ஏனென்றால் நமது உடலில் கூடுதலாக ஒரு பொருளைப் பொருத்தியிருக்கிறோம் என்ற உணர்வை இது ஏற்படுத்தாது. மிகச் சரியாகப் பொருத்தும் பட்சத்தில் இலகுவான உணர்வைத் தரும். அரிப்பு போன்ற தொந்தரவுகள் எதுவும் ஏற்படாது. இது அளவில் மிகச் சிறியது என்பதால் எந்த நேரத்திலும், மிக இலகுவாக உடன் எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும்.
உங்கள் பெண்ணுறுப்பு வறட்சியாக இருக்கும்பட்சத்தில் டேம்பான்ஸ் பொருத்துவதற்குச் சிரமமாக இருக்கும். அத்தகைய சமயங்களில் லூப்ரிகண்ட் பயன்படுத்தி இதனைப் பொருத்தலாம். ஆனால் எந்த காரணத்தைக் கொண்டு பெட்ரோலியம் ஜெல்லி போன்ற பொருட்களைப் பெண்ணுறுப்புக்கான லூப்ரிகண்ட்டாக பயன்படுத்த வேண்டாம். அது பெண்ணுறுப்பில் கிருமித் தொற்றுகளை ஏற்படுத்தும்.