு காலத்தில் மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய மற்றும் பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதிகளாக இருந்த மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டம் இப்போது வளர்ச்சியின் முன்மாதிரியாக மாறியுள்ளது. அஸ்ஸாமில் இருந்து வரும் காய்கறிகள் மற்றும் பழங்கள் அடிக்கடி அழுகி உள்ளூர் மக்களை சென்றடைவதை அறிந்த ஐஏஎஸ் அதிகாரி ஷஷாங்கா ஆலா இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் பள்ளி மாணவர்கள் 'சத்துணவுத் தோட்டத்தை வளர்த்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 57

    இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மிசோரம்.. ஏன் தெரியுமா..?

    சமூக அழுத்தம் : ஜாதியற்ற சமூகத்தில் வாழும் மிசோரம் இளைஞர்களின் மகிழ்ச்சிக் குறியீட்டில் முன்னிலைக்கு  முக்கிய பங்கு வகிக்கிறது.  கல்வி, பணம்,  வெற்றி மற்றும் வேறு எதற்கும் இந்த பிராந்தியத்தில் தங்கள் குழந்தைகள் மீது  பெற்றோரின் அழுத்தம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. வாழ்க்கையை உணர்ந்து வாழ கற்றுக்கொடுக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 67

    இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மிசோரம்.. ஏன் தெரியுமா..?

    இயற்கை அழகு: இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அழகிய ஏரிகள், வலிமைமிக்க மலைகள், பசுமை பொங்கும் பள்ளத்தாக்குகள், அழகிய பசுமை மாற காடுகள், பாரம்பரியம் பேணும் கிராமங்கள் என்று இயற்கையின் தொட்டிலாக மிசோரம் இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 77

    இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மிசோரம்.. ஏன் தெரியுமா..?

    பாலின சமத்துவம் : மிசோஸ் நாடு என்றும் அழைக்கப்படும் மிசோ சமூகத்தில் உள்ள இளைஞர்கள், அவர்களின் பாலினத்தைப் பொருட்படுத்தாமல், சிறு வயதிலிருந்தே நிதி சுதந்திரத்தை அடைய முனைகிறார்கள், மேலும் அவர்கள் அனைத்து பணிகளையும் சமமாக கருதுகின்றனர். மாநிலத்தில் பாலின பாகுபாடு மிகக் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக மகிழ்ச்சிக் குறியீட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

    MORE
    GALLERIES