முகப்பு » புகைப்பட செய்தி » சருமத்திற்கு மட்டுமல்ல உடலுக்கும் அளவற்ற நன்மைகளை தரும் வீகன் கொலாஜன் சப்ளிமெண்ட்ஸ்!

சருமத்திற்கு மட்டுமல்ல உடலுக்கும் அளவற்ற நன்மைகளை தரும் வீகன் கொலாஜன் சப்ளிமெண்ட்ஸ்!

சைவ சித்தாந்தம் என்பது பல தனிநபர்களின் வாழ்க்கை முறையாக இருந்து வருகிறது. எனவே விலங்குப் பொருட்களின் உணவு வகைகளை மட்டும் முதன்மைபடுத்துவது அவர்களின் நம்பிக்கையை குறைத்து மதிப்பிடுவது போலாகிறது. எனவே தான் அவர்களுக்கான தயாரிப்பை மேலும் தரமாக தரும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 • 17

  சருமத்திற்கு மட்டுமல்ல உடலுக்கும் அளவற்ற நன்மைகளை தரும் வீகன் கொலாஜன் சப்ளிமெண்ட்ஸ்!

  கொலாஜன் (Collagen)என்பது உடலில் காணப்படும் மிகவும் பொதுவான புரதம் ஆகும். நமது சருமத்தை மிருதுவாக வைத்திருக்க உதவுகிறது. இது தசைநாண்கள், கொழுப்பு மற்றும் தசைநார்கள் உட்பட உடலின் பல இடங்களில் உள்ளது. இது நம் உடலின் பீஸ்கள் ஒன்றுடன் ஒன்று நன்றாக பொருந்த உதவுகிறது. தவிர நமது எலும்பு கட்டமைப்பின் வலிமைக்கு கொலாஜன் முக்கியமானது. கொலாஜன் அளவுகள் ஆரோக்கியமாக இருக்கும் போது, கொலாஜனை கொண்டிருக்கும் செல்கள் வலுவான மற்றும் இளமைத் தோற்றத்தை பெறுகின்றன. ஆயினும் வயது மற்றும் பிற காரணிகள் உடலில் இருக்கும் கொலாஜன் அளவை குறைப்பதால், தோல் அதன் நெகிழ்ச்சி தன்மையை இழக்கிறது, மேலும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் உருவாகின்றன.

  MORE
  GALLERIES

 • 27

  சருமத்திற்கு மட்டுமல்ல உடலுக்கும் அளவற்ற நன்மைகளை தரும் வீகன் கொலாஜன் சப்ளிமெண்ட்ஸ்!

  வயதாகும் போது, ​​உங்கள் உடல் இயற்கையாகவே கொலாஜன் உற்பத்தியைக் குறைக்கிறது. வயதுக்கு ஏற்ப இயற்கையான கொலாஜன் உற்பத்தி குறைவதால் செல்கள் பலவீனமடைய தொடங்குகின்றன. இதன் விளைவாக மூட்டுகளைச் சுற்றியுள்ள திசுக்கள் விறைப்பு அடையலாம். தசைநார்கள் நெகிழ்ச்சித்தன்மையை இழக்கின்றன, மூட்டுகள் விறைப்படையலாம் மற்றும் முடி ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படலாம்.

  MORE
  GALLERIES

 • 37

  சருமத்திற்கு மட்டுமல்ல உடலுக்கும் அளவற்ற நன்மைகளை தரும் வீகன் கொலாஜன் சப்ளிமெண்ட்ஸ்!

  இது போன்ற சந்தர்ப்பங்களில், பல அணுகுமுறைகள் கொலாஜனை அதிகரிக்க உதவும். எனினும் கொலாஜன் சப்ளிமெண்ட்ஸ்கள் கொலாஜனை அதிகரிக்க சிறந்த, மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். பொதுவாக புழக்கத்தில் உள்ள பெரும்பாலான கொலாஜன் சப்ளிமெண்ட்ஸ்கள் விலங்கு பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இது பவுடர், மாத்திரைகள், கிரீம்கள் மற்றும் ஊசிகள் உட்பட பல வடிவங்களில் விற்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 47

  சருமத்திற்கு மட்டுமல்ல உடலுக்கும் அளவற்ற நன்மைகளை தரும் வீகன் கொலாஜன் சப்ளிமெண்ட்ஸ்!

  ஆனால் பலர் விலங்கு அடிப்படையிலான தயாரிப்புகளை குறைக்க அல்லது முற்றிலும் நிறுத்த முடிவு செய்துள்ளதால் தற்போது சைவ கொலாஜன் (vegan collagen) மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே இப்போது ஆராய்ச்சியாளர்கள் சைவ அடிப்படையிலான கொலாஜனுக்கான தரமான கூறுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக ஒரு உள்ளார்ந்த விலங்கு கலவை புரதத்தை சைவமாக்க, ஈஸ்ட் மற்றும் பாக்டீரியாவை மாற்றியமைப்பதற்கான வழிகளில் விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 57

  சருமத்திற்கு மட்டுமல்ல உடலுக்கும் அளவற்ற நன்மைகளை தரும் வீகன் கொலாஜன் சப்ளிமெண்ட்ஸ்!

  சைவ சித்தாந்தம் என்பது பல தனிநபர்களின் வாழ்க்கை முறையாக இருந்து வருகிறது. எனவே விலங்குப் பொருட்களின் உணவு வகைகளை மட்டும் முதன்மைபடுத்துவது அவர்களின் நம்பிக்கையை குறைத்து மதிப்பிடுவது போலாகிறது. எனவே தான் அவர்களுக்கான தயாரிப்பை மேலும் தரமாக தரும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

  MORE
  GALLERIES

 • 67

  சருமத்திற்கு மட்டுமல்ல உடலுக்கும் அளவற்ற நன்மைகளை தரும் வீகன் கொலாஜன் சப்ளிமெண்ட்ஸ்!

  ஒரு vegan collagen என்பது சைவ உணவு உண்பவர்களுக்கு மட்டுமல்ல, அசைவ உணவு உண்பவர்களுக்கும் ஒரு திருப்புமுனையாகும். vegan collagen-ன் வெவ்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களிலிருந்து இருதரப்பினரும் நலன் பலன்களை பெறலாம் என்கிறார்கள் நிபுணர்கள். பொதுவாக வீகன் கொலாஜன் ஆரோக்கியமான தாவர அடிப்படையிலான பொருட்களிலிருந்து உருவாக்கப்படுகிறது. எனவே இதன் நன்மைகள் கொலாஜன் உற்பத்தியைத் தாண்டி உடலுக்கு பல நன்மைகளை வழங்குவதாக அறியப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 77

  சருமத்திற்கு மட்டுமல்ல உடலுக்கும் அளவற்ற நன்மைகளை தரும் வீகன் கொலாஜன் சப்ளிமெண்ட்ஸ்!

  நன்மைகள் : மூட்டுகள், தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தவும், ஆற்றலை அதிகரிக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, பருவகால ஒவ்வாமை அறிகுறிகளை குறைக்க, நல்ல தரமான தூக்கத்தை வழங்க, பதட்டத்தை குறைக்கவும், வயதான அறிகுறிகளை மெதுவாக்க என இன்னும் எண்ணற்ற நன்மைகளை வீகன் கொலாஜன் வழங்குகிறது. எனவே இயற்கையான கொலாஜனை மிகவும் திறம்பட உற்பத்தி செய்ய உதவி vegan collagen ஒரு சப்ளிமெண்டாக மட்டுமில்லாமல், உடலின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுக்கு முன்னுரிமை அளிப்பது என ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

  MORE
  GALLERIES